Header Ads



டுபாயிலிருந்து 783 தொலைபேசிகளை கொண்டுவந்த 4 பேர் கைது

(Tn) பயணப் பொதிகளுக்குள் மறைத்து டுபாயிலி ருந்து 783 செலியூலர் தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டுவந்த 4 பேரை விமான நிலைய சுங்கப் பகுதியினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.
 
இரவு 11.55 மணியளவில் டுபாயிலிருந்து வந்திறங்கிய ஈ. கே. 652 ரக எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 4 இலங்கையர் 4 பேரின் பயணப் பொதிகள் சோதனையிட்ட போதே 783 பல் வகையான செலியூலர் தொலை பேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டி பிடிக்கப்பட்டது. இப்பயணப் பொதிகளுக்குள் 550 செலியூலர் பட்டரிகள், 1100 சார்ஜர்கள், 700 தொலைபேசி பெக்கிங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

இவற்றின் பெறுமதி சுமார் 30 இலட்சத்து 77,000 ரூபா என மதிப்பிடப் பட்டுள்ளது. பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 4 பேரும் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.