ஏறாவூரிலிருத்து கல்வியல் கல்லூரிக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலிருத்து கல்வியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் சனிக்கிழமை 24.08.2013 ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஏறாவூர் கல்வி எழுச்சி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எச்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை பிரதிதவிசாளர் எம்.எஸ்.சுபைர்,ஏறாவூர் பிரதேச தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் உற்பட கல்விஅதிகாரிகள் அதிபர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
பாலர் பாடசாலை மாணவர்களினது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதன் போது ஏறாவூர் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியிலும் விளையாட்டு துறைக்கும் பங்காற்றி வருகின்ற ஏறாவூர் மாக்கான் மார்க்கார் வித்தியாலயத்தின் ஆசிரியரான எம்.எம்.எம். முஹைதீன் பிரதி தவிசாளர் சுபைர் அவர்களினால் பாராட்டி பொண்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Post a Comment