மன்னார் மாவட்டத்தை குட்டி சிங்கப்ராக மாற்றுவேன் - றிப்கான் பதியுதீன்
தென்பகுதி மக்கள் அனுபவித்து வரும் அபிவிருத்திப் பணிகள் போன்று மன்னார் மாவட்ட மக்களுக்கும் அவ் அபிவிருத்திகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் பெற்றுக்கொடுத்தன் மூலம் மன்னார் மாவட்டம் அபிவிருத்தியின் மையப்பகுதியாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தை குட்டி சிங்கப்ராக மாற்றுவேன் என மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
முசலி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார் அவர் தொடாந்தும் உரையாற்றுகையில், எமது மாவட்டமானது ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் முப்பது வருடங்கள் பின்தங்கி காணப்படுகிறது. எமது மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆளும் கட்சியினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும். எமது மக்களின் தேவைகளை உணர்ந்து சாதி மத பாகுபாடின்றி எனது சகோதரரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பணியாற்றி வருகிறார். எமது மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம,; மீள்குடியேற்றம், தொழில் வாய்ப்பு, பாதை அபிவிருத்தி, குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பணிகளில் நானும் அவருடன் தோளோடு தோள் நின்று வருகிறேன என தெரிவித்தார்.
மேலும் இப்பணிகளை தொடர்ந்தும் பெற்றுதருவதற்கு அரசின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அரசின் ஆதரவின்றி எதனையும் செய்து விட முடியாதெனவும் தெரிவித்தார்.
Very Old Dialog...
ReplyDeleteமுதலில் அவரின் சொந்த ஊரின் பாதைகளை செப்பனிட்டு முடுத்திவிட்டு மற்றவைகளை பேசட்டும்
ReplyDeleteold dialog pakkethevaille vaarthaihale nambonge. sonthyavooruku avarhal sontha panathil koode seivaarhal matrevoorhaluku nadakum sevaihal (avarin brother rishad) seithukondirupathai parkinreerhalthane athe muthlil parungal
ReplyDeleteஇதற்கு முன்னரும் ஜே.ஆரும் இப்படிக்கூரியவர் தான்,பின் வந்த ரணிலும் அதையே கூறினார், அவரின் address ஐக் கானாம், ஏதோ, நீங்களும் வோட்டுக்காக ஏதாவது கூறி உங்களின் address தொலைதுக்கொள்ளவேண்டம். உருப்படியான (பொய்யானாலும் பரவயில்லை) ஒன்றைக் கூறுங்கள், மக்கள் நம்பக்கூடிய மாதிரி,..... வேறு வழியில்ல,நம்பித்தான் ஆகவேண்டும் எல்லாம் தலைவிதி
ReplyDelete