Header Ads



துப்பாக்கி தோட்டா, பேனா மூடியானது..!

(VI) ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மறைத்து வைத்திருந்த பொருளொன்று தொடர்பில் நேற்று சபைக்குள் சந்தேகமும் அச்சமும் வெளியிட்ட ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் அது துப்பாக்கி ரவை என்றும் எனவே, அவர் வேறு ஆயுதங்களும் வைத்திருக்கலாம் என்பதால் அவரை உடனடியாக கைதுசெய்யுமாறும் சபையில் ஆவேசமடைந்தார்.

இதனால் சபைக்குள் பரபரப்பு ஏற்பட்டதுடன் கூச்சல்களும் எழுந்தன. எனினும் அஜித் மான்னப்பெரும எம்.பி.யை விசாரணைக்குட்படுத்திய பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருளானது பேனாமூடியென அறிவித்திருப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று மாலை அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீது அஜித் மான்னப்பெரும எம்.பி.உரையாற்றிக் கொண்டிருந்தபோது அஸ்வர் எம்.பி. குறுக்கிட்டு ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைக் கிளப்பினார்.

இதனையடுத்து, அஜித் மான்னப்பெரும எம்.பி., தடை செய்யப்பட்ட பொருளான துப்பாக்கிரவையை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார் என்றும் அவர் வேறு ஆயுதங்களையும் வைத்திருக்கலாம் என்பதால் அவரை உடனடியாக கைதுசெய்வதற்கு உத்தரவிடுமாறும் அஸ்வர் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஆளும்கட்சி எம்.பி.யான ஸ்ரீயானி விஜய விக்கிரம செய்வதறியாது தடுமாறியதுடன் ஆளும்கட்சியினால் கேட்டுக்கொண்டதன்படி விசாரணை நடத்தப்படும் என்றும் அதன் முடிவு விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதேநேரம் சடுதியாக சபைக்குள் வந்த பிரதி சபாநாயகரிடமும் அஸ்வர் எம்.பி. மேற்கண்டவாறே முறையிட்டார்.

அஸ்வர் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினைக்கு செவிமடுத்த பிரதி சபாநாயகர் உரையை நிறைவு செய்து கொள்ளுமாறும் குறித்த பொருளை படைக்கல சேவிதரிடம் ஒப்படைக்குமாறு பணித்ததுடன் விசாரணை முடிவு மாலையில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதன் பின்னர் விவாதம் நிறைவடைந்ததும் அஸ்வர் மற்றும் லசந்த அழகிய வண்ண உள்ளிட்ட உறுப்பினர்கள் அஜித் மான்னப்பெரும எம்.பி. மீதான விசாரணை முடிவுகள் தொடர்பில் கேள்வியெழுப்பினர்.

இதன்போது அஜித் மான்னப்பெரும எம்.பி. மீதான விசாரணை மற்றும் குறித்த பொருளின் மீதான சோதனைகளிலிருந்து அவர் வைத்திருந்தது பேனா மூடியெ னக்கண்டறியப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

3 comments:

  1. மனிச(த)ன் தனக்குரிய வேலையை கச்சிதமாக விசுவாசத்துடன் செய்கிறார் பாருங்கோ !!!

    ReplyDelete

Powered by Blogger.