கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கொரிய நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செயதுள்ள கொரிய அரசாங்கத்தின் பௌதீக திட்டமிடலுக்கான பிரதான ஆய்வு நிறுவனமான கிறிஸ் அமைப்பின் பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுல் ஆசிய மனறத்தின் அழைப்பின் பேரில் கிழக்குமாகாணத்திற்கு அண்மையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பலதரப்பட்ட அமைப்புக்கள், உள்ளுராட்சி மனறங்கள்இ நகர அபிவிருத்தி அதிகார சபை அடங்கலாக முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்திற்கு வருகை தந்த பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுல் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுடனும் கலந்துரையாடினார்.
பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுலுடன் முதலமைச்சர் மற்றும் கிழக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் ஆசிய மன்றத்தின் ஆசிய அபிவிருத்தி அதிகாரி செல்வி யங்கிம், நிகழ்சித்திட்ட அதிகாரிகளான எம்.எஸ். றிஸாட், எம்.ஐ.எம். வலீத், தம்மிக்க மகேந்திர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் குறிப்பாக மாநகர, நகர சபைகளின் தேவைகள் குறித்தும் திட்டமிடப்பட்ட முறையிலான அபிவிருத்தியின் அவசியம் குறித்தும் வலியுறித்தினார்.
ஆசிய மன்றத்தின அனுசரணையுடன் கொய்க்கா செயற்திட்டத்தற்கு அமைவாக கடந்த மார்ச் மாதம் கொரியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தை ஞாபகப்படுத்தியதுடன் தென் கொரியாவின் முக்கிய நகரங்களுடன் கிழக்கிலுள்ள சில நகரங்களினை இணைத்து எதிர்காலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
கிழக்கின் இயற்கை வழங்கள், நகர அபிவிருத்திக்கான முன்னேற்பாடான தொழில்நுட்ப ஆலோசனைகளை செம்மையாக வழங்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை கிழக்கிற்கு அனுப்புதல், கொரியாவின் நவீன தொழில்நுட்பம் அடங்கிய வெற்றிகரமான செயற்திட்டங்களினை கிழக்கு மாகாணத்தில் அமுல் படுத்துதல் தொடர்பான உகந்த சூழல் குறித்தும் பணிப்பாளர் முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.
Post a Comment