சவளக்கடை பொலிஸ் நிலைய புதிய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக சம்சுத்தீன்
(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுத்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2013.08.04) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கனவே சவளக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கே.எஸ். பத்திரண கொழும்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்காக சென்றுள்ளமையால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுத்தீன் அம்பாரை தலைமையாக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment