Header Ads



ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை துறக்கவேண்டும் - ஆசைப்படும் முஸம்மில்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரச பதவியையும் வகித்துக் கொண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவர் தனது பதவியைத் துறந்தே இவ்வாறு தனித்துப் போட்டியிட வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் முஸம்மில் தேசிய சுதந்திர முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் இக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    அவர் இது தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,

    முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைச் செயற்பாடுகளுக்கே துணை போகின்றது. அமச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதனால் அரசாங்கம் ஒரு போதும் கவிழ்ந்து விடப்போவதில்லை. ஆனால் அங்குள்ள முஸ்லிம் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

    முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வடக்கிலேயே பாதிக்கப்பட்டனர். தமது உடமைகளையும் இருப்பிடங்களையும் இழந்து அனாதரவான இந்த முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பிரிவினை கோருவோருக்கு துணை போவது முஸ்லிம் சமூகத்தையே அதிகம் பாதிக்கும்.

    வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான கால கட்டம் இதுவாகும். எனவே முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். தமது உடமைகளைப் பாதுகாக்கவும் வடக்கில் மீண்டும் தமது  இருப்பினைப் பெற்றுக் கொள்வதானால் முஸ்லிம் காங்கிரஸுக்கு நல்ல படிப்பினையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
   

9 comments:

  1. உனக்கு இலங்கை முஸ்லிம்களைப்பற்றிப்பேச அருகதை இல்லை வாய் மூடி உன்வேலையைமட்டும் கவனி.

    ReplyDelete
  2. மேல் மகாண சபை உறுப்பினர் muhammad musammil அவர்களுக்கு
    அமைச்சர் Rauff Hakeem போட்டியிடவில்லை முஸ்லிம் காங்கிரஸ் தான்
    தனித்து போட்டியிடுகிறது
    என்பது தெரியவில்லை போலும்....

    ReplyDelete
  3. முஸம்மில் நானா அல்லது தம்பி, நான் ஒரு கோங்கிரஸ்காரன் அல்ல ஆயினும் ஒருவருக்கெதிராக குற்றஞ் சாட்டும்போது தாமும் அத்தவறை அல்லது குற்றத்தைச் செய்யாதிருக்க வேண்டும்....கிழக்கு மாகாணத் தேர்தலின் போது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக உள்ள வீரவங்ச தலைமையில் உள்ள உமது (தே.சு.மு.) கட்சி திருகோணமலை மாவட்டத்தில் தனித்துக் கேட்டபோது எங்கே இருந்தீர் ???? அப்போது அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல முடியாமல் போய்விட்டதா ? தனித்துக் கேட்பதோ சேர்ந்து கேட்பதோ ஜனநாயக நாட்டில் அவரவர் விருப்பம். காங்கிரஸ் எனும் பச்சோந்திக் கட்சி நாளை வெற்றிகொள்ளும் தம் அங்கத்தவர்களை அரசாங்கத்துடன் தான் இணைத்துக் கொள்ளப் போகின்றதே ஒழிய தமிழ் கட்சிகளுடனா இணையப் பார்க்கின்றது ? சேர்ந்து கேட்பதால் கிடைக்க முடியாத பிரதிநிதித்துவம் தனித்துக் கேட்பதால் கிடைக்கப் போகின்றது என்பது தான் "கோங்கிரஸ்" வகுத்துள்ள வியூகமாகும் என்பதை நம் நாட்டில் எட்டாம் ஆண்டு மாணவனுக்கும் தெரிந்த அரசியல் பாடமாகும். இதை உமக்கு தெரியாமல் போனது தான் ஆச்சரியமாகும் !!!!

    ReplyDelete
  4. அடை நீ முதல் ராஜினாமா பண்ணு

    ReplyDelete
  5. முதலாவது இவனுக்கு சுன்னத் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கணும் காரணமென்ன்வன்றால் அடிக்கடி இப்படி முஸ்லிம்களை டார்ஜர் பண்றான்

    ReplyDelete
  6. Ossan Salam, நல்ல தொரு கருத்தை பதிவு செய்துள்ளீர்கள், நன்றி

    இந்த அரசாங்கம் ஒரு கூட்டனி அரசாங்கமே தவிர ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ உரியது அல்ல. கூட்டனியில் அங்கம் வகிக்கும் கட்சி நாட்டில் தேர்தல்( இடைத் தேர்தல் , மாகான சபை தேர்தல் ) வரும் போது சேர்ந்து கேட்பதோ அல்லது தனித்துக் கேட்பதோ அந்த கட்சியின் ஜனநாயக உரிமை. அமைச்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமானால் அது எல்லா கட்சி அமைச்சருக்கும் பொருந்தும். எனவே தலைவர் ஹகீம் மாத்திரம் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூருவது ஒரு மட்டமான சிந்தனையும் நகைப்புக்குரியதுமான விடயமாகும்.

    ReplyDelete
  7. No worries Muzammil

    You don't know why SLMC is competing independently in the North. Rauf Hakeem knows that they can get more votes if they stand alone only. If they ally themselves with the government they think they will get less votes because Muslims are very angry on this government these days because of the racists activities happening around the country.

    You know one thing! SLMC will join the government after taking crores of money soon after they win the election, having cheated the Muslim community once again.

    You're all same!!! Wily politicians! Muslims will be protected by Allah alone, by their continued Duas, prayers and good deeds.

    ReplyDelete
  8. MR musamil you also saying that i am a muslim but we don't know dry your best. and can you proof to us that you are a muslim? try your best. 20 years prayer has done that mosque even marhoom Asraf sir also pray the same mosque.can you open the mahiyanggana mosque after that start blaming other politician still nothing you done for srilankans muslims.

    ReplyDelete
  9. Saithaan Muzammil you are an Agent of any one of Anti-Muslim Societies. So you...........

    ReplyDelete

Powered by Blogger.