கல்முனையில் போலி நாணயத் தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது
(அகமட் எஸ். முகைடீன்)
ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் 15 வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்றுபேர் கல்முனை நகரில்வைத்து (29.08.2013) மாலை கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மண்டூரையும் ஏனைய இருவர் வவுனியாவையும் சேர்ந்தவர்கள். இவர்கள் கல்முனையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது கல்முனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலங்கக்கோன் தலைமையில் விசாரணை நடை பெறுகிறது. விசாரணையின்போது குறித்த பணங்களை கொண்டுவந்தவர் ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.
Post a Comment