பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, மிருகபலி பூஜை இடைநிறுத்தம்
சிலாபம் - முன்னேஸ்வரம் சிறி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருகபலி பூஜை இந்த வருடம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் இந்த பூஜை நடைபெறவில்லை.
இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது. இந்த வழக்க இந்த மாதம் 27ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
எனினும் இந்த வருடத்துக்கான மிருக பலி பூஜை இந்த மாதம் 21ம் திகதி நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றைய தினம் புத்தளம் பிரதி காவற்துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த பூஜை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, ஆலயத்தின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. SFM
Post a Comment