Header Ads



இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 6 வயது சிறுவன்


இங்கிலாந்தில், தந்தையிடம் கிரிக்கெட்டை கற்றுக்கொண்ட, ஆறு வயது சிறுவன், உள்ளூர் கிரிக்கெட் அணியில், நிரந்தர உறுப்பினர் ஆகியுள்ளான். பிரிட்டன், நியூபோர்ட்டை சேர்ந்தவர், பார்சன்ஸ், 27. கிரிக்கெட் வீரர். இவரது மகன், ஹாரிசன், 6. சிறு வயதில் இருந்தே, தந்தையை பார்த்து, கிரிக்கெட் விளையாடிய, ஹாரிசன், இப்போது, தந்தையை விட, அதிக ரன்களை எடுத்து அசத்தி வருகிறான்.

சமீபத்தில், உள்ளூர் போட்டி ஒன்றில், தந்தையும், மகனும் களமிறங்கினர். இதில், ஹாரிஸ், 24 ரன்களை எடுத்து விளாசினான். ஆனால், அவரது தந்தை, பார்சனால், 15 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதில் இருந்து, உள்ளூர் கிரிக்கெட் குழுவில், ஹாரிசன், நிரந்தர உறுப்பினராகி விட்டான்.

இது குறித்து, பார்சன்ஸ் கூறியதாவது: நான் விளையாட்டுத் தனமாகத்தான், ஹாரிசனை. கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவனோ, என் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டான். என்னை விட, கூடுதலான ரன்களை எடுத்து, எல்லோரையும் பிரமிக்க செய்து விட்டான். அவனிடம், அபரிமிதமான திறமை இருக்கிறது. அந்த வயதில், என்னிடம் இத்தகைய திறமைகள் இல்லை. மிகவும் சிறியவனாக இருந்தாலும், அவனைவிட வயதும், அனுபவமும் அதிகமுள்ள, பந்து வீச்சாளர்களின், பந்துகளை, மிகவும் நேர்த்தியாக சந்திக்கிறான். அவன், தன் கால்களில், "பேடு'களை கட்டிக்கொண்டு, மைதானத்தை நோக்கி நடந்து செல்லும்போது, "இவனால் என்ன செய்து விடமுடியும்' என்று ஏளனம் செய்தவர்கள், இப்போது வாயடைத்து போகும் வகையில், அவனது "பேட்டிங்' திறன் உள்ளது. அவனால், இன்னும் திறமையாக விளையாடி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலும் சேருவான் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஹாரிசனின் தாய், பெகி பார்சன் கூறியதாவது: ஹாரிசன் நடக்கத் துவங்கும் முன்னரே, கிரிக்கெட்டை விரும்பிப் பார்ப்பான். அந்த அளவிற்கு அவனுக்கு, விளையாட்டு மீது அதீத ஈர்ப்பு இருந்தது. அவன், 2வது வயதில் இருந்தே, கிரிக்கெட் ஆட துவங்கி விட்டான். அவனுக்காக, "டிவி'யில், கார்ட்டூன் சேனலை வைத்தால், அதை திருப்பிவிட்டு, கிரிக்கெட் விளையாட்டைத்தான் பார்ப்பான். இவ்வாறு, அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.