Header Ads



றிசாத் பதியுதீன் பதில் தருவாரா..?

(நப்ஹான்)     

 வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆறு புதிய பாடசாலைகள் புத்தளத்தில் உருவாக்கப்பட்டன. இப்பாடசாலைகள் யாவும் மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்டவையாகும்.

      இதில் 1 சீ தரப்பாடசாலை ஒன்றும் டைப் 2 தரப்பாடசாலைகள் 5 உம் உள்ளன.இவற்றை அமைச்சர் றிஷாட் மிகவும் அதிக அக்கறை எடுத்து உருவாக்கினார்.

இப்பாடசாலைகளுக்கான ஆளணி வசதி,மற்றும் சகல விடயங்களையும் தற்போது வரை வட மாகாணமே கவனித்து வருகிறது.இங்குள்ள ஆசிரியர்கள்,மாணவர்கள் யாவரும் எந்தவொரு கல்வித் தேவைக்கும் புத்தளத்தில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மன்னாருக்கே சென்று வருகின்றனர்.

அத்துடன் இப்பாடசாலைகளுக்கான தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் மன்னார் மாவட்டத்துடன் கணிப்பிடும் அதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி புத்தளம் மாவட்டத்திற்கே கணிப்பிடப்படுகிறது.

இது இப்படியிருக்க ,  எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத்தேர்தலின் பின் புதிதாக உருவாக்கப்படும் வட மாகாண கல்வி அமைச்சின் கீழேயே இப்பாடசாலைகள் இயங்க வேண்டிவரும்.அவ்வாறு இயங்குகின்ற போது முற்றிலும் நிலத்தொடர்புகளற்ற புத்தளம் மாவட்டத்தில் இவற்றை தொடர்ந்தும் இயங்க மாகாண கல்வி அமைச்சு அனுமதிக்குமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

இப்பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்துடன் இணைக்கப்படலாம் என ஒரு சாராரும் ஏற்கனவே இயங்குவது போன்றே இவை தொடர்ந்தும் இயங்கும் என ஒரு சாராரும் கூறுகின்றன அதே வேளை இவை மூடப்படலாம் சிலர் கருதுகின்றனர்;.புத்தளத்தில் இவை இருப்பதால் சில சலுகைகளை இழக்கக்கூடிய நிலை காணப்பட்டாலும் ஆசிரிய இடமாற்றம் போன்றவற்றிட்கு சாதகமாகவும் உள்ளன.

அண்மையில் மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் தேசியப்பாடசாலை பட்டியலில் இங்குள்ள மன்ஃபுத்ஃறிஷாட் பதியுதீன் ம.வி உள்வாங்கப்படாமைக்கான காரணம் இப்பாடசாலை புத்தளம் மாவட்டத்தில் இருப்பதேயாகும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

இப்பாடசாலைகள் விடயத்தில் 3 நடைமுறைகள் பின்பற்றக்கூடிய சாத்தியக்கூறுகளை அல் பலாஹ் கல்வி அமைப்பு அமைச்சர் றிஷாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

01) முசலியை தனி கல்வி வலயமாக்கி இப்பாடசாலைகளை அதனுடன் இணைப்பது.
02) புத்தளம் மாவட்டத்துடன் இணைப்பது
03) புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மத்தி என்ற பதிய கல்வி வலயம் ஒன்றை உருவாக்கி இப்பாடசாலைகளை உள்வாங்குவதுடன் இடம்பெயர்ந்த மாணவர்களை பெரும்பான்மையாகக்கொண்ட நாகவில்லு,ரஹ்மத் நகர்(வேப்பமடு),கொய்யாவாடி,உளுக்காப்பள்ளம்,ஹிதாயத் நகர்,10 ஆம் கட்டை ஆகிய பாடசாலைகளையும் உள் வாங்கி இரு பாடசாலைகளை தேசியப்பாடசாலைகளாக தரமுயர்த்துவது.
இவ்வாறு செய்வதன் மூலம் இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த முடியும்

மேற்படி திட்டங்களில் நடைமுறைச்சாத்தியமானதை உடன் அமுல்படுத்த வேண்டியது அமைச்சர் றிஷாட்டின் மிக முக்கிய கடமையாகும். ஏனெனில் தேர்தல் முடிவடைந்த பின் சிந்திப்பதை விட தற்போதே அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.