'மஹிந்த ராஜபக்ஸவின் கிரிக்கெட் மைதானத்தில் காட்டு யானைகளே உள்ளன'
மஹிந்த ராஜபக்ஷ அரசு, வசதிபடைத்தவர்களுக்கே சகல உதவிகளையும் வழங்கி வருகின்றது. சாதாரண மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களின் மூலம் ஆட்சியை மாற்ற முடியாதாயினும் கூட அதற்கான ஓர் ஆரம்பமாக இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,
இன்று நாடு பூராகவும் நல்ல மழை பெய்கின்றது. ஆனால் மின்சாரக் கட்டணம் மாத்திரம் குறையவில்லை. உலகிலேயே அதிக மின்சாரக் கட்டணத்தைச் அறவிடும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான். அன்று மக்கள் இருட்டைக் கண்டு பயந்தார்கள். இன்று மக்கள் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள்.
அம்பாந்தோட்டையில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்தார்கள். அங்கு கிரிக்கெட் விளையாடுவது எமது வீரர்கள் அல்லாது காட்டு யானைகளே. துறைமுகம் இருக்கின்றது. ஆனால் கப்பல் இல்லை.
இந்தத் தேர்தலில் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டாவிட்டால் மீண்டும் விலை வாசி உயரும். இதனை யாராலும் தடுக்க முடியாது.
கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைந்தமைக்குக் காரணம் எமது ஆதரவாளர்கள் தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்காததே. எனவே இந்த தேர்தலில் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
இந்த யானைகள் உங்களுடையது அல்லவே?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
சரி ஜனாதிபதி அதக்கொஞ்சம் உள்டா பண்ணி ஆசியாவின் அதியசய மைதானம் யானைகள் கிறிக்கட் விளாயாடலாம் என்று சொல்லி வெளிநாட்டு யானைகளுக்கு வரவேற்பு அளித்தாலும் அழிப்பார்.
ReplyDelete