Header Ads



வாரத்தில் 50 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால்..!

"வாரத்தில், 50 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால், உடல்நலம், மனநலம் ஆகியவை பாதிக்கப்படும்' என, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட, கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர், சாரா அசபெடோ கூறியதாவது: நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் வேலை செய்வதற்கும், நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், வேலையே கதி என, ஓய்வில்லாமல், உணவில்லாமல் உழைப்பவர்களுக்கு, பிரதிபலனாக, அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவை ஒருங்கே பாதிக்கப்படுகிறது. ஓய்வின்றி உழைப்பதால், மனத் தடுமாற்றம் ஏற்படுவதையும் காண முடிந்தது. தொடர்ந்து உழைத்தால், உடல்நிலை பாதிக்கும் என, நன்கு தெரிந்திருந்தும், பலர், அவர்களது வேலைக்கு அடிமைகளாகிவிட்டதற்கு முக்கியக்காரணம், அவர்களை மற்றவர்கள், "எந்த வேலைக்கும் லாயக்கில்லை' என, முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயம்தான். அதுமட்டுமின்றி, ஓய்வில்லாமல் உழைப்பதால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்றாலும், அதைச் செலவிடுவதற்குக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. அதுபோல், கூடுதலாக வருவாய் கிடைப்பதற்காக, அதிகநேரம் வேலை செய்வதால், அது சில கெட்ட பழக்கங்களையும் ஏற்படுத்திவிடுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.