'தேசிய ஷூரா சபை' சுயாதீனமான சிவில் தலைமைத்துவமே..!
(அஷ்ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
எனது தனிப்பட்ட சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்துடனான, அறிஞர் யூஸுப் அல்-கரழாவி அவர்களுடனான உறவு, அல்லது எனது கடந்தகால அரசியல், அல்லது உறவுமுறை அரசியல் ஆகியவற்றை மேற்கோள்காட்டி உயரிய இலக்குகளுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ள தேசிய ஷூரா சபை பொதுபல சேனாவினாலும் உள்நாட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீது ஜமாஅத்து எனும் அமைப்பினாலும் காராசாரமாக விமர்சிக்கப்பட்டதால் இடைக்கால ஷூரா சபை அமையப் பெற்றது முதல் நான் தனிப்பட்ட முறையில் உயரிய பணிக்கு என்னால் ஏதும் பாதிப்பு மற்றும் தர்மசங்கடங்கள் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் முழுமையாக ஒதுங்கியுள்ளேன்.
ஷூரா சபை அமையப் பெற்றவுடன் அதில் எவ்வித பதவிகளிலும் பொறுப்புக்களிலும் நான் இருக்கப் போவதில்லை என்பதனை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தமையை நீங்கள் அறிவீர்கள்.
முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு அரசியல் சன்மார்க்க மற்றும் சிவில் தலைமைத்துவங்களை வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான இலக்குகளில் ஒன்று படுத்தி முஸ்லிம்களின் தேசிய வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு காத்திரமாக முகம் கொடுக்கவும்,
நிபுணத்துவக் குழுக்களின் உதவியோடு சமூக வாழ்வின் பல்வேறு துறைகளிலும் நீண்ட இடைக்கால குறுகியகால செயற்திட்டங்களை வகுத்து அமுல் படுத்துவதற்கும்,
எவ்வித அரசியல் இயக்க சிந்தனை மற்றும் அணுகுமுறை முகாம்களினதும் செல்வாக்கிற்கும் உற்படாத சுயாதீனமான, சகலரையும் பிரதிநிதித் துவப் படுத்துகின்ற அழகிய சிவில் சமூக தலைமைத் தவக் கட்டமைப்பாகவே தேசிய ஷூரா சபை உருவாக்கப் பட்டுள்ளது.
தற்பொழுது சமூகத்தில் உள்ள பிரதான இஸ்லாமிய அமைப்புக்கள் அடையாளம் காணப்பட்ட சமூக ஆர்வலர்கள் புத்திஜீவிகள் உலமாக்களிக் கொண்ட இடைக்கால ஷூரா சபை அமையப் பெற்று மிக்கவும்காத்திரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
தேசிய ஷூரா சபை உருவாக்கத்தில் பங்கு கொண்ட சிலர் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் குறிப்பாக வடக்கில் ஈடுபடுவதற்காக தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முடிவுகள் அவர்களது சொந்த முடிவுகளாகும், அவர்கள் இன்று ஷூரா சபை நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இடைக்கால ஷூரா சபை முஸ்லிம்ம்மற்றும் தேசிய அரசியல் தலைமைகளுடனான செயற்பாட்டு ஒழுங்குமுறைகளை பிரகடனப்படுத்தும். கண்டிப்பாக தேசிய ஷூரா சபை எந்தவொரு அரசியல் தேர்தல் செயற்பாடுகளிலும் ஈடுபடமாட்டது.
உண்மையில், அதன் ஸ்தாபக குழுவில் இருந்த முன்னால் உறுப்பினர் என்ற வகையிலும், வகுக்கப்பட்ட கொள்கைகள் குறித்த தெளிவு உள்ளவன் என்ற வகையிலும் மேற்படி கருத்துக்களை தனிப்பட்ட முறையில் எனது ஊடக நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை (தேசிய ஷூரா கவுன்ஸில்) மீது அரசியல் அல்லது இயக்க கொள்கை சாயங்கள் பூச முற்படுவோரை அறிவுறுத்துமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவை உங்களுடையது அதனை எல்லோருமாக பாது காத்துக் கொள்ளுங்கள், அது மேற்கொள்ளும் உயரிய பணிகளில் ஒத்துழையுங்கள் விமர்சிப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
Allah ungalukku barakkattuch cheiwanaha awane ungal 'ikhlasukkum' kooli taruwan
ReplyDeletesri lanka muslim peravaiya thesiya soora sabaiya? ethu sari? eppothu peyar maatram seyyappattathu?
ReplyDelete