Header Ads



ஜனாதிபதிக்கும், விமல் வீரவன்ஸவுக்கும் சிங்கள இனவாதத்தை தவிர வேறு தீர்வுகள் எதுவுமில்லை

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பயனற்ற ஒன்று, அதனை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெல்லவில்லை. அவர் யுத்தத்தை மட்டுமே செய்தார். யுத்தத்தில் வென்றிருந்தால் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் கலந்துரையாடல்களுக்கு அவசியம் இருக்காது. இவர்கள் யுத்தத்தை முடித்து விட்டு மஹாராஜா என்று கூறியபடி பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். எனினும் பிரச்சினைக்கான தீர்வை தேடவில்லை.

ஜனாதிபதிக்கும் விமல் வீரவன்ஸவுக்கும் சிங்கள இனவாதத்தை தவிர வேறு தீர்வுகள் எதுவுமில்லை. இலங்கையின் ஐக்கியம் இவர்களுக்கு கசந்து போய்விட்டது. ஹக்கீம் ஒரு முஸ்லிம் இனவாதி, சம்பந்தன் ஒரு தமிழ் இனவாதி, விக்னேஸ்வரனுக்கும் அதனை விட்டால் வேறு உலகமில்லை.

மகிந்தவின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்று கூறமுடியாது. தற்போது இருப்பது தனி நபரின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய அரசியல் அமைப்புச்சட்டம். நாட்டின் உடமைகளையும் சொத்துக்களையும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதி கொடுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம்.

உலகத்தில் கடனை பெற்றாவது நாட்டை ஈடுவைத்தாவது, அதிகாரத்தில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம். இனப்பிரச்சினைகளை ஏற்படுத்தும் தேவை சிலருக்கு உள்ளது. இதனால் அவர்கள் அந்த சேனா, இந்த சேனா என்று பல அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். மக்களை இதனை கண்டு ஏமாந்து விடக் கூடாது என்றார்.

No comments

Powered by Blogger.