Header Ads



சிரியா மீதான தாக்குதலை எதிர்க்கிறது ஈரான்

ரசாயன குண்டு வீச்சு விவகாரத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சிரியாவில் அதிபர் ஆசாத்தை எதிர்த்துப் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த 21-ந் தேதி ரசாயன குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதில் 1300 பேர் பலியாகினர் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சிரியாவோ இதை மறுத்திருந்தது. மேலும் ரசாயன குண்டுகள் வீசப்பட்ட இடத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் ஆய்வும் செய்தனர். இதனிடையே ரசாயன குண்டுகள் வீசிய சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு ்ரான் எதிர்ப்பு தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கெனவே சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Yes, Iran wants more sunni muslims to be killed in every possible way... that is why it supports Bassar al Assad, chemical attack and still it wanted to protect the killer King.

    ReplyDelete

Powered by Blogger.