Header Ads



கெளரவமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளோம் - ஜனாதிபதி மஹிந்த

நாம் கெளரவமாக சமாதானத்தை வெற்றி கொண்டு கெளரவமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளோம். இந்த நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும் என  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டைப் பிளவுபடுத்தி எல்லைகளை வகுக்க முற்படுவோரின் கனவுகள் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

4 கொழும்பு தெற்கு துறைமுகத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 

இலங்கையை மீண்டும் தோல்வியைத் தழுவாத நாடாகவும் உலகில் முக்கிய நாடாகவும் கட்டியெழுப்ப வேண்டுமெனில் துறைமுகத்தை மையமாகக் கொண்ட பொருளாதார முறைமை கட்டியெழுப்பப்பட வேண்டியது முக்கியமாகும்.

பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை மீட்க முடியும் என நாம் நினைத்திருக்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்து இந்தளவு தீர்க்கமாக எந்த தலைவரும் சிந்தித்திருக்கவுமில்லை.  அன்றிருந்தவர்கள் தம்மை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டு புலிகளிடமிருந்த துறைமுகங்களையும் கப்பல்களையும் மீட்பது சம்பந்தமாகவே சிந்தித்தனரே தவிர துறைமுகம் அமைப்பது பற்றியல்ல. 

விமான நிலையங்களைப் பாதுகாப்பது எப்படி என சிந்தித்தார்களே தவிர புதிதாக எதையாவது உருவாக்கலாம் என சிந்திக்க நேரம் இருக்கவில்லை. எதிர்கால எதிர்பார்ப்புகள், அபிவிருத்திகள், அபிலாஷைகளுக்கு நங்கூரம் போடப்பட்டிருந்த யுகம் அது.

இந்த துறைமுகத்தில் உலகில் இப்போதுள்ள மிகப்பெரிய கப்பலும் எதிர்காலத்தில் அமைக்கப்படும் பாரிய கப்பல்களும் இந்த துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முடியுமான வகையில் பிரமாண்டமாக இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிலர் இவற்றைக் கண்டு பொறாமைப் படுகின்றனர். இவற்றை விற்றுத்திண்ண முடியுமா என யோசிக்கின்றனர். நாட்டைச் சுற்றி துறைமுகங்களை அமைத்தாலும் வாய்களை மூடி வேலி போட இயலாது.

1957 இல் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உடனே பலன் தரவில்லை. இப்போதுதான் அதன் பலனை அனுபவிக்க முடிகிறது. அதேபோன்று எதிர்காலத்திற்காகவே நாம் அனைத்தையும் முன்னெ டுக்கின்றோம்.  இப்போது துறைமுகத்தின் வருமானம் 4,000 கோடியாகவுள்ளது. 2020 இல் இதனை 10,000 கோடியாக்குவதே எமது இலக்காகும்.


11 comments:

  1. Dear kind President!

    Thurai Muhagahai Nalla Thiranga But Moodiya palliya Maththiram Thirakka Ein Ungalukku Manam Waruhuthe Ille ?

    ReplyDelete
  2. Your excellency President!
    please open the mosques that have been closed down by you immediately before you open the biggest harbour Then you make Srilanka Wonders of Asian region

    ReplyDelete
  3. 100 வீதம் பொய்யானதும் ஏற்றுக்கொள்ள முடியாததொரு தகவலை வெளியுலகிற்காக மட்டும் தன் இலாபத்தை முன்வைத்து ஜனாதிபதி தன நாட்டுமக்களின் அபிலாசைகளைக்கொன்று இப்படி செய்திகளை அடிக்கடி வெளியிடுவது இவரது இருமுகங்களின் உன்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றது. உலகிலுள்ள ஜனாதிபதிகளில் இவர் மிகவும் வித்தியாசமானவர்.

    ReplyDelete
  4. ගරු ජනාධිපතිතුමනි, අප රටේ සියළු දෙනා ගෞරවයෙන් ජීවත්වීමට සුදුසු පරිසරයක් සකසා ඇති බව පුනපුනා කීවත් එසේ ජීවත්වන්නේ කවුරුන්දැයි ටිකක් විග්‍රහ කළොත් නරකද ? මන්ද අපි දන්නා තරමින් අප මුස්ලිම් ජනතාව 2012 අප්‍රියෙල් වන තුරු තරමක් ගරුත්වයෙන් ජීවත්වූවද ඉන්පසුව රටේ ඇතිවූ අප දහමට සහ ජනතාවට විරුද්ධව ඔබගේ පාලනය යටතේම සිදුවූ ඇතැම් අමිහිරි සිදුවීම් හේතුකොටගෙනම අපි අපගේ ගරුත්වය ගිලිහෙන්නට පටත්ගත් වග ඔබ නොදන්නවා නොවේ. මමද පුද්ගලිකව දීර්ඝ කාලීනව ඔබ පක්ෂයට පමණක් නොව ඔබටද ඡන්දය පාවිචිචි කළ වමේ පාක්ෂියෙකුවන අතර මීට පෙර කිසිදු රජයකින් නොවූ විරූ අඩත්තේට්ටම් සියල්ල ඔබ ර‍ජයෙන් මුස්ලිම් අපට සිදුව ඇති බැවින් දේශපාලනය පිළිබඳ මහා කලකිරීමක් ඇතිව ඇති මෙවන් අවස්ථාවක ඔබ කියන ඔය ගෞරවය අපිට නම් සත පහටවත් දැනෙන්නේ නැත්තේ ඔබ පාලනය යටතේම බව කියන්නට සිදුව ඇත්තේ අසීමිත වේදනාවකිනි.

    මුස්ලිම්වරුන්වන අපට හැ‍‍ඟී යන කාරණය නම් ඔබගේ දේශපාලන බලය තව දුරටත් රැකගැනීම වෙනුවෙන් මේ රටේ සිදුවන අනෙකුත් සියළු ප්‍රශ්න සිංහල බෞද්ධ ජනතාවගෙන් ඈත්කර තැබීම සඳහා සිවුර පොරොවාගත් මෝඩ තකතීරු ගොන්වහන්සේලා කිහිප නමකගේ පිහිටෙන් ආගමික පුනරුදය යන පුහු ඝෝෂාවක් ඇතිකර ඔබ වටා එම ජනතාව රඳවා තබාගැනීමේ එකම කූට උපක්‍රමය භාවිතා කරන බවයි. එක පැත්තකින් මුස්ලිම් පල්ලියක් ඔබ විවෟත කරනවිට තවත් පැත්තකින් ඔබගේ දේශපාලන හෙංචයියන් ලවා අප පල්ලියකට ඌරු මස් වීසි කිරීම පමණක් නොව එම පල්ලිය වසා තැබීමටද තර්ජනය කරන්නේත් ඒ නිසා බව කිව යුතු නැත. ඔබ අවංකව මුස්ලිම් ජනතාවට ආදරය කරනවා නම් බෞද්ධාගමට ලැදි නම් ඔබ කළයුතු එකම දෙයවන්නේ බොරුවට සිවුර පොරොවාගෙන අන්‍යාගමිකයින්ට (විශේෂයෙන් මුස්ලිමිවරුන්ට) එරෙහිව හැම නගරයකම බොදුබල සේනාව නම්වූ "දේවදත්ත කණ්ඩායම" විසින් පවත්වාගෙන යනු ලබන රැස්වීම් මාලාව තහනම් කළ යුතු පමණක් නොව එම සංවිධානයද තහනම් කිරීමයි. එසේ කිරීමට මෙතෙක් ඔබ අපොහොසත්වී ඇත්තේ එම සේනාවට ඔබ සහ රජය වහෙං ඔරෝ යම් සහයෝගයක් දක්වන බව අපි වටහා‍ගෙන ඇති හෙයින්ය. තව දුරටත් ඔබ නිහඬව සිටිනවා නම් එම සංවිධානය නඩත්තු කරන්නේත් ඔබ සහ ඔබගේ රජයම බව අපගේ ජනතාව තීන්දු තීරණය කරාවි. අපි කිසිවෙකුත් මේ රටේ තොත්ත බබ්බු නොවන බවත් මතක තබාගැනීම වැදගත්වේ. ඒ නිසා මුස්ලිම් ජනතාවගේ ගෞරවය රැකදීමේ වගකීම පැවරී ඇත්තේ ඔබතුමාටය. එය ඉටුවනතුරු අපිද බලා සිටින්නෙමු.

    ReplyDelete
  5. யாருக்கு கவ்வரவமாக வாழகூடிய நாட்டை உருவாக்கியுள்ளாராம் தாசிகளுக்கா

    ReplyDelete
  6. கெளரவமாக வாழக்கூடிய இன வாத, அராஜக,மனித உரிமையற்ற ,சுதந்திரமற்ற,துஸ்பிரயோகங்கள்,அடாவடித்தனங்கல் நிறைந்த நாட்டை உருவாக்கியுள்ளோம் - ஜனாதிபதி மஹிந்த.

    ReplyDelete
  7. உங்களுக்கு மட்டும் கௌரவமா இருந்தா போதுமா

    ReplyDelete
  8. என்ன செய்யலாம் நீங்கள் அமைத்த விமான நிலையத்துக்கு வரும் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மத்தள நிலையத்தில் தரித்து ஓய்வெடுத்து செல்லுகிறது ....1957ல் அமைக்கப்பட்ட விமான நிலைய பலனை இப்போது அனுபவிக்கும் நாங்கள் 3013ல் மத்தள விமான நிலைய பலனை அனுபவிப்போம்???????

    ReplyDelete
  9. பொய்! பொய்! பொய்!!!

    இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களான முஸ்லிம் - தமிழ்ச் சமூகங்கள் கௌரவமாக வாழவில்லை என்பதை உண்மை! உண்மை! உண்மை!!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  10. You always deliver very selfish talks. All know that secrets.

    ReplyDelete
  11. மேற்கூறப்பட்ட எத்தனை பின்னூட்டங்களின் கருத்துக்கள்தான் தற்போதைய ஜனாதிபதியின் நிலை அதாவது எதிர்காலத்தில் வரும் தேர்தல்களின் முடிவு.

    ReplyDelete

Powered by Blogger.