Header Ads



'முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் ஏறுவதென்றால் அமைச்சர் பதவியை துறப்பேன்'

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்ட மேடையில் ஏறுவதா அல்லது அமைச்சர் பதவியை துறப்பதா என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தகொண்டு தேர்தல்களில் தனியாக களமிறங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவேதான் கடந்தமுறை பிரதியமைச்சர் பதவியை ராஜனாமா செய்தேன். அதுபோன்று தற்போது முஸ்லிம் காங்கிரஸ் 3 மாகாண தேர்தல்களில் தனித்து போட்டியிடுகிறது.

எனவே எனது மனச்சாட்சிபடி அமைச்சுப் பதவியை சுமந்தவனாக முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதற்கு நான் தயாரில்லை. எனவே முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசச்hர மேடையில் நான் ஏறுவதென்றால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யவேண்டியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பேன். கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸுடனும் இதுகுறித்து கலந்துரையாட உள்ளேன் எனவும் பசீர் சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் கூறினார்.

12 comments:

  1. சார், நீங்கள் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர், எனவே கட்சியின் முடிவின் படிதான் நீங்கள் நடக்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு கிடைத்த அமைச்சர் பதவி ஹராமுல பொறந்த பிள்ளை மாதிரி எனவே அதை பற்றி உங்களை தவிர வேறு ஒருவருக்கும் கணக்கே இல்லை.

    தலைமைத்துவத்தின் பலகினத்தை வைத்துக் கொண்டு நீங்கள் போடும் ஆட்டம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது சார்.

    ReplyDelete
  2. You can do whatever you want. Nobody bother about you.

    ReplyDelete
  3. you didnt discuss anything earlier, so why do you want to discuss with the leader. you dont have to come to SLMC stage and no need to resign. Go to those districts where you have fielded you candidates with SLFP, please

    ReplyDelete
  4. மீண்டும் கீறல் விழுந்த ரெகோர்ட் மாதிரி அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?

    நீங்கள் மு.கா. வாக்குகளால்தான் நாடாளுமன்றம் சென்றீர்கள். அதன் வழியாகத்தான் அரை அமைச்சராகவோ முழு அமைச்சராகவோ உங்களால் வர முடிந்தது.

    நீங்கள் கட்சிக்கு விசுவாசமாக, கட்சித் தீர்மானப்படிதான் செயற்பட வேண்டும். உங்கள் விருப்பப்படியெல்லாம் செயற்பட உங்களின் எம்.பி. பதவி காசு கொடுத்து சந்தையில் வாங்கிய சரக்கல்ல.

    உங்களால் கட்சித் தீர்மானத்தின்படி, கட்சித் தலைமைக்கு இணங்கி செயற்படாவிட்டால் கட்சியிலிருந்த இராஜினாமாச் செய்து விட்டுப் போய்விட வேண்டும். அதன் பிறகு சால்வை அங்கிள் உங்களுக்கு பதவி தந்தால் அதை வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழுங்கள்.

    நீங்கள் கட்சிக்கு விசுவாசமில்லாமல் உங்களின் மனச்சாட்சிப்படியெல்லாம் செயற்படுவதாக இருந்திருநந்தால் இந்த மு.கா. அரசியலில் வோட்டுக் கேட்டு வந்திருக்கக்கூடாது.

    மு.கா. மூன்று மாகாணங்களிலும் தலையைக் கொடுத்திருக்கிற இந்நேரத்தில் நீங்கள் மனச்சாட்சிக் கதை சொல்லி உங்களின் தலையைக் காப்பாற்றிக் கொள்ள முனையக்கூடாது. அது பெருந் துரோகம்.

    மட்டக்களப்புத் தொகுதியில் காத்தான்குடியில் ஒரு ஏமாற்றுக்காரன் ஏற்கனவே உருவாகி விட்டான். ஏறாவூரில் உங்கள் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இனி ஓட்டமாவடி மட்டும்தான் வெள்ளைத் திரையாக இருக்கிறது.

    நீங்கள் எல்லோருமே இப்படி கட்சிகளுக்கு கழுத்தறுத்தால் அப்புறம் தொகுதிக்கே "ஏமாற்றுக்காரர்கள் உள்ள தொகுதி" என்ற அவப் பெயர் ஏற்பட்டு விடும்.

    பதவியை வீசி விட்டு போய் மு.கா. மேடையில் ஏறுங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  5. When we put a rubbish thing on the bed, It acts as an owner of the bed.

    ReplyDelete
  6. நீங்கள் மட்டுமல்ல உங்கள் மு.கா.கட்சி தலைவரையும் சேர்த்து கொண்டு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுங்கள்,..நிச்சயம் மு.கா.தலைவர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்யமாட்டார், 3மாகாண சபை தேர்தல் முடிந்து மகி ராசா நீதி அமைச்சரின் செவியை திருகி வெளியேற்றும் வரை ஓட்டிக்கொண்டே இருப்பார் அதையே அவரும் எதிர்பார்க்கிறார்....திராணியற்ற தலைமையை பாதுகாக்க முஸ்லிம் மக்களின் அனுதாபம் அவருக்கு அவசியம், நீங்களும் உங்கள் அரசியல் வாழ்வில் முழு அமைச்சு பதவி எனும் உச்சத்தையும் அடைந்து விட்டீர்கள் ...அமைச்சு பதவியை இராஜினாமா செய்து மு.கா.மேடையில் ஏறினாலும் கட்சி தலைவர் உங்களுக்கு பிரதியீடாக ஹாபிஸ் நசீரை உள்வாங்கிய நிலையில் உங்கள் எதிர்காலம் மு.கா.வில் அமாவாசை தான் ...

    ReplyDelete
  7. உங்களைப் போன்ற துரோகிகளும் பச்சோந்திகளும் இன்னும் இருப்பதால்தான் இன்று முஸ்லிம் அரசியல் அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. காட்டிக்கொடுத்தல் கூட்டிக்கொடுத்தல் என்று பற்பல சாதனைகள் புரிந்த உங்களுக்கு இன்னும் அப்பாவி முஸ்லிம்கள் வாக்களிப்பதுதான் பரிதாபமானது. இலங்கை சோனகர்களை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  8. இவர் மனச்சாட்சி உள்ளவர் என கூற முடியாது. கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலின் போது ஆளுங்கட்சியை எதிர்த்து ஸ்ரீலங்கா மு. கா போட்டியிட்ட போது இவர் பிரதி அமைச்சராக இருந்து கொண்டே மு. காவுக்கு ஆதரவாக அதாவது அரச கட்சிக்கு எதிராக கூட்டங்களில் கலந்ததோடு உரையும் ஆற்றினார். அப்போது எங்கே ஒதுக்கி வைத்தார் மன சாட்சியை. இப்போது சொல்வதெல்லாம் பெசிலை திருப்திப்படுத்த.

    ReplyDelete
  9. இதுவும் சொல்லுவிங்க இதற்கு அதிகமாகவும் சொல்லுவிங்க வேட்கம் கெட்ட மனிதர்கள்

    ReplyDelete
  10. நீர் கட்சிக்குத் தேவையில்லை எல்லாவற்றையும் துறந்துவிட்டு வெளியேறு .

    ReplyDelete
  11. He is a original munafik wait nd see munafik will jump to ruling site very soon.

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலப்போராளியும். சிரீலங்கா முஸ்லிம காங்கிரஸின் தவிசாளரும்.கட்சியினுடைய உயர்பீட உறுப்பினரும். கட்சியினைப்பிரகடனப்படுத்தி பாராளுமன்றத்திலே இருக்கிற பாறாளுமன்ற அமைச்சரும். என் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய என் அன்பின் பசீர் சேகுதாவூத் சேர் அவர்களே!

    உங்களுக்கு சிலவிசயங்களை ஞாபகமூட்டலாம் என நினைக்கின்றேன்.

    பெரும் தலைவர் உங்கனை ஏன் எமது கட்சிக்கு இனைத்தார். எப்போது இனைத்தார் என்கிற விடயம் உங்களுக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன்.

    நீங்கள் பாராளுமன்றத்தை அலங்கரிப்பதை தலைவர் விரும்பியிருந்தார். அதுமாத்திர மல்லாமல் தலைவர் உங்களை நம்பியிருந்தார்.அப்படி இருந்தும் ஏன் இந்தக்கட்சியை அளிக்க நினைத்தவர்கள் வரிசையில் நீங்களும் இடம்பெறப்போகின்றீர்களா?

    எமது மறைந்த தலைவர் விட்டுச்சென்ற பணியினை தற்போதய தமது தலைவர் செய்கிராரோ இல்லையோ பறவாயில்லை. ஆனாலும் இந்தத்தலைமை இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது உங்களுக்குத் தெரியும்.

    எனவே அல்லாஹ் வுக்காக வேண்டி இந்தக்கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நீங்கள் பொறுமையாக இருந்து இந்தக் கட்சியை காப்பாற்றி அடுத்த தலைமைத்துவத்தினையாவது கிழக்கு மாகாணத்துக்கு உறியதாக்கி இந்தக் கட்சியை காப்பாத்துங்கள். அதற்குரிய முயற்சிகளுக்காக காத்திருங்கள்.

    அவசரப்பட்டு கட்சியை காட்டிக் கொடுத்த அதாவுல்லா . ஹிஸ்புல்லா மற்றும் இன்னுமுள்ள வல்லாக்கல் வரிசையில் நீங்களும் சென்றுவிட மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

    நீங்கள் கட்சியைக்காப்பாற்றி எங்களையும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கயுடன் நிறைவுசெய்கின்றேன்.

    வஸ்ஸலாம்.

    மாவடிப்பள்ளி
    கட்சித்தோன்டன்


    ReplyDelete

Powered by Blogger.