80 கைதிகளை படுகொலை செய்த புலி
80 கைதிகளை கொலை செய்ததாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். பயங்கரவாத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர், இராணுவக் கப்டன் உள்ளிட்ட 80 கைதிகளை கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 80 கைதிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஜெயரட்னம் என்ற அதிகாரியும், இராணுவக் கப்டன் ஒருவரும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். 2005ம் ஆண்டு கல்கிஸ்ஸ ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரியை புலிகள் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை வானில் குறித்த அதிகாரி கிளிநொச்சிக்கு கடத்திச் செல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தகவல்களை வழங்கிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராணுவ அதிகாரிகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள், புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
2006ம் ஆண்டு மே மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் ஒட்டு சுட்டான் காட்டுப் பகுதியில் இவர்கள் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் எரிக்கப்பட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment