குர்பானை நிறைவேற்ற அனுமதி தாருங்கள் - பிரதேச சபையில் வேண்டுகோள்
(மொஹொமட் ஆஸிக்)
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை பிரிவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிர்வரும் ஹஜ் காலத்தில் புனித உழ்ஹிய்யாவை நிறைவேற்ற அனுமதி வழங்குமாரு ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கமருஸ்ஸமான் இன்று 2013 08 22 இடம் பெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்குற் பட்ட பிரதேசத்தில் மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்று பிரதேச சபையில் நிரைவேற்றப்பட்டுள்ளதால் கடந்த வருடம் முஸ்லிம்களுக்கு உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடிய வில்லை.
எனவே இவ்வருடம் இத் தவறை நிவர்த்தி செய்து உழ்ஹிய்யாவுக்கு அனுமதி தருமாரும் அவர் கேட்டுள்ளார்.
இன்று 2013 08 22 இடம்பெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் இப் பிரேரனையை முன் வைக்கும் போது அதன் தலைவர் ஆனந்த ஜயவிலால் சபையில் இருக்காததால் அடுத்த மாதாந்த கூட்டத்தில் இது சம்பந்தமாக ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் உப தலைவர் குசும் கருநாரத்ன தெரிவித்தார்.
Post a Comment