Header Ads



அமெரிக்காவில் இஸ்லாமியரான இராணுவ மேஜருக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதி ராணுவ மேஜர் நிடால் ஹசன் (42) என்பவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். அதில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் இறந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இதையொட்டி ஹசன் கைது செய்யப்பட்டு கன்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை 13 அதிகாரிகளை நீதிபதியாக கொண்ட ராணுவ கோர்ட்டு விசாரித்து நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இஸ்லாமியரான அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

அமெரிக்க ராணுவ கோர்ட்டு சுமார் 52 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் மரண தண்டனை விதித்துள்ளது என்பதும், இத்தண்டனை பெறும் 6-வது நபர் ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.