Header Ads



'பள்ளிவாசல்களை தாக்கியோரை கைது செய்யாவிட்டால் இதேமாதிரியான தாக்குதல்கள் தொடரும்'

கொழும்பில் கிரான்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கியவர்களை கைதுசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது.

பள்ளிவாசலை இனவாதிகள் தாக்கியதை இரண்டு தரப்புக்கிடையிலான மோதலாக அரசாங்கம் காட்ட முனைவதாக கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார். ‘காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கும் படியாக தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யாவிட்டால் இதேமாதிரியான தாக்குதல் இன்னொரு இடத்தில் தொடரக்கூடும் என்றும்’ ஹரின் பெர்ணான்டோ கூறினார்.

No comments

Powered by Blogger.