Header Ads



அம்பாரை மாவட்ட தொண்டர் ஆசிரியர்களின் நியமனப் பிரச்சினை

(எஸ்.ஏ.கே)

நாட்டின் கல்வி நடவடிக்கைகளை பாதிப்பதில் ஆசிரியர் பற்றாக்குறையும் ஒன்றாக கருதப்படுகின்றது. மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பங்களிப்பு ஆசிரியர்களிடமிருந்து பெறப்படுகின்றது. எவ்வாறிருந்தாலும் ஆசிரியர் பற்றாக் குறை என்பது தொடர்தேர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நிலவி வருவதனை காணக் கூடியதாக உள்ளது. இதனால் பற்றாக் குறை நிலவும் பகுதிகளில் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிப்படைகின்றது.

இந்நிலையில் மாணவர்களின் கல்விப் பாதிப்பை நிவர்த்திக்கும் பொருட்டு காலத்துக்குக் காலம் தொண்டர் அடிப்படையில் சேவையாற்ற உயர்தரம் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படுவர். இவர்கள் எதுவித எதிர்பார்ப்பும் வேதனமுமில்லாமல் பிற்காலத்தில் நிரந்தர ஆசிரியராக பணிபுரிய நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கில் பணிபுரிகின்றனர். அரசாங்கம் அவ்வப்போது இத்தொண்டர் ஆசிரியர்களின் நோக்கத்தையும் நிரைவேற்றிவந்துள்ளது.

இது போலவே இறுதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பதவி நிலை 3 II என்பதை மாற்றி இத்தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் என்ற பெயரில் தகுதிகாண் ஆசிரியர் நியமனத்தை முதலில் வழங்கியது. ஆசிரியர் பயிற்சியை முடித்ததன் பின்னால் 3 II தரத்தை வழங்கலாம். என தீர்மானித்து தற்போது நாடு முழுவதும் சென்ற 5 வருடத்திற்கு முன்பு சுமார் 4700 தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கியுள்ளது. அதில் கிழக்கு மாகாணம் 462 பேர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 118 மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் 165 பேர்களுக்கும் அம்பாரை மாவட்டத்தின் சிங்கள மொழித் தொண்டர் ஆசிரியர்கள் 70 பேர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கவலைக்கிடமான, மனித உரிமை மீறலான விடயம் அம்பாரை மாவட்டத்தின் தமிழ் மொழி மூல தொண்டர் ஆசிரியர்களைக் கொண்ட கல்முனை, சம்மாந்துறை அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வலயங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்கள் 109 பேர் மீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் மக்கள் பிரதிநிதிகள் எடுக்காமை பெரும் கவலை தரும் விடயமாகும்.

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பல கஸ்டங்களுக்கு மத்தியில் சேவையாற்றி வரும் இத்தொண்டர் ஆசிரியர்கள் பல நேர்முகப் பரீட்;சைக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாமையினால் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இவ்வாறு செய்வதறியாது அநீதி இழைக்கப்பட்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்கள் கூறும் கருத்துக்கள் அவர்களுக்கு நியமனம் ஒன்றே தீர்வு என்பதை சுட்டுகின்றது.

தொண்டர் ஆசிரியராக கடமையாற்றும்  ஒருவர் குறிப்பிடும்போது நான் கடந்த 11 வருட காலமாக  சேவையாற்றி வருகிறேன். பல நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியும் எனக்கு நியமனம் வழங்கப்படவில்லை. எமக்கு நியாயமற்ற காரணங்களைக் காட்டி எமது நியமனத்தை மறுப்பது அநீதியாகும். எமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாரான நிலையில் எமது வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றோம். எங்களுக்கு நியாயம் வேண்டும்என்று குறிப்பிடுகிறார்.

வேண்டப்படும் தகைமைகள் இருந்தும் நியமனம் கிடைக்காமையினால் இதற்கு ஊழல் மோசடிகளும் ஒரு காரணமாகலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது. வேதனை தரும் விடயம் என்னவென்றால் எதுவித பரிகாரத் தீர்வும் வழங்கப்படாமல் இவர்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் இவர்களின் விடயத்தில் பொடுபோக்காக இருந்தமையும், அரசியல் வாதிகள் இத்தொண்டர் ஆசிரியர்களுக்கு துணைநிற்க தவறியமையுமே இவர்களின் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாகும்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் இந்த பிரஸ்தாப தொண்டர் ஆசிரியர்களை நடுத்தெருவில் விட்டுச்சென்றமையால் அவர்கள் வயது சென்ற நிலையில் செய்வதறியாது நிற்கின்றனர்.

அமைச்சரகளான அதாஉல்லா, றவூப் ஹக்கீம், றிஸாட் பதியுதீன் ஆகியோரிடம் மட்டுமல்லாது  கிழக்கு மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் சந்திரகாந்தன் தொடக்கம் இப்போதுள்ளவர்கள் வரையான எவரும் இந்த நியமன விடயத்தில் அக்கறை எடுக்கவில்லை. இவ்வாறு தமிழ் பேசும் சமூகங்களின் அரசில்வாதிகள் முள்ளந்தண்டு இல்லாதவர்களாக இருக்கும்போது எவ்வாறு சமூகங்களின் இதர பிரச்சினைக்கு தீர்வு காணப்போகின்றார்கள். தமிழ் பேசும் சமூகங்களின் கதி அதோ கதிதான்.

இதற்கு மேலாக இன்னும் ஒரு உண்மையும் இருக்கிறது, கடந்த காலங்களில் அம்பாரை மாவட்டத்தில் கடமையாற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர்களும் இவர்களை ஏமாற்றி முனாபிக் தனமாக நடந்து கொண்டனர். இதனால் இறுதியாக நடைபெற்ற நேர்முகப்பரீட்சை காலம் தாழ்த்தப்பட்டது. இதனால் இவர்களின் நியமன விடயம் கானல் நீராகிப்போய்க்கொணடிருக்கிறது. தற்போது ஜனாதிபதி மட்டும் தலையிமட்டாலே ஒழிய எமது நியமனத்தை பெறுவது கடினம் என பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர்;கள் இறுதியாக தோற்றிய நேர்முகப் பரீட்சை ஆளுனரின் விசேட பணிப்புரைக்கமைய இடம்பெற்றதாகும். 2009.02ம் மாதத்தில் நடைபெற்ற இந்நேர்முகப் பரீட்சை 4 வருடங்களாகியும் இன்றுவரையும் இழுத்தடிக்கப்படுகின்றது. இதுவிடயமாக ஜனாதிபதியை அவரது மாளிகையில் இருமுறைகள் சந்தித்து இவர்களின் பிரச்சினையை எடுத்துக்கூறியபோது கிழக்கு மாகாண ஆளுணருக்கு அதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும்இ அவரைச் சந்திக்கும்படியும்; அப்போது ஜனாதிபதி கூறியிருந்தார். ஆளுணரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் அவர்களது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனைச் சுட்டியும், நியமனத்தை வேண்டியும் சங்கம் கவனயீர்ப்பு போராட்டங்களை அன்மைக்காலமாக நடாத்தியிருந்தது. உடனிருந்த தொண்டர் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியையும் முடித்துக் கொண்டு வெளியேறியுள்ள நிலையில் கடமையாற்றுகின்றனர். பல குடும்பக்கஸ்டங்கள் இன்னல்களையும் சகித்துக் கொண்டு வயது சென்றதால்  வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத நிலையில் உள்ள இவர்கள்,  மாகாண சபைக்கூடாகவும் தமது பிரச்சினையை முன்வைத்திருந்தனர். ஆனால்அதிகாரத்தின் ஊற்றான ஆளுணர் இந்நியமனத்துக்குத் தடையாக உள்ளார். மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் பலர் முயன்றும் இது விடயத்தில் பயனளிக்கவில்லை. தற்போது இவர்களது நியமனத்தை மறுத்து முன்வைக்கப்படும் காரணம் நியாயமற்றது.

வெற்றிடம் இல்லை  அதனால் தற்போதைக்கு நியமனம் தரமுடியாது என்று
குறிப்பிடுகின்றனர். ஆசிரிய  வெற்றிடம் உள்ள போதே பிரஸ்தாப தொண்டர்
ஆசிரியர்களின் சேவை பெறப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது இவர்களுக்கு நியமனம் வழங்க முடியும். காரணம் ஆசிரியர் உதவியாளர் நியமனம் என்பது ஆசிரிய வகுதிக்குள் அடங்காத தற்காலிக நியமனமாகும். வெற்றிடம் ஒருபோதும் இந்நியமனத்துக்குத் தடையாக இருக்க முடியாது. இதனை சகல உயர் அதிகாரிகளும் அறிவர். இவ்வாறான நிலையில், அன்மைய ஆசிரியர் இடமாற்றப்

பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்த வேளையில் இவ்விடயத்தை கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் அலுவலகத்தில், அப்போதிருந்த கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. பாலசிங்கம், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் உட்பட அரசியல்வாதிகள் முன்னிலையிலும் இக்கருத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.

ஜனாதிபதியின் முன்னிலையில் இந்த விடயத்தை கொண்டு சென்று தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய முழுப்பொறுப்பும் காலத்திற்குக்காலம்
மக்களிடம் சென்று இல்லாத பொல்லாத் விடயங்களை கூறி பிச்சைக்காறர்கள்போல் வாக்குப்பிச்சை கேட்டுவிட்டு விடயம் நிறைவேறியவுடன் மக்களை மறந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற அரசியல்வாதிகள் சற்று கரிசனை எடுத்தால், வடக்கிலே தேர்தல் லொத்தர் அதிஸ்டம் அடித்தாற்போல் வழங்கப்படும் தொண்டர் ஆசிரியர் நியமனம் அம்பாரை மாவட்டத்திலும் மிக நீண்டகால துரோகமிழைக்கப்பட்டுள்ள பிரஸ்தாப தமிழ் முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் வழங்கப்படும் என்ற நிலை காணப்படுகின்றது.

ஆகவே, இலங்கையின் வெற்றிடமுள்ள எந்தப்பகுதிகளுக்கும் சென்று சேவையாற்ற தயாராக உள்ள அம்பாறை மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களை பெரும் தியாகிகள் பட்டியலில்தான் சேர்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களிலும் வேதனமில்லாமல் சேவையாற்றிவிட்டு தற்போதும் வெளி மாவட்டங்களுக்கு சென்று சேவையாற்றத் தயாராக உள்ளனர். இவர்களுக்கு நியமனத்தை வழங்குவதன்மூலம் வெற்றிடமுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு வழிகோலுவதுடன், மிக நீண்ட கால எதிர்பார்ப்புடன் இருக்கும் இத்தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும். இவ்வாசிரியர் நியமனத்தை வழங்கவேண்டியது சம்மந்தப்பட்டோரின் தலையாய கடமையாகும்.

1 comment:

  1. Let's see what will happen?
    Will they look into consider the matter?
    We are helpless kept in the middle of the sea.
    No marriage, No job, No life
    what will do?
    Please settle our worry and fadup as soon as possible.

    ReplyDelete

Powered by Blogger.