Header Ads



இலங்கையில் சர்வாதிகாரப் போக்கு அதிகரிப்பு - நவநீதம்பிள்ளை எச்சரிக்கை

இலங்கையில் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.  இலங்கையில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று 31-08-2013 காலை செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது.

இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று  தோன்றுகிறது.  போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில், நிலைகொண்டுள்ள உள்ள படைகளை இலங்கை அதிபர் குறைக்க வேண்டும்.

40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற, மீறல்கள் குறித்து நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். pp

1 comment:

  1. ந.பிள்ளையின் முழு உரையையும் மொழிபெயர்த்து பிரசுரித்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் சில இணையங்களில் முழுப்பேச்சும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி. முஹம்மது அஜ்வாத்.

    ReplyDelete

Powered by Blogger.