Header Ads



கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் நாசகார செயலாம்

(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பு கிரான்டபாஸ் பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற வன் செயல் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் ஒரு நாசகார செயலாகும் என நீர்பாசான வடியகல் நிர்மானத்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

2013 08 11 கண்டி கட்டுகஸ்தோட்டை பௌத்த மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இவ்வாரும் தெரிவித்தார்.

யுத்தத்தில் பீடித்திருந்த நாட்டை அதிலிருந்து மீட்டிய அரசாங்கம் நாட்டில் அனைத்து இன மக்களையும் ஒற்றுமையாக வாழ செய்துள்ளது. இவ் ஒற்றுமையை சீர் குளைத்து சர்வதேச மட்டத்தில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடடிலும் இயங்கும் சில சக்திகள் முயற்சிப்பது அன்மை காலத்தில் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கொழும்பு கிரான்டபாஸ் பிரதேசத்தில் இடம் பெற்ற துரதிஸ்டவசமான செயலுக்கும் பின்னனியில் அவ்வாரான நாசகார சக்திகள் இருந்திருக்கலாம்.  தேர்தல் ஒன்று நடை பெரும் காலத்தில் இவ்வாரான செயல்கள் இடம் பெருமாயின் அது அரசுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்று அவ்வாரான சக்திகள் சிந்திக்கலாம். அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் எல்.ரீ.ரீ ஈ இயக்கம் சர்வதேச மட்டத்தில் இயங்கி வருவதுடன் தேசிய மட்டத்திலும் சில் சக்திகள் இயங்கி வருகின்றன. அவைகளின் செயலாகவே இச் சம்பவத்தை அராங்கம் கருதுகிறது என்றம் அமைசச்ர் இங்கு தெரிவித்தார்.

இவ்வாரான சமபவங்கள் நாடடில் இடம் பெருமானால் பல தியாகங்கள் செய்து நாம் ஏற்படுத்திய சமாதானம் அரத்தமற்றதாகிவிடும் என்றும் சிங்கள, தமிழ் , முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களும் இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இங்கு தெரிவித்தார்.

4 comments:

  1. சரி! ரொம்பச் சரி!! உள் நாட்டு சதிகார கும்பலின் வேலைதான் மினிஸ்டர்.

    ReplyDelete
  2. Woooow. Good Joke. So budhist people also supporting to LTTE? wat a good joke from Minister Nimal siripala de silva. This minister dont know LTTE members hurting sinhala language. there never talk in sinhala. Please tell me one more joke. hehehehehehehehehehehe

    ReplyDelete
  3. ஒங்களப்போல தலைக்குள் பீயைவைத்துக்கொண்டிருக்கும் தலைமைத்துவத்தில் இருக்கும் கயவர்கள் இருக்கும்போது பெளத்த தேரர்கள் என்ற பெயரில் பயங்கரவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றாகள். இவர்களுக்கு அழிவு ஆரம்பித்துவிட்டது.

    ReplyDelete
  4. Appadiyaanaal ean KOOTTAM pottu PALLIYAI mooda mudiweduththeerksl? Weli naatuch cahtiya or arasankaththin chathiya?

    ReplyDelete

Powered by Blogger.