Header Ads



சந்திரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சிறைத்தண்டனை

கலைஞர்களான ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேக பெரேரா தம்பதியினர் தங்கியிருந்த மத்தேகொடை பகுதி வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து அவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பத்து பேருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று 01-08-2013 சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேல்நீதிமன்ற நீதவான் குசல சரோஜினி வீரவர்தன முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இதற்கமைய பிரதிவாதிகள் 9 பேருக்கு 4 1/2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 21,000 ரூபா வீதம் அபராதமும் இரண்டு இலட்சம் ரூபா வீதம் இழப்பீடும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் ஐந்தாவது பிரதிவாதி அங்கவீனராக இருப்பதால் அவருக்கு இலகு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



3 comments:

  1. இரண்டு இலச்சம் அல்ல இரண்டு மில்லியன் நட்ட ஈடு.

    ReplyDelete
  2. இன்றைய ஜனாதிபதியின் நிழலில் நின்று அட்டகாசம் புரியும் பலவான்களுக்கு முன்னாள் ஜனாதிபதியின் பலவான்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு ஒரு பாடமாக அமையுமா?

    எதிர்காலம் பதில் சொல்லும்! தெய்வம் நின்று கொல்லும்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. அச்சுறுத்தவில்லை. அவர்களது பிள்ளைகள் முன்னிலையிலேயே அவர்களைத் தாக்கி முடிகளைக் கத்தரித்து அட்டகாசம் புரிந்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் செய்த தப்பு ஐ.தே.க. மேடையில் பாட்டு பாடியது.

    ReplyDelete

Powered by Blogger.