Header Ads



ஹஜ் கோட்டாவிற்குக் சண்டை பிடிப்பதும், பேரீத்தம் பழம் பகிர்வதும்தான் தமது கடமை

(Hafeez)

ஹஜ் கோட்டாவிற்குக் கோழிச் சண்டை பிடிப்பதும், பேரீத்தம் பழம் பகிர்வதும்தான் தமது கடமை என்று முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கும் இந்நிலையில் வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களது நலன் கருதி கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியையும் தாரை வார்த்த ஒரு கட்சியின் தலைவனாக நான் இருக்கிறேன் என அமைச்சர் றவுப் ஹகீம் தெரிவித்தார். மடவளையில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் அமைச்சர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர் ஹஜ் கோட்டாவிற்காக சண்டை பிடிப்பதும் றமழான் மாதம் வந்தால் பேரீத்தம் பழங்களை பங்கீடு செய்வைத்தால் போதும என்ற மன நிலையில் இருக்கும் போது நாம் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளோம்.

நிபந்தனை அற்ற கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியை உதரித்தள்ளியவர்கள். ஏனென்றால் அதனை அன்று நாம் பொறுப் பேற்றிருந்தால் இந்நாட்டில் பயங்கர விபரீதங்கள் ஏற்பட்டிருக்கும். இன்று மாகாண சபையும் இருந்திருக்காது. எமது மறைந்த தலைவர் காட்டிச் சென்ற ஒரு வழிதான் பிழையான நேரத்தில் சரியான முடிவை எடுத்தாலும் அதுவும் பிழையாகி விடும் என்பது. எனவே நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அன்று முலமைச்சை எடுப்பது சரியானதாக இருந்தாலும் அது பிழையான நேரம். எனவே எடுக்கவில்லை. வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களது நன்மை கருதி அவ்வாறு அதனை தாரை வார்த்துள்ளோம். அதற்காக எம்மை விமர்சிப்பவர்கள் கூறுவது போல் தேர்தல் காலமான இப்போது அரசை விட்டு நாம் வெளியேறத் தேவையில்லை. தேவையானவர்கள் எம்மை வெளியேற்றுவார்கள். நாம் அவ்வாறு வெளியேறினால் அதுவும் ஒரு சர்வதேச சதியாக சித்தரிக்கப் படும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ' பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று எம்மை விமர்சிக்கின்றனர். வசை பாடுகின்றனர்.  விசித்திரமான அரசியலில் இவை அனைத்தும் சகஜம்தான்.

முகத்தோடு கோபித்துக் கொண்டு எமது மூக்கை அறுக்கும் அரசியல் செய்ய முடியாது. நாம் இன்று அரசிற்குள் இருந்து கொண்டு எமது உரிமைகளுக்காகப் பாடு படுகிறோம். அரசிற்குள் ஒரு குட்டி எதிர்கட்சியாக நாம் துணிந்து செயல் படுகிறோம். வெளியேறிவந்து வீதியில் நின்று பேராடச் சொல்கிறார்கள்.

வெளிவேரியாவில் குடிக்க சுத்தமான நீர் கேட்ட தமது மக்களுக்கே துப்பாக்கியால் பதில் சொன்னவர்கள் பேரின ஆதிக்திற்கு பயந்து ஆட்சி நடத்துபவர்கள் எமது உரிமையைக் கேட்டதல் எப்படிப் பதில் தருவார்கள். எமது உரிரையும் உடமைகளையும் நாம் வீணாக்க முடியாது. எமது சமூகத்தின் பாது காப்பே எமது இலக்காகும்.

ஒரு சிலர் கூறுவதை இங்கு நினைவு கூறவேண்டும். அதாவது தண்ணீர் கேட்ட மக்களை இவ் அரசு எத்தகைய சக்தி கொண்டு அடக்கியதோ அதில் பத்தில் ஒன்றையாவது பயன் படுத்தி கிரேண்ட்பாஸ் சம்பவத்தில் பிரயோகித்திருக்கலாமே என்று. அப்படியான ஒரு நிலையில் நாம் வெறுமனே வெளியேறினால் அது எம்மை வெளியேற்ற நினைத்தவர்களுக்கு மட்டுமே வெற்றியாகி விடும் என்றார்.

2 comments:

  1. summa ponga saar.dooop vidama"

    ReplyDelete
  2. சில புதிய dialogகளை கூறியுள்ளார் அமைச்சர் "அரசிற்குள் ஓரு குட்டி எதிர்கட்சியாக துணிந்து செயல்படுகிறோம்" இது எப்போதிருந்து மடவளைக்குப் போன பிறகா.... அடுத்து " எமது உரிமையையும் உடமைகளையும் வீணடிக்க முடியாது" இதை இப்படிக்கூறினால் தான் சரி
    எனதும் மற்றும் மு.கா. அமைச்சர்களின் சுகபோகத்தையும் வசதி வாய்ப்புக்களையும் வீணடிக்க முடியாது என்று கூறினால் பொருந்தும்.

    ReplyDelete

Powered by Blogger.