Header Ads



திருடும் பழக்­கத்­தை கைவிட தனது 2 கைக­ளையும் புகை­யி­ர­தத்தில் வைத்து துண்­டித்த நபர்


தனது திருடும் பழக்­கத்­திற்கு முடிவு கட்­டு­வ­தற்­காக தனது இரு கைக­ளையும் விரைந்து வந்த அதி­வேக புகை­யி­ர­தத்தின் சக்­க­ரங்­க­ளுக்கு முன் வைத்து நப­ரொ­ருவர் துண்­டித்த விப­ரீத சம்­பவம் எகிப்தில் இடம்­பெற்­றுள்­ளது. வட கிழக்கு எகிப்­தி­லுள்ள டன்டா நகரைச் சேர்ந்த அலி அபிபி (28 வயது) என்­ப­வரே தனது திருட்­டுப்­ப­ழக்­கத்தால் பெரிதும் துன்­புற்று அதற்கு தண்­டனை வழங்கும் முக­மாக தனது கைகளை துண்­டித்­துள்ளார்.

அவர் இஸ்­லா­மிய ஷரியா சட்­டத்தால் கவ­ரப்­பட்டே அந்த சட்ட விதி­களின் பிர­காரம் தனக்கு தண்­ட­னையை வழங்க முடி­வெ­டுத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது . ஷரியா சட்டம் திருட்­டுக்கு கைகளை வெட்­டு­வதை தண்­ட­னை­யாக விதித்­துள்ள போதும் எகிப்தில் மேற்­படி தண்­டனை பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தான் உள்ளூர் சமூ­கத்­திற்கு உத­வவும் இளைஞர் நிலை­ய­மொன்றை ஸ்தாபிக்­கவும் விரும்­பு­வ­துடன் திரு­மணம் செய்­யவும் விரும்­பு­வ­தாக கூறிய அலி அபிபி, தனது திருட்டுப் பழக்கம் தொடர்பில் அறியும் எகிப்­திய பெண்­ணொ­ருவர் தன்னை திரு­மணம் செய்ய முன்வரு­வது சந்­தே­க­மா­க­வுள்­ள­தாக கூறினார்.

ஆரம்பப் பாட­சா­லையில் கற்கும் போது நண்­பர்­களை ஏமாற்றி திருட ஆரம்­பித்த அல் அபிபி, பின்னர் கடை­களில் திருட ஆரம்பித்துள்ளார். அவர் அண்மையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருயுள்ளார். Vi

No comments

Powered by Blogger.