சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் பேச்சு
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் வடிவேல் கிஷ்ணமூர்த்திக்கும் சவுதி அரேபியாவின் தொழிலமைச்சர் அடேல் பாக்கி ஆகியவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் இச் சந்திப்பின்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வடிவேல் கிஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய அரசாங்கத்தில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து அரேபிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தூதுவர் இருநாட்டு உறவுகள் தொடர்பிலும் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக கூறினார். ADT
Post a Comment