Header Ads



சூடான் ஜனாதிபதி ஈரானுக்கு செல்ல சவூதி அரேபிய அனுமதி மறுப்பு

(Tn) ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வைபவத்தில் பங்கேற்க சென்ற சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பiரின் விமானத்திற்கு சவூதி அரேபிய வான் பரப்பில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“சவூதி நிர்வாகம் ஜனாதிபதி பiரை ஏற்றிச் சென்ற விமானம் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது” என்று சூடான் ஜனாதிபதியின் பேச்சாளர் எமரத் சய்யித் அஹமட் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். இதில் பiர் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ விமானத்திலன்றி சவூதி நிறுவனம் ஒன்றினால் வாடகைக்கு பெற்ற விமானத்திலேயே பயணித்ததாகவும் சய்யித் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஈரான் புதிய ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி நேற்று முன்தினம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்தார். இந் நிகழ்வில் பிராந்தியத்தின் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

எனினும் ஒமர் அல் பiரின் விமானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சூடானுக்கே திருப்பி அனுப்பப் பட்டார்.

யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் சூடான் ஜனாதிபதிக்கு ஹேகிலிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரு பிடியாணை களை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Ithu saudi eduththa mudivu alla.Avarkalathu[wahabikalathu]ejamaan Israelum,Americaavum eduththa mudivu.Mannan ejamaanin kattalaikku keelppadinthallavaa aaka vendum.Appadiye seythu vittaan.

    ReplyDelete
  2. Saudiyin ejamaan Israel sollikkoduththiruppaan.EGYPT,BAHRAIN,TURKEY,PAKISTAN,AFGHANISTAN,IRAQ pondra naadukalil muslimkalathu iraththam sinthakkaaraname Saudi[yahoodi]arabia,Israel,America vum aakum.

    ReplyDelete

Powered by Blogger.