Header Ads



இம்முறை ஹஜ் கட்டணம் 4 இலட்சம் ரூபா - கூடுதலாக அறவிட்டால் நடவடிக்கை

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஒருவரிடம் 4 இலட்சம் ரூபாவை மாத்திரம் அறவிட வேண்டுமென ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி அறிவித்துள்ளார். 

வழமையைவிட இம்முறை ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனாலும் புனித மக்கா மற்றும் மதினாவில் செலவுகள் குறைவென எதிர்பார்க்கப்படுவதாலும் இருப்பதனாலும் இந்த வருடம் ஹஜ் கடமைக்காக செல்லும் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபாவை அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் 30 இலட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஆனால், தற்போது புனித கஃபத்துல்லாவில் நிர்மாண வேலைகள் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்தவருடம் ஹஜ் யாத்திரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சவூதி அரேபியாவிலுள்ள யாத்திரிகர்களின் எண்ணிக்கை 50 வீதத்தினாலும் வெளிநாட்டு யாத்திரிகளின் எண்ணிக்கை 20 வீதத்தினாலும் அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது. இதனால் இம்முறை 15 இலட்சம் பேர்களே ஹஜ் கடமைக்காக வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த யாத்திரிகள் ஹஜ் கடமைக்காக வரும் காரணத்தினால் மக்கா மற்றும் மதீனாவில் போட்டித்தன்மை குறைந்து செலவுகள் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே இலங்கையிலிருந்து செல்லும் ஒரு யாத்திரிகரிடம் 4 இலட்சம் ரூபா அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாக யாராவது அறிவிடுவார்களாக இருந்தால் அதற்கான விசேட காரணங்கள் மற்றும் விசேட வசதிகளை அவர்கள் அறிவிக்கவேண்டும். இதைவிடுத்து யாராவது 4 இலட்சம் ரூபாவை விட கூடுதலாக அறவிட்டால் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, 30 முகவர் நிலையங்களை உள்ளடக்கிய ஹஜ் சங்கமொன்று ஒரு யாத்திரிகரிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அறவிடவுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறான ஹஜ் முகவர் நிலையங்களை நாங்கள் சந்தோசமாக வரவேற்கின்றோம்.

இம்முறை இலங்கையிலிருந்து 2240 பேருக்கு மட்டுமே ஹஜ் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தெரிவுசெய்வதற்காக முதலில் 2800 பேருக்கு நேர்முகத்தேர்வுக்கு நடாத்தப்பட்டது. அதில், 1750 பேர் இம்முறை ஹஜ் பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். பின்னர் 2801 தொடக்கம் 3250 வரையான விண்ணப்பதாரிகளை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தோம். அதில் 235 பேர் பயணத்துக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள். அதன்பின்னர் 3251 தொடக்கம் 3800 வரையான விண்ணப்பதாரிகளை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து இதுவரை 2240 இம்முறை பேர் ஹஜ் பயணத்துக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறே இம்முறை ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கிணங்க முதலாவது ஹஜ் குழுவை எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் வாரம் அனுப்பிவைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

5 comments:

  1. How much for your good self out of it?

    ReplyDelete
  2. HAVE YOU SETTLED YOUR "ACCOUNT" WITH HAJ GROUP AGENTS ???????

    ReplyDelete
  3. ஒரு தரம் இரண்டு தரம் ஹஜ் செய்தவர்கள் மற்றவர்களுக்கும் சென்று கடமையை முடிக்க இடம் கொடுப்பது வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  4. When Grandpass Incident Where This Fouzee? He Open The Mouth Only For Hajj Issues. Why This?

    ReplyDelete
  5. INSHAALLAH ALLAH WILL GIVE GOOD GIFT FOR KIND OF THESE PEOPLES AMEEN

    ReplyDelete

Powered by Blogger.