பேராசிரியர் அப்துல்லாஹ்க்கு (பெரியார்தாசன்) ஜனாஸா தொழுகை
பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் ஜனாஸா தொழுகை 20ம் தேதி காலை 9.00 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மக்கா பள்ளியில் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இத்தொழுகையை மக்கா பள்ளியின் தலைமை இமாம் மவ்லவி ஷம்சுத்தீன் காசிமி அவர்கள் வழி நடத்தினார்.
இதில் சமூகப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
ஜனாஸா தொழுகைக்குப் பின்னர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருமாவளவன் உட்பட பல தலைவர்கள் இரங்கல் உரையாற்றினர். Tho
Post a Comment