எகிப்து இராணுவ ஆட்சியாளர்கள் கொடூரம் - தாடி வைக்கவும், நிகாப் அணியவும் அச்சுறுத்தல்
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவான கண்காணிப்பு குழுக்களால் தாடி வைத்த ஆண்கள் மற்றும் நிகாப் (முகத்திரை) அணிந்த பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களினால் தாடிவைத்த ஆண்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கெய்ரோ குடியிருப்பாளரான அப்துல் சலாம் பத்ர் அச்சுறுத்தலை தவிர்க்க தனது தாடியையே மழித்துவிட்டுள்ளார்.
“ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்ட எனது நண்பனின் உடலை எடுத்துக்கொண்டு வாகனத்தில் பயணித்தபோது, நான் தாடி வைத்திருந்ததால் கண்காணிப்பு குழுவொன்றால் நிறுத்தப்பட்டேன்” என்று 29 வயதான அப்துல் சலாம் பத்ர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
“நான் கொண்டு சென்ற இறந்த உடலால் தான் அந்த சந்தர்ப்பத்தில் பாதுகாக்கப்பட்டேன்” என்று அவர் விபரித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சலாம் பத்ர் தனது தாடியை மழித்துவிட்டார். “தாடி இல்லாமல் இருப்பது அதிக பாதுகாப்பானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிக்ழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து எகிப்து உள்நாட்டு ஊடகங்கள் மற்றும் இராணுவ ஆதரவு பெற்ற அரசு தாடிவைத்த இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி தனது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. தாடி வைத்த ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவது, தாக்குதல்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் எகிப்து தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
எகிப்தில் நிலவும் சூழலால் அங்கு இருக்கும் மேற்கு நாட்டு ஊடகவியலாளர் ஒருவரும் தான் வைத்திருந்த தாடியை அகற்றிக்கொண்டுள்ளார். தம்மை முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினராக கருதி வீதியில் பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்ததையடுத்தே அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.
மறுபுறத்தில் டக்சி ஓட்டுநர் ஒருவரும் தனது தாடி காரணமாக வாடிக்கையாளர்கள் தம்மை தவிர்த்து வருவதாக குறிப்பிட்டார். “இது தாடி வைத்த டாக்சி ஓட்டுநர்களை புறக்கணிக்கும் பிரசாரமாக மாறிவருகிறது” என்று அந்த நபர் ஏ. எப். பிக்கு குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் கெய்ரோவில் வாழும் தாடிவைத்த மாருந்தாளரான மொஹமத் இப்ராஹிம் தாம் வழக்கமாக வேலைக்கு செல்லும் பாதையை மாற்றி அபாயத்தை தவிர்த்து வருகிறார்.
இவ்வாறு தாடி வைத்திருப்போர் இலக்காகும் நிலையில் அபாயத்தை தவிர்க்க எகிப்தில் இருக்கும் ஒருசில இஸ்லாமிய மதப் போதகர்கள் தாடியை மழித்துக்கொள்ளும்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினரால் எகிப்தின் லிபிய எல்லையோரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல சலபி மதபோதகரான சப்வத் அல் ஹகாசியும், தனது தாடியை மழித்து தலைமுடிக்கு சாயம் பூசி இருந்தது அவர் கைதானபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து தெளிவானது.
Mursiyin muthukil kuththiya SALAFIKAL THAWHEETHVATHIKALE ungalukkum intha aniyayaththil pangundu marumayyil visarikkappaduveerkal.
ReplyDelete