Header Ads



மகிந்த ஆட்சியை விட, ரணிலின் ஆட்சி பயங்கரமானது

(JM.Hafeez)

கட்லசும், ரோல்சும் உருவத்தில் மட்டுமே வித்தியாசமானாலும் உள்ளே இருக்கும் 'கீமா' ஒன்றுதான் என்பது போல ஐ.தே.க.யும் ஐ.ம.சு.கூட்டமைப்பும் ஒரே சரக்குத்தான் என்று முன்னாள் அக்கறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும், கிழக்கு மாகாண சபை அங்கத்தவருமான தவம் தெரிவித்தார். (30.8.2013 இரவு) மடவளையில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மகிந்த ஆட்சியை விட ரனிலின் ஆட்சி பயங்கரமானது. உருவத்தில் இரண்டும் வித்தியாசமானாலும் உள்ளே இருப்பது  ஒன்றுதான். எமது கிராமப் பாசையில் கூறுவதாயின் கட்லஸ்சும், ரோல்சும் உருவத்தில் வித்தியாசமானாலும் உள்ளே இருப்பது இரண்டிலும் ஒரே பொருள்தான். இது போல் தான் இரண்டு கட்சிகளும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக உள்ளவர் கிழக்கு மாகாணத்தை சேராதவராக இருப்தை நினைத்து நான் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். ஏனெனில் கட்சியை துண்டு துண்டாக்கி விற்றவர்கள்தான் அனேகம் பேர். தலைமை ஒன்று இல்லாமலே தம்மை தலைவர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் அனேகம். எனவே அப்படி அல்லாத வகையில் கிழக்கிற்கு வெளியே ஒரு தலைமை கிடைத்தமை பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முரண்பாடான இனங்களுக்கிடையில் ஒரு சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில்தான் மாகாண சபைகள் முன்னெடுக்கப்பட்டன. அன்று மாகாண சபையை எதிர்த்த கட்சிதான் இன்று அவற்றிற்காகப் போட்டி போடுகின்றன.

இன்று தமிழ் சமூகம் தமது சுய நிர்ணயத்தை நோக்கி நகர்கின்றனர். காரணம் வன்னியன், எல்லாளன் என்ற, சங்கிலியன் என்ற அரசர்கள் பரம்பரையாக ஆண்ட வரலாறு அவர்களுக்கு உண்டு. அதேபோல் துட்டகைமுனு முதல் பல சிங்கள மன்னர்கள் ஆண்ட வரலாறு சிங்கள வர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் மேற்படி இரு இனங்களும் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் உள்ளனர். ஆனால் முஸ்லீமகள் மட்டும் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவில்லை. ஏனெனில் முஸ்லிம்களது அரசியல் தன்மை வித்தியாசமானது.

அதாவது இலங்கை முஸ்லீம்களைப் பொருத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முப்பரிமான அரசியலைச் செய்கிறது. இதனை விளங்கிக் கொள்வது சிரமம். வடகிழக்கிற்கு வெளியே ஒரு அரசியலையும், வடக்கில் இன்னொரு அரசியலையும் கிழக்கில் பிரிதொரு அரசியலையும் செய்வேண்டிய கட்டாய நிலைமை உண்டு. இதனால்தான் கிழக்கு மாகாண தேர்தலை அடுத்து முதலைமச்சர் பதவியை கிழற்கிற்கு வெளியே உள்ள மக்களுக்காக தாரை வார்த்தோம். அது சிலருக்கு ஏன் என விளங்காது. அதே வகையில்தான் இன்று அரசுடன்இணைந்தும் அரசினுள்ளே எதிர்கட்சியாகவும் செயல்பட வேண்டி உள்ளது. தனித்தும் சேர்ந்தும் போட்டி இட வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மூன்று காரணங்களுக்காக முஸ்லிம்கள் ஆதரிக்கவேண்டியுள்ளது. அதில் ஒன்று முஸ்லீம் விரோத செயற்பாடுகளுக்கு எமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் வாக்களிக்கவேண்டும். அடுத்ததாக சமூகத்திற்கு உள் இருந்தே எம்மை விமர்சிக்கும் கூட்டத்திற்குப் பதில் வழங்க வேண்டும். மூன்றாவதாக எமது இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மேற்படி மூன்று காரணங்களில் மத்திய மாகாண முஸ்லீமகளுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று உள்ளது.

அதுதான் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவியை ஏன் நாம் தாரை வார்த்தோம் என்பது கிழக்கு மாகாண மக்களுக்குப் புரியாது. ஆனால் வட,கிழக்கிற்கு வெளியே யுள்ள மக்களுக்கு நன்கு தெரியும். அதற்கு நன்றிக் கடன் செலுத்தவாவது கட்டாயம் மத்திய மாகாண மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்துத்தான் ஆக வேண்டும்.

இன்று எமது சமூகத்திற்குள் இருந்தே எமது முஸ்லீம்களை எள்ளி நகையாட விமர்சிக்க ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டுள்ளார்கள். எமது முஸ்லீம்களே எமது பர்தாவையும், ஹிஜாபையும் விமர்சிப்பதற்காகவே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பெறுமதியற்ற அமைப்பல்ல. சுமார் ஐந்து இலட்சம் வாக்காளர்களது சொந்தக் காரனாகும். இன்று சிலர் ஊடகங்களது கருத்துக்களை கொத்பாவாக நினைக்கிறார்கள். இலங்கையில் எந்த ஊடங்கமும் முஸ்லிம்களது ஊடகங்கள் அல்ல. பேரினவாத சிங்கள ஊடகங்கள் முஸ'லீமகளையும் தமிழர்களையும் பகைமையாக்கவே எழுதுகிறார்கள். அதுபோல் சில ஊடகங்களின் கருத்துப்படி முஸ்லிம் சிங்கள உறவு பாதிப்படையும் வகையில் எழுதுகிறார்கள். இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளக கூடாது என்றார்.

4 comments:

  1. அக்கரைப்பற்றுக்கு மேயரா போட்டிருந்தா இன்னேரம் அதாவுக்கு சார்பா கதைத்திருப்பீர்கள். மடவள மக்களுக்கு உங்கட விளக்கம் தெரியாது.

    ReplyDelete
  2. அன்பின் நண்பன் தவம் முதலில் உங்களுக்கு நண்றி க‍ரணம் பெறிய ஒரு விதியை சிரிதாக மத்திய மாகாண மக்களுக்கு சுற்ரி காட்டியமைக்காக, இந்த மக்கள் உண்மையில் முஸ்லிம்கள் மீதும் கிழக்கு மக்கள் மீதும் அன்பு இருந்தாள் அந்த மக்களி தலை எமுத்தைக் காப்பாற்ற இந்த மத்திய மாகாண மக்கள் SLMC க்கு வாக்கலி்த்து தான் ஆகவேண்டும், அன்று SLMC க்கும் கிழக்கு மக்ளுக்கும் கிடைக்க வேண்டிய (முதலமைச்சர்) பதவியை வட கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம் மக்களைக் கருத்திற் கொண்டு துச்சமாக நினைத்து தூக்கி வீசியது இந்த SLMC என்பதை இந்த மக்கள் மறக்கக் கூடாது. அன்று நினைத்து இருந்தாள் இன்று கிழக்கில் SLMCயி்ன் முதலமைச்சராக இருந்து இருக்களாம் அவ்வாறு இருந்திருந்தாள் இன்று வட கிழக்குக்கு வெளியில் உல்ல முஸ்லிம்களுக்கு மிகவும் கஸ்டமான சூள் நிலை ஏற்பட்டு இருக்கும் உ+ம் வடகிழக்கு மக்கள் சுமார் 30 வருடம் தாங்கிய அவல நிலை இந்த மக்களுக்கு வரக் கூடாது என்றுதான் நினைத்தாகள், இதுதான் உண்மை இதை செய்தது SLMC யி்ன் தலைமையும் கிழக்கு முஸ்லிம் மக்களும், நாம் எமது உறிமையை வென்றெடுக்கவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களி்க்கத்தான் வேண்டும் இதனால் மத்திய மாகாண மக்கள் உற் பட முஸ்லிம்கள் அனைவரும் எமது ஏகத்துவமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பி்கையுடன் நண்றி சூறிக் கொள்கின்றேன் நண்றி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  3. அன்பின் நண்பன் தவம் முதலில் உங்களுக்கு நண்றி க‍ரணம் பெறிய ஒரு விதியை சிரிதாக மத்திய மாகாண மக்களுக்கு சுற்ரி காட்டியமைக்காக, இந்த மக்கள் உண்மையில் முஸ்லிம்கள் மீதும் கிழக்கு மக்கள் மீதும் அன்பு இருந்தாள் அந்த மக்களி தலை எமுத்தைக் காப்பாற்ற இந்த மத்திய மாகாண மக்கள் SLMC க்கு வாக்கலி்த்து தான் ஆகவேண்டும், அன்று SLMC க்கும் கிழக்கு மக்ளுக்கும் கிடைக்க வேண்டிய (முதலமைச்சர்) பதவியை வட கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம் மக்களைக் கருத்திற் கொண்டு துச்சமாக நினைத்து தூக்கி வீசியது இந்த SLMC என்பதை இந்த மக்கள் மறக்கக் கூடாது. அன்று நினைத்து இருந்தாள் இன்று கிழக்கில் SLMCயி்ன் முதலமைச்சராக இருந்து இருக்களாம் அவ்வாறு இருந்திருந்தாள் இன்று வட கிழக்குக்கு வெளியில் உல்ல முஸ்லிம்களுக்கு மிகவும் கஸ்டமான சூள் நிலை ஏற்பட்டு இருக்கும் உ+ம் வடகிழக்கு மக்கள் சுமார் 30 வருடம் தாங்கிய அவல நிலை இந்த மக்களுக்கு வரக் கூடாது என்றுதான் நினைத்தாகள், இதுதான் உண்மை இதை செய்தது SLMC யி்ன் தலைமையும் கிழக்கு முஸ்லிம் மக்களும், நாம் எமது உறிமையை வென்றெடுக்கவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களி்க்கத்தான் வேண்டும் இதனால் மத்திய மாகாண மக்கள் உற் பட முஸ்லிம்கள் அனைவரும் எமது ஏகத்துவமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பி்கையுடன் நண்றி சூறிக் கொள்கின்றேன் நண்றி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  4. அதை விட உங்களின் ஆட்டம் படு பயங்கரம்

    ReplyDelete

Powered by Blogger.