'ஜம்இய்யா வாய்மூடி இருக்கின்றது என விமர்சிக்கின்றனர்' (பகுதி 5)
(அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலே இது)
15) இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்களுடனான உங்களின் தொடர்பு எவ்வாறுள்ளது?
ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமுக்கு கண்ணாடி போன்றவன், ஓர் உடம்பைப் போன்றன். நாம் ஒருவர் மற்றவரை உள்ளத்தால் நேசிக்கின்றோம். நாம் ஒருவருக்கொருவர் துஆ செய்கின்றோம். ஒரு முஸ்லிம் செய்யக் கூடிய சிறிய பணியையும் பெரிதாக மதித்து உட்சாகப்படுத்தி வரவேற்று வருகின்றோம். உதவி செய்கிறோம் எங்களுக்கு மத்தியில் பாரபட்சம் கிடையாது. ஒரு முஸ்லிம் செய்யும் சின்னப் பணியையும் மற்றவர்கள் பெரிதாக மதிக்க வேண்டும்.
16) தெற்கில் சிங்கள இனவாதம் போன்று வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் இனவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்களே?
ஆம் இந்நிலையை நாம் முன்பிருந்தே அனுபவித்து வருகின்றோம். எமது முஸ்லிம் சமூகத்துக்கு வடக்கு கிழக்கில் செய்யப்பட்ட அநியாயங்களை மறப்பதற்கில்லை. சிங்கள் இனவாதம், தமிழ் இனவாதம் என்று எந்த இனவாதம் வந்த போதிலும் எம்மிடமுள்ள திட்டம் சகவாழ்வை கட்டியெழுப்புவதேயாகும்.
17) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து சில தமிழ் பாடசாலைகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதே இது பற்றி ஜம்இய்யா எத்தகைய அக்கறையினையும் செலுத்தவில்லையா?
நாட்டில் எந்தப்பகுதியில் முஸ்லிம் உம்மாவுக்கு என்ன பிரச்சினை ஏற்பாட்டாலும் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் இன்றி ஜம்இய்யா தனது சக்திக்கு ஏற்றவகையில் அதற்கான நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் இரண்டு விதமாக அமைகிறது. முதலாவது அல்லாஹ்விடத்தில் துஆ செய்வது இரண்டாவது உரியவர்களுடன் தொடர்புகொண்டு அதற்கான சரியான நடவடிக்கைகளை மேறகொள்வது.
நாட்டின் எங்காவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை முழு நாட்டுக்கும் பெரிதுபடுத்தி மக்களை பீதியடையச்செய்து வேறு சில அசம்பாவிதங்களுக்கு காரணமாகிவிடுவதை ஜம்இய்யா விரும்புவதில்லை. அதனால் பிரச்சினைகளை உரிய இடங்களோடு முடிந்தளவு மட்டுப்படுத்தவே ஜம்இய்யா விரும்புகிறது. அதனால் ஜம்இய்யா எந்தப் பிரச்சினைக்கு என்ன நடவடிககை எடுத்தது என்ற விடயம் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் பிரயல்யப்படுத்தப்படுவதில்லை. இதனால் சிலர் ஜம்இய்யா வாய்மூடி இருக்கின்றது, கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். இவர்களது விமர்சனங்களில் இருந்து ஜம்இய்யா தப்பிக் கொள்வதற்காக தான் மெற்கொள்ளும் நடவடிக்கைகளையெல்லாம் அம்பலப்படுத்தி அவற்றை சக்தியிளக்கச் செய்யவோ அல்லது வேறு சில அசம்பாவிதங்களுக்கு வித்திடவோ ஒரு போதும் விரும்புவதில்லை.
18) யாழ்ப்பாணம் போன்ற பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்கள் படிப்படியாக விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலை தொடருமாயின் பள்ளிவாயல்கள், கோயில்களாகவும், பள்ளிவாயல்கள் தேவாலயங்களாகவும் மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க ஜம்இய்யத்துல் என்ன செய்யப்போகிறது?
ஜம்இய்யத்துல் உலமா என்ன செய்யப்போகிறது என்று கேட்பதை விட இவ்விடயத்தில் என்ன செய்தது என்று கேட்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஏனெனில் ஜம்இய்யா இவ்விடயத்தில் பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளது. கொத்பாக்களில் இவ்விடயத்தை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திவந்தள்ளதுடன் அதற்காக துஆவும் செய்து வருகின்றது.
பள்ளிவாயல்கள், கோயில்களாகவும், பள்ளிவாயல்கள் தேவாலயங்களாகவும் மாறுவதைத் தடுப்பதற்கு முதல் வழியாக எமது முஸ்லிம் சகோதரர்கள் அங்கு மீள்குடியேற வேண்டும். மீள்குடியேற விரும்புவோருக்கு சில அடிப்படை வசதிகள் அங்கு தேவைப்படுகின்றது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட் மக்களில் யாரெல்லாம் செல்வத்தோடு இருக்கிறார்களோ அவர்கள் மீண்டும் அங்கு சென்ற குடியேறுவது மிகக் குறைவாகே இருக்கிறது. யாரெல்லாம் மீள்குடியேற நினைக்கின்றார்களோ அவர்களுக்கு அங்கு தெவைப்படும் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வசதியில்லாமல் இருக்கிறது. எனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வம் படைத்தவர்கள் தான் குடியேறவில்லையென்றாலும் குடியேற விரும்பும் மக்களுக்கு தேவையா வசதிகளைச் செய்து அவர்களை அனுப்பகைவ்கவேண்டும். இப்பணியை ஒரு சில தனவந்தர்கள் செய்து வருவது குறிப்படத்தக்கது. இது பொன்று முழு நாட்டுமக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். வெளிநாடுகளிலுள்ளவர்களும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்துதான் மீள் குடியேற்றத்தைக் கட்டியெழுப்பவேண்டியிருக்கிறது.
அரசியல் பிரமுகர்களில் ஒரு சிலரும், சில நலன்புரி அமைப்புக்களும் தனவந்தர்களும் தங்களது சக்திக்கேற்ப இவ்விடயங்களில் பங்கெடுத்து வருவது உண்மையில் பாராட்டத்தக்கதாகும். முஸ்லிம் சமூகம் இன்னும் அதிகமாக இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ளவர்களும் வீடுகளைக் கட்டிக் கொடுக்க் முன்வரவேண்டும்.இது சம்பந்தமான அனைத்து தகவல்களும் ஜம்இய்யாவிடம் இருக்கின்றன. ஜம்இய்யாவை தொடர்புகொண்டால் இதற்கான முழுமையான வழிகாட்டலை ஜம்இய்யா வழங்கத் தயாராக இருக்கின்றது. தொடரும்
http://www.jaffnamuslim.com/2013/08/1.html Part 1
http://www.jaffnamuslim.com/2013/08/2.html Part 2
http://www.jaffnamuslim.com/2013/08/3_5.html part 3
http://www.jaffnamuslim.com/2013/08/4.html part 4
http://www.jaffnamuslim.com/2013/08/1.html Part 1
http://www.jaffnamuslim.com/2013/08/2.html Part 2
http://www.jaffnamuslim.com/2013/08/3_5.html part 3
http://www.jaffnamuslim.com/2013/08/4.html part 4
Post a Comment