Header Ads



நவநீதம்பிள்ளையை மேர்வின் சில்வா இழிவுபடுத்திவிட்டார்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளத் தயார் என கூறியமை தொடர்பிலேயே அமைச்சர் மேர்வினுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மெர்வின் சில்வா, ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன், இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று கொச்சைப்படுத்தி இருக்கிறார், விடத்தைக் கக்கி இருக்கின்றார்.

நீதிக்காகவே வாழ்கின்ற, போற்றத்தக்க மாதரசியான நவநீதம் பிள்ளையை இவ்வாறு இழிவுப்படுத்துவது முறையல்ல. இதனிடையே, மற்றொரு இலங்கை அமைச்சரொருவர், முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு நவநீதம் பிள்ளை சென்றதே தவறு என்று கூறியதுடன், அவர் தென் ஆப்பிரிக்காவின் வம்சாவழித் தமிழர் என்பதால் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுகிறார்’ என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.