'பள்ளிவாசல் தாக்குதல் ஆபத்தானது, எதிர்காலத்தில் வன்முறையை தூண்டிவிட உந்துதல் அளிக்கும்'
கொழும்பு - கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. முஸ்லிம்கள் தொழுகையில் இருந்தபோது இனவாதக் குழுவால் அச்சமின்றி அப்பட்டமாக கிரான்ட்பாஸ் பள்ளி மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் இன்று (11) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை பாராபட்சம் அல்லது ஆதரவு காட்டாது கைது செய்து சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும்படி பொலிஸாருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உடனடியாக உத்தரவிடும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக பொலிஸார் குறிப்பாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் நடமாட்டம் காணப்படும் இடத்தில் இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இத்தாக்குதலை தடுத்து நிறுத்த அவர்களால் முடியாது போனதென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலானது ஆபத்தானது எனவும் எதிர்காலத்தில் வன்முறையை தூண்டிவிட உந்துதல் அளிக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பிரச்சாரங்கள் குறையாமல் வளர்ந்து வருவது வருத்தமளிப்பதாக அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலங்களில் அநுராதபுரம், தம்புள்ளை, பலாங்கொட, மஹியங்கனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளின் போது முஸ்லிம் தலைவர்கள் பொறுமையை கடைபிடித்து அவர்களது பெருந்தன்மையை வெளிப்படுத்தினர். இது குறித்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது.
தற்போது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கூறுகிறோம் தாக்குதல் குறித்து உடன் நடவடிக்கை எடுக்கவும். சட்டத்தை கையில் எடுத்து செயற்படும் பிரிவினருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் தவறினால் எதிர்காலத்தில் வன்முறை வெடித்து மற்றுமொரு கொந்தளிப்பு நிலை உருவாகும்.
இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் சமாதானமான சூழ்நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும். இவ்வாறு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கிரான்பாஸ் பள்ளி சம்பவம்: வெளிவேரிய பிரச்சினையை திசைதிருப்பி மறக்கடித்து இலங்கை வரும் நவனீதரன் பிள்ளைக்கும் உலகிற்கும் பூச்சாண்டி காட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் வணக்கஸ்தலங்களை மிகவும் இலகுவாக இலக்கு வைத்து தமது சுயனலகாரியங்களுக்காக பாவித்து நாட்டு மக்களிடையே குழப்பங்களை உண்டாக்கி விடுவது மிகவும் கவலைக்குரியது கண்டிக்கக்கூடிய விடயமுமாகும்.
ReplyDeleteநண்பர்களே ஒரு விடயத்தை நீங்கள் கவனிங்கோ முஸ்லிம் சமூகத்தை எப்படி அளிக்கலாம் என்கிற இனவாத செயல் பாடுகளை அங்கீகரிக்கும் அனைத்தும் அரசாங்கத்தில் இருக்கும் பொது எப்படி எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும். போலீஸ் படைகளையோ அல்லது பேச்சு வார்த்தைகலையோ நம்பி எந்த பிரயோஜனமும் இல்ல. அதனால நாமே எமது பள்ளிவயல்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்வோம். எமது இளைஞ்சர்கலை கொண்டே எமது சமூகத்தை பாதுகாப்போம் இனவாதம் எங்கிருந்து எழும்புகிறது என்று நீங்கள் யாரும் இதுவரை சிந்திதுல்லிர்கலா
ReplyDeleteமகிந்த அரசாங்கம் எதை முஸ்லிம்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது இனவாதத்தை மட்டும்தான் எல்லாம் பேச்சோடு முடிந்துவிடும். அதே ஒன்று சின்ஹல சமூதாயத்துக்கு என்றல் எவ்வளவோ சட்ட நடவடிக்கை ம்ம் ... தாகப்படதாக சொல்லப்படும் பள்ளி வாயலில் செக்யூரிட்டி கேமரா இருந்ததாக அறிகிறோம் எனவே அந்த கமேரகளில் நீங்கள் தேடுங்கள் என்ன நடந்தது என்று இச்சம்பவதில் யார் இருக்கிறார்கள் என்று அனய்வரயும் தேடுங்கள்.
அவர்களுக்கும் தாவ அழைப்பை சொல்லுங்கள்
என்றும் எமது சமூகத்தை பாதுகாக்கும் முயற்சியை யாருக்கும் பயந்து விட்டு விடாதீர்கள். மரணம் என்பது ஒருமுறைதான் மரணத்துக்கு அஞ்சி எமது உரிமைகளை விட்டு விடாதீர்கள்
நண்பர்களே என்னால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்கின்ற ஆதங்கத்தில் சொல்கிறேன் வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் எப்போதுமே ஒவ்வொரு தொழுகைகளிலும் துஆ பிரார்த்தனைகளை செய்கிறோம் எல்லோருமே ஒவ்வொரு தொழுகைகளிலும் துஆ கேளுங்கள் தஹஜ்ஜூத் தொழுகைய்லும் துஆ கேளுங்கள்
இன்ஷா அல்லா எல்லாம் நல்லதாகவே கிடக்கும்
Why we blame LTTE?
ReplyDeleteThe same activities done by BBS, Rawaya, Sinhala Urumaya to Mosques now.
All under terrorism.
We suspect that who did this kind of shooting in mosques those days LTTE or BBS, Rawaya, Sihnala Urumaya? Let's see, it will come out.