ஈரானின் புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் பெண்கள்
ஈரானின் வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் வெளியுறவுத்துறைக்கு ஒரு பெண் தூதுவர் மற்றும் பெண் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்படலாம் என்று ஈரானின் ஊடக செய்திகள் இன்று தெரிவித்துள்ளன.
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஷெரிப் இந்த இரண்டு பதவிகளுக்கும் பெண்களை அமர்த்துவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளதாக அத்துறையின் தகவல் தொடர்பாளரான அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.
மிதவாதியான ஈரானின் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் அமைச்சரவை உறுப்பினர்கள் இந்த மாத ஆரம்பத்தில் பதவியேற்றனர். ஆண்களாகிய இவர்கள் அனைவரும் 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியரசின் உயர்ந்த பதவிகளுக்கு பெண்களை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ரவ்ஹானியே இரண்டு பெண்களை உயர் பதவிகளுக்குக் குறிப்பிட்டுள்ளார். அவரைப் போலவே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த எல்ஹாம் அமின்சடே என்பவரை பாராளுமன்ற நிகழ்ச்சிகளுக்குத் துணைத் தலைவராகவும், பர்வின் டடாண்டிஷ் என்பவரை பெண்கள் செயல்பாடுகளுக்கான ஆலோசகராகவும் நியமிக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னாலும், மஹ்மூத் அஹ்மத்னிஜாத் ஈரானின் அதிபராக இருந்தபோது, பழைமைவாதிகள் நிரம்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று மர்சியே வஹித் டஸ்ட்ஜெர்டி என்பவரை முதல் பெண் அமைச்சராக நியமித்தார்.
ஆயினும், இறக்குமதி செய்யப்படும் மருத்துகளின் விலை நிர்ணயம் குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் 2012ஆம் ஆண்டில் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1997-2005ஆம் ஆண்டு வரை, அதிபர் முகமது கட்டாமி ஆட்சிக்காலத்தில் மசுமே எப்டெகார் என்ற பெண் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கான துணைத்தலைவராக செயல்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment