Header Ads



புனித இஸ்லாத்தை விமர்சித்தவர் தேர்தலில் இருந்து விலகினார்

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமை ஒரு நாடு என்று தொலைக்காட்சி பேட்டியில் தவறாகக் கூறியதற்காக பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், குவின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் "ஒன் நேஷன்' கட்சி சார்பில் வேட்பாளராக ஸ்டெஃபானி பானிஸ்டர் (27) அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு, ஒளிபரப்பியது. அதில், இஸ்லாம் மதத்தை ஒரு நாடு என்று அவர் தவறாகக் குறிப்பிட்டார். ""இஸ்லாம் ஒரு நாடு என்ற முறையில் அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்களின் சட்டங்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கத்தக்கவை அல்ல'' என்று பேட்டியில் அவர் கூறினார்.

அதேபோல், தடை செய்யப்பட்டது என்ற பொருளைத் தரக்கூடிய "ஹராம்' என்ற வார்த்தையை அவர் குரான் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருந்தார். மேலும், யூதர்கள் இயேசுவை வழிபட்டதாகவும் கூறியிருந்தார். இதற்காக, சமூக வலைதளங்களில் பானிஸ்டரைப் பலரும் கிண்டல் செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட ஒன் நேஷன் கட்சியின் தலைவர் ஜிம் சாவேஜ், ""பானிஸ்டருக்கு எங்கள் கட்சி செயற்குழுவின் ஆதரவு எப்போதும் உண்டு'' என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.