''கருத்துக்களில் வேறுபட்டாலும், செயற்பாட்டில் ஒன்றுபட வேண்டும்''
(மொகமட் பாயிஸ்)
புனித நோன்பு எம்மில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கருத்துக்களில் வேறுபட்டாலும் செயற்பாட்டில் ஒன்றுபட வேண்டும் இன்று எமக்கெதிராக எழுந்துள்ள சவால்களுக்கு முகம் கொடுப்பதாயின் எமது மத்தியில் உள்ள சங்கங்களும் மஸ்ஜித் நிருவாகங்களும் இயக்கங்களும் ஒன்றுபடுவதன் மூலமே தற்போதைய சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும். என பதுளை மஸ்ஜிதுல் அன்வர் ஜூம்மா பள்ளிவாசல் இமாமும் தாருள் ஹலகாதில் குர்ஆனியா பகுரிநேர மத்ரஸா விரிவுரையாளருமான அஷ் ஷெய்க் அல் ஹாபழ் ரிஷாத் ஸமான் (ரஹ்மானி) அவர்கள் தெர்வித்தார்.
பதுளை அல் அதான் பழைய மாணவர்கள் சங்கம் 06 வது தடவையாக ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாரு தெரிவிதார். இந்நிகழ்வில் உலமாக்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பள்ளிவாசல் பாடசாலை மத்ரஸாக்கள் என்பன எம் சமூகத்தின் கண்ணாடியாகும் அதனை பரிபாலனம் செய்வர்கள் தற்போதய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் செயற்படவேண்டும். அதற்காக பல்வேறு அமைப்புகள் சங்கங்கள் இயக்கங்கள் பரிபாலன சபைகள் இருப்பதும் இயங்குவதும் அவற்றின் வளர்ச்சிக்காக அல்ல, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக வேண்டியேயாகும். செல்வஙகள் போன்றவற்றால் மனிதர்களின் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது மலர்ந்த முகம், நற்பன்புகள் மூலமே பாரிய மாற்த்தை உருவாக்க முடியும்.
ஆக இப்புனித ரமழான் மனிதர்களை புனிதர்களாக சீர்திருத்த வேண்டும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். கருத்து முரண்பாடுகள் எம்மிடையே இருந்தாலும் கூட இஸ்லாமிய செயல்பாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். மிகவும் சிக்கலுக்குறிய இக்கால கட்டத்தில் எமது ஒற்றுமை இன்றியமையாததாகும் எனத் தெரிவித்தார்.
.
Post a Comment