ரவூப் ஹக்கீம் சுருட்டு பற்றவைக்க காத்திருக்கிறார் - அமைச்சர் விமல் வீரவன்ச
(ஜே.எம்.ஹாபீஸ்)
'வெளவால் வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்றால் விடியும் வரை தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.' என்பது போலத்தான் அமைச்சர் ரவூப் ஹகீமின் நிலையும் உள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
(5.8.3013) கண்டி தபால் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஒரு கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடும் நிமல் பிரேமவன்ச விற்கு ஆதரவு தெரிவித்து இடம் பெற்ற இக் கூட்ட்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவரின் மீசை தீப்பற்றும் போது அதில் சுருட்டுப் பற்றவைக்க சந்தர்ப்பம் பார்த்து றவுப் ஹகீம் இருக்கிறார். அவ்வாறு ரவூப் ஹகீம் சுருட்டுப் ற்றவைக்கும் போது இன்னும் பல சுருட்டுக்களைப் பற்றவைக்க ரனில் விக்கிரமசிங்க காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் ரனில் விக்ரமசிங்கவின் ஜாதகப் பொருத்தப்படி நாய்வரும் போது கையில் கல் இருக்காது. கையில் கல் இருக்கும் போது வாய்வரமாட்டாது. இது அவருடன் பிறந்த ஒரு நியதி. ஆனால் ரனில் விக்ரமசிங்க நாயையும் பிடித்து வைத்துக் கொண்டு கல்லையும் கையில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். இதனால் இரண்டும் நலுவி விடுகிறது.
இலங்கை வரலாற்றில் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளை எடுத்துக் கொண்டால் முதலாவதாக ஜே.ஆர். ஜயவர்தனா இடம் பெறுகிறார். அவர் சாதனை பற்றிக் கேட்டால் ஐந்தில் நான்கு பெரும்பான்மையைப் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்தவர் என்று கூறுவார்கள்.
அதன் பிறகு வந்த ஆர் பிரேமதாசா பற்றிக் கேட்டால் வீடுகட்டிக் கொடுத்தார் என்பார்கள். அதனை அடுத்து வந்தத டி.பி.விஜேதுங்க பற்றிக் கேட்டால் இன்று மாலை தோன்றி அடுத்தநாள் காலை அஸ்தமித்த சந்திரன் மாதரி இருந்தது என்பார்கள். சந்திரிகா அம்மையார் பற்றிக் கேட்டால் கடிகாரத்தின் முள்ளை தீப்பி வைக் மட்டுமே அவரால் முடியும். அவருக்கு நேரத்தை பிற்படுத்தமட்டுமே தெரியும் எனபார்கள்.
அதன் பிறகு வந்த எமது மதிப்பிற்குறிய மகிந்த ராஜபக்ஷ பற்றிக் கேட்டால் நாட்டில் சமாதானத்தை ஏற்படுததியவர் என்று கூறுவார்கள். மகிந்த ராஜபக்ஷ விற்கு வழங்கியுள்ள அடைமொழி பேதாது. உண்யில் அவர் யுத்தம் செய்து சமாதானத்தை ஏற்படுத்யவர் என்பதே பொருத்மானது. இந்த கௌரவ அடைமொழிக்கு இந்நாட்டில் வேறு எவராலும் சொந்தம் கொள்ளமுடியாது. யுத்தம் செய்து அதன் டூலம் சமாதானத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஒரேஒருவர்தான். எனவே அதைத்து அரசியல் தலைவர்களையும் விட எட்டமுடியாத உயரத்தில் மகிந்த ராஜபக்ஷ இருக்கறார்.
அப்படியான ஒருவர் அரசியலுக்கு தீடீர் எனவரக்காரணம் அவர் சட்டத்தைப் பற்றி நன்கு அறிந்தவர். எனவே எமது அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகளைக் கண்டு பிடித்து அதனுள் நுழைந்து வார்த்தை ஜாலங்களை வைத்து அதற்கு புதிய அ ர்த்தம் கற்பித்து தமிழ் ஈழம் அமைக்கவே அப்படியான ஒருவர் தேவை. இதற்காகவே விக்னேஸ்வரனைத் தெரிவு செய்துள்ளார்கள்.
மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்ட போது வடமத்தி, மத்திய, மற்றும் வடமாகாணங்களுககே முதலில் தேர்தல் நடந்தது. பின்னர் யுத்தம் காரணமாக வடக்கிற்கு நடக்க வில்லை. அதனை அடுத்துகிழக்கு, பின்னர் மேல் மாகாணம், அதன் பிறகு தென் மாகாணம், பிறகு உள்ளுராட்சி அமைப்புக்கள். இப்படியாகச் சென்று பின்னர் ஜனாதிபதித் தேர்தல். அதன் பிறகு பாராளுமன்றம். இப்படியான ஒரு சுழற்சியிலே எமது தேர்தல் முறை அமைந்துள்ளது.
அதாவது எமது தேர்தல் சுழற்சி ஆரம்பமாவது மத்திய மற்றும் வடமத்தி மாகாணத் தேர்தலுடனாகும். இந்த ஆரம்பம் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அது அதனைத் தொடர்ந்து வரும் சகல தேர்தல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலானது வெறும் மாகாண தேர்தல் அல்ல. ஏனைய தேர்தல்களுக்கான திருப்பு முனையாகும். எனவே மிகவும் சிந்தித்து சகலரும் வாக்களிக்க வேண்டும். யுத்தத்தால் அடைய முடியாத ஒன்றை அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் மூலம் தாரை வார்க்க முடியாது. எனவே சகலரும் ஐ.ம.சு.கூட்டமைப்பிற்கே வாக்களித்து நாடு துண்டாடப் படுவதை தடுக்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
you are absolutely correct kuruvi!
ReplyDeletePaithiyakkaran Palathaiyum Kathaippan . Nanga athai Kankkekkuke theve ille
இவர் உத்தமர்தானே.
ReplyDelete