ஒருவயது குழந்தையையும் விட்டுவைக்காத காமுகன்
ஒரு வயதும் இரு மாதங்களைக் கொண்ட பச்சிளம் பெண் குழந்தை பாலியல் ரீதியில் உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெலிமடை பொரகஸ் என்ற இடத்தில் இத் துக்ககரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து வெலிமடைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து சந்தேக நபரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேக நபர் கொலையுண்ட குழந்தையின் தாயாரது ஆசைநாயகனென்றும் தெரிய வந்துள்ளது.
குழந்தையின் சடலம் வைத்திய பரிசோதனைக்கென பசளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து அவரிடமிருந்து அறிக்கையொன்றைப் பெற்று தம்மிடம் சமர்ப்பிக்கும்படி வெலிமடை மஜிஸ்திரேட் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி ஏ.டி.எம் விஜயவீரவின் அறிக்கைப் பிரகாரம் குழந்தை பாலியல் ரீதியில் சித்திரவதைக்குப்பட்டு கொலை செய்யப்பட்டமை ஊர்ஜிதமாகியுள்ளது.
மஜிஸ்ரேட் நீதிபதியின் பணிப்பிற்கமைய சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்ட வேளையில் அந்நபர் கிருமி நாசினி அருந்திய நிலையில் வெலிமடை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
அந்நபர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய ஆட்சியாளர்களின் தவறு.
ReplyDelete