சட்டவிரோத இஸ்ரேலின் தாக்குதல் - 3 பலஸ்தீனர்கள் வபாத்
இஸ்ரேல் - பாலஸ்தீன குழுவினருக்கிடையே முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை கடந்த 14ம் தேதி தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து கைகுலுக்கும் காட்சிகளை இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டன.
எனினும், பேச்சுவார்த்தை நடந்த இடம் பற்றிய தகவல்களை இரு நாடுகளுமே ரகசியமாக வைத்துள்ளன.
இந்நிலையில், ஜெருசலேம் அருகேயுள்ள குவலாண்டியா அகதிகள் முகாமுக்குள் நுழைந்த சீருடை அணியாத ராணுவ அதிகாரிகள் யூசுப் என்பவரை கைது செய்தனர்.
அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ராணுவ அதிகாரிகளின் மீது கற்களையும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
அதிகாரிகள் அளித்த தகவலையடுத்து விரைந்து வந்த இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் 3 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்துல்லா, 'இதைப்போன்ற தாக்குதல்கள் எங்கள் மக்களுக்கு உலக நாடுகள் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்கின்றன' என்று கூறியுள்ளார். இதற்கிடையில், இஸ்ரேலுடன் இனி சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர முடியாது என பாலஸ்தீன அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
Post a Comment