Header Ads



காத்தான்குடியில் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிக்ரட்டுக்கள் கைபற்றல்


மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் மொன்றிலும் ஓரு களஞ்சியசாலையிலும் இருந்து சுமார் 7ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான 36000 முப்பத்து ஆறாயிரம் சட்டவிரோத சிக்ரட்டுக்களை இன்று சனிக்கிழமை பகல் காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொறுப்பதிகாரி ஆர்.சமீர எதிரிசூரிய தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழு இன்று கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அங்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொறுப்பதிகாரி ஆர்.சமீர எதிரிசூரிய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.எஸ். 53621 பி.சி. திலகரத்ன, பி.எஸ்.68328 தென்னகோன்,பி.எஸ்.71683 மதுசங்க,3பி.எஸ்.7869 லக்மால் சமரக்கொடி ஆகியோர் குறித்த சட்டவிரோத சிக்ரட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

இதில் சிறிய 10 பத்து சிக்ரட் பக்கட்ட அடங்கிய  180 சிக்ரட் பண்டல்களும் ,20 சிக்ரட் அடங்கிய சிறிய பெட்டியில் 1800 மாக மொத்தம் 36000முப்பத்து ஆறாயிரம் சட்டவிரோத சிக்ரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அத்தோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரையும் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிக்ரட்டுக்களை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய வரலாற்றில் 36000முப்பத்து ஆறாயிரம் சட்டவிரோத சிக்ரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதற்தடைவ என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த விடயத்தில் முஸ்லிம் பெயர் தாங்கி சம்பந்தப்பட்டிருந்தால் இஸ்லாத்திற்கு தான் கெட்ட பெயர் அத்துடன் முஸ்லிம்கள் சிகரட்டையும் புகைப்பதையும் தவிர்ப்பதோடு,சட்ட விரோத விற்பனையையும் தவிர்ப்பதற்கு இலங்கையிலுள்ள ஜமாத்துகள் செய்த பிரச்சாரம் என்ன?ஜமாத்துகள் எவ்வளவு காலமாக இயங்குகிறோம் என்பதல்ல என்ன செய்திருக்கிறோம் என்பது தான் சிறப்பும்,சீரிய வழியுமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.