Header Ads



ரணில் அடங்கினார் - நிபந்தனையற்ற மன்னிப்பும் வழங்குகிறார்

ஒழுக்காற்று விசாரணைக்குட்பட்டுள்ள ஐக்கிய தேசிய உறுப்பினர்களுக்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்சியில் இருந்து தற்சமயம் நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க, கட்சியின் தலைவரால் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் அசோக அபேசிங்க ஆகியோரை மீண்டும் கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த மாதம் இடம்பெறும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. sfm

1 comment:

  1. என்ன செய்வது...? மு.கா.வுக்கும், ஐ.தே.க.வுக்கும் இருப்பவர்களை விட்டால் வேறு ஆட்கள் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளதை இந்தச் செய்தியும் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.