கண்டி - குருநாகல் வீதியில் வாகன விபத்து - 42 பேர் படுகாயம்
(Hafeez)
கண்டி- குருநாகல் வீதியல் சனி பின்னேரம் இடம் பெற்ற வாகன விபத்தில் 42 பேர் படுகாயமடைந்தும் ஒருவர் மரணமடைந்துமுள்ளனர்.
கதிர்காம யாத்திரை ஒன்றை மேற் கொண்டு விட்டு கண்டி வழியாக குருநாகள் ஹெட்டிமுல்ல என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி, மாவத்தகம பிரதேசத்திலுள்ள கந்தேகும்புற என்ற இடத்தில் பாதையை விட்டு விலகியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹெட்டி முல்லையைச் சேர்ந்த புத்திக என்பவர் மரணமடைந்ததாக இனம் காணப்பட்டுள்ளதாகப் பொலீஷர் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 8 பெண்களும் 9 ஆண்களும் இரண்டு சிறுவர்களுமாகப் 19 பேர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலகெதரை வைத்திய சாலையில் 17 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிட்சை பெற்று திரும்பி யுள்ளனர். மற்றவர்கள் மாவத்தகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி யாத்ரீகர்கள் கோஷ்டி கந்தேகும்புற என்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தி பலவர்கங்களைக் கொள்வனவு செய்து விட்டு மீண்டும் பஸ்வண்டியில் ஏறி பிரயானத்தை ஆரம்பித்து சுமார் 300 மீட்டர் தூரம் சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் தெரிய வில்லை. பொலீஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment