நவநீதம் பிள்ளையின் வருகையை முஸ்லிம் சமூகம் பயன்படுத்துமா..?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புலிகளினால் கடந்த காலங்களிலும், பௌத்தசிங்கள இனவாதிகளினாலும், மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகளும் முஸ்லிம்களுக்கான உரிமை மறுப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் குறிப்பாக தற்போது முஸ்லிம்களின் மதத் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றியும் நவநீதம் பிள்ளையிடம் உரிய ஆதாரங்களுடன் முஸ்லிம் தரப்பு தமது பக்க வாதங்களை முன்வைக்க வேண்டுமென முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.
பௌத்தசிங்கள மக்களுக்கு சாதகமான இந்த அரசாங்கத்தையும், பௌத்தபிக்குகளின் இனவாத செயற்பாட்டையும் சர்வதேச அமைப்புக்களின் ஆதரவுடனே ஓரளவு நிறுத்தமுடியும். எனவே நவநீதம் பிள்ளையிடம் முறையிடுவதன் மூலமும், அதை அவர் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்துவதன் மூலமும் இலங்கை முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையும்.
எனவே நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை இலங்கை முஸ்லிம்கள் மிகவும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Who is going to bell the cat,but definetely not our muslim politicians aligned with the government.
ReplyDeleteReally good we must use this opportunity and we should let to know the international community otherwise this government will squeeze the Muslims community in future
ReplyDeleteThe Muslim politicization must think deep and use this opportunity well to emerge our problems to the International community and to take the message to the chambers of UN.
ReplyDeleteயார் பூனைக்கு மணி கட்டுவது என்பதற்கு அப்பால், எங்கே நம்ம அசாத் மாத்தையா?
ReplyDeleteஐநா சபைக்கே கடிதம் அனுப்பினேன் என்று பொய் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றியவர், தற்போது ஐநாவே காலடியில் வந்திருக்கும் போது, இந்த அசாத் மாத்தையா முந்தியடிக்காமல் அரசியல் பிழைப்பிலே பிசி போல?
No.. No... But I heard that someone called Mubarak Moulavi is going to do something with Navaneetham Pillai ???
ReplyDelete