நாட்டின் தலைவருக்கு வருடத்திற்கு 800 கோடி ரூபாய் ஒதுக்குவது நியாயமா?
(மொஹொமட் ஆஸிக்)
ஐம்பது இலட்சம் மாணவர்களது கல்விக்காக வருடத்திற்கு 6000 கோடி ரூபாய் பணம் மட்டுமே ஒதுக்கும் போது நாட்டின் தலைவருக்கு மட்டும் வருடத்திற்கு 800 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்படுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இரானுவ தலபதியுமான சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
இன்று 2013 08 27 கண்டி பூஜாப்பிட்டிய நகரில்; இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலுத் உரையாற்றிய சரத் பொன்சேக்கா இவ்வாரும் தெரிவித்தார்.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இன்று வரை ஆட்சியில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் அனைத்துத் தலைவர்களும் படிப்படியாக நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்றனர். உலக நாடுகளின் மதிப்பை பெற்றிருந்த எமது நாடு இன்று உலகத்தின் வெருப்பை பெற்றுள்ளது. இன் நிலையை உறுவாக்கியவரகள் நாட்டை ஆட்சி புறிந்த ஆட்ச்;pயாளர்கலே.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு விவசாயத் துறையை முன்னேற்ற வேண்டும். இன்று விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பசலை வழங்கப்படுவதில்லை. விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்து. எமது வெளிநாட்டு செலாபனயின் பெரும் பங்கு விவசாயத்துறையினால் கிடைத்த போதும் இன்று 80 சத வீதம் வெளி நாட்டு வேலை வாய்ப்பாலே கிடைக்கின்றது. 10 சத வீதம் மட்டுமே தேயிலை. தேன்னை, இறப்பர் போன்ற விவசாயத் துறையில் கிடைக்கின்றது.
சுதந்திரம் கிடைத்ததிலிந்து இன்று வரை நாம் இரு கட்சிகளை மாரி மாரி ஆட்சியில் அமர்த்தி இருக்கின்றோம் . அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்றுள்ளனர். எனவே எமக்கு நாட்டை நேசிக்கும் மக்களை பாதுகாக்கும் புதியதொரு கட்சி அவசியமாகும் என்றும் தெரிவத்தார்.
Post a Comment