பிறை விவகாரம் - ஜம்மியத்துல் உலமா பிறைக் குழுவின் 2 ஆவது விளக்கம்
(Dr. Aqil Ahmad)
கிண்ணியாவின் ஷவ்வால் தலைப்பிறைத் தகவல் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான எனது கட்டுரைக்கு வாசகர்களால் எழுதப்பட்ட பின்னூட்டல்கள் அனைத்தையும் வாசித்தேன். www.jaffnamuslim.com இவ்விணையத்தளத்தில் இதுகாறும் பிரசுரமான கட்டுரைகளுள் மிக அதிகப்படியான பின்னூட்டல்களைப் பெற்ற கட்டுரை இதுவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன். பலவாறும் பின்னூட்டல்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை எழுதிய அத்தனைபேருக்கும் எனது நன்றிகள்.
இந்த விடயம் இன்னும் விரிவான விளக்கத்தை வேண்டி நிற்கின்றது என்பதே இந்தப் பின்னூட்டல்களின் பின்னான எனது புரிதலாகும். அதனை வழங்குவது இவ்விணையத்தைத் தரிசிக்கும் ஆயிரக் கணக்கானோருக்கு பயன் மிக்கதாக இருக்கும் என்பதனால் இதனை எழுதுகின்றேன். இந்த நற்கருமத்திற்கு வழிகோலியமைக்காக இணையத்தில் பின்னூட்டல் தந்த அத்தனைபேருக்கும், உண்ணாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் விபரம் கேட்டவர்களுக்கும் அல்லாஹ் அருள்பாலிக்கட்டும்.
விளக்கமளிப்பதனை இலகுபடுத்துவதற்காக இந்தப் பின்னூட்டல்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்கின்றேன்.
1. வானியலின் படி தலைப்பிறை தென்படாது என்று சொல்லப்பட்ட நாளில் தலைப்பிறை பார்க்கச் சொன்னது ஏன்?
2. ஜம்இய்யதுல் உலமாவுக்கு இந்த தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார்?
3. மருத்துவரான எனக்கும் வானியலுக்கும் ஆன தொடர்பு என்ன?
4. வானியலின் நம்பகத் தன்மை எத்தகையது?
5. வானியலின் விபரங்களை ஷரீஆ விடயத்தில் பிரயோகிக்க முடியுமா?
போன்ற பதிலளிக்கப்பட வேண்டிய நியாயமான விடயங்களோடு, நாம் அறிந்தது மாத்திரமே சரி எனும் ஒருதலைப்பட்ஷமான தன்பக்க நியாயத்திற்கான வாதாட்டங்களும், எள்ளிநகையாடும் விமர்சனங்களும், உண்மை யாதெனக் கண்டறிவதற்கும் அறியாத ஒன்றை அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாத நிதானமிழந்த குதர்க்கங்களும் பின்னூட்டல்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தன. “வெள்ளத்தனையதே மலர் நீட்டம்” எனும் தொல்மொழி தழுவி எறிபவரும் பயன்பெறுமாப்போல் பழம் தர முயற்சிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ். எனது இந்த முயற்சியை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பிரார்த்தித்து தொடர்கின்றேன்.
முதலாவது.
வானியலின் படி தலைப்பிறை தென்படாது என்று சொல்லப்பட்ட நாளில் தலைப்பிறை பார்க்கச் சொன்னது ஏன்?
வானியலின் படி தலைப்பிறை தென்பாடுவது சாத்தியமில்லை அல்லது அற்கான வாய்ப்பு இல்லை எனச் சொல்லும் போது அதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன.
வானிலே பிறை என்றொரு பொருள் இல்லை. அது புவியிலுள்ளவர்களுக்குத் தோற்றுகின்ற சந்திரன் எனும் பொருளின் விம்பமாகும். சந்திரன் சுய ஒளி அற்றது. சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலமே சந்திரனின் விம்பம் புவிக்குத் தெரிகின்றது. இவ்வாறு சந்திரன் தோற்றம் தருவதானது சூரிய – சந்திர – புவி இடைக் கோணம், சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் தொடுவானிலிருந்து சந்திரனின் இஸ்தானம், சந்திர அஸ்த்தமன நேரம், வளிமண்டலவியல் மற்றும் புவியில் காரணிகள், பார்ப்பவரின் பார்வைத்திறன் மற்றும் அவரது தீர்மானிக்கும் அனுபவம் என்பன செலவாக்குச் செலுத்துகின்ற பல்காரணிப் பெறுதியாகும்.
அமாவாசைக்குப் பின்னர் புவியிலுள்ளவர்களுக்கு சந்திர விம்பம் (பிறை) தோற்றுவதற்கு சூரிய-சந்திர-புவி இடைக்கோணம் 7 பாகையாவது இருக்க வேண்டும். இது தொலை நோக்கிக்குரிய பெறுமானமாகும். வெற்றுக் கண்களுக்கு இப்பெறுமானம் 9.2 பாகையாக இருக்க வேண்டும். கடந்த 07.08.2013 ம் திகதி கிண்ணியாவுக்கு சூரிய அஸ்த்தமனத்தின் போது இப்பெறுமானம் 08°:12':55" ஆகும். அதே வேளை சந்திர அஸ்த்தமனத்தின் போது இது 08°:18':14" ஆக இருந்தது. இப்பெறுமானம் தொலை நோக்கிகளுக்கு சந்திர விம்பம் தோற்றம் தரப் போதுமானதாகும். எனினும் பிறைத் தோற்றம் இன்னும் பலவான காரணிகளில் தங்கியிருக்கின்றது என்பதனை ஏலவே சொல்லியிருக்கின்றேன்.
எந்தவொரு காலத்திலும் வெற்றுக் கண்களுக்குத் தெரியக்கூடிய சந்திரனின் பிரகாசத்தின் இழிவுப் பெறுமானமுடைய சந்திர விம்பமானதுபுவியிலுள்ளவர்களின் கண்களுக்கு பிறையாகத் தெரியவேண்டுமானால் சூரிய அஸ்த்தமனத்தின் போதும் அதன் பின்னரும் சூரியனினால் ஓளிரச்செய்யப்படும் வானின் பிரகாசம் சந்திர விம்பத்தின் பிரகாசத்தைவிடக் குறைவாக இருக்கவேண்டும். இவ்விழிவுப் பிரகாசமுடைய சந்திர விம்பம் தோற்றுமளவுக்கு வானின் பிரகாசம் குறைவடைவதற்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் குறைந்தபட்ஷம் 15 நிமிடங்களாவது தேவைப்படும். ஆனால் கிண்ணியாவின் மேற்கு வானில் சந்திரன் 14 நிமிடங்களே தரித்திருந்தது.
மேலும் இழிவுப் பிரகாசம் கொண்ட சந்திர விம்பம் தோற்றுவதற்கு மேற்சொன்ன பெறுமானத்தில் சூரிய-சந்திர-புவி இடைக்கோணம் அமைகின்றபோது தொடுவனிலிருந்து சந்திரனின் இஸ்த்தானம் 10°:47':05" பார்வைக் கோணமாக ஆவது இருக்க வேண்டும். அதாவது சூரியன் தொடுவானில் மறைகின்றபோது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் போதியளவு கோண இடைவெளி இருக்கவேண்டும். ஆனால் குறித்த தினத்தில் கிண்ணியாவில் இப்பெறுமானம் 03°:14':56" ஆக மட்டுமே இருந்தது.
இவை மாத்திரமன்றி மிகத் தெளிவான வானிலை (ஒளி ஊடுபுகவிடுதல்), சாதகமான அளவு வளிமண்டல ஈரப்பதன் (ஒளி முறிவு), புறக்கணிக்கத் தக்க வளிமண்டல மாசுக்கள் (ஒளித்தடை) போன்ற சாதகமான நிலைமைகளின்போது மேற்சொன்ன பெறுமானங்கள் அனைத்தும் சாதகமாக அமையுமாக இருந்தால் மிகவும் ஒளிப்பலம் குன்றிய சந்திர விம்பமானது பிறையாகத் தோற்றம் தரும். ஆனால் குறித்த தினத்தில் இவை தேவையான பெறுமானங்களை எட்டவில்லை என்பதனால் அத்தினத்தில் தலைப்பிறை தென்படுவது சாத்தியமில்லை. இது வழமையான இயற்கையின் சாதாரண நிலைமைகளின் போதாகும்.
இருந்தபோதும், நாம் தலைப்பிறையைத் தேடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டோம். இதற்குப் பின்வரும் நியாயங்கள் உள்ளன.
இத்தினத்தில் சூரிய அஸ்த்மனத்தின் பின்னர் இலங்கையின் மேற்கு வானில் சுமார் 15 நிமிடங்கள் வரை சந்திரன் பயணிக்கின்றது. மேலும் தொலைநோக்கிகளுக்குத் தோற்றக்கூடிய சூரிய-சந்திர-புவி இடைக்கோணப் பெறுமானம் எட்டப்பட்டிருக்கின்றது. அசாதாரணமாக சந்திர விம்பம் தோற்றுகின்ற திரையான வானம் இருளடையுமாக இருந்தால், அதாவது சந்திரன் நிலைகொண்டிருக்கும் இடம் தவிர்ந்த வானின் ஏனைய பகுதிகள் அனைத்தும் மேகங்களால் சூழப்பட்டு இருளடையுமாக இருந்தால் ஒருவேளை சந்திர விம்பம் பிறையாகத் தோற்றம் தர இடமுண்டு. இது மிகவும் அசாதாரணமானதும் நிகழ்தகவு குறைவானதுமான ஒரு நிலைமையாகும். இருந்தபோதும் அசாத்தியமான இந்நிலைமைக்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே குறித்த தினத்தில் தலைப்பிறையைப் தேடும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதற்கிணங்க மக்கள் பிறையைத் தேடியதில் எவ்வித தவறும் இல்லை. எது எவ்வாறு இருப்பினும் சூரியன் அஸ்த்தமிப்பதற்கு முன்னரும், சந்திரன் அஸ்த்தமித்ததன் பின்னரும் தலைப்பிறை தென்பட முடியாது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய வெளிப்படை உண்மையாகும். இதற்கு இஸ்லாமிய மூலாதாரங்களிலோ விஞ்ஞானத்திலோ ஆதாரங்களைத் தேடவேண்டியதில்லை.
இரண்டாவது.
ஜம்இய்யதுல் உலமாவுக்கு இந்த தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார்?
இவ்வினாவுக்கு பதிலளிப்பதற்கு ஜம்இய்யதுல் உலமாவின் பொறுப்புநிலை பதவிகளில் உள்ளவர்களே பொருத்தமானவர்களாவர். இருந்தாலும் எனது கட்டுரைக்கான பின்னூட்டலின் வினா தொனித்ததனால் எனது பதிலை இங்கே பதிகின்றேன்.
இலங்கை முஸ்லிம்களின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது (Act No. 51 of 2000). 1924 ம் ஆண்டு முதல் இவ்வமைப்பு எட்டுத் தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டில் மார்க்க சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் அமைப்பாக இயங்கி வருகின்றது. அன்று முதல் இன்றுவரை இலங்கை முஸ்லிம் சமூகம் மானசீக ரீதீயாக இவ்வமைப்பின் தீர்மானங்களை அங்கீகரித்து சிரமேற்கொண்டு நடந்திருக்கின்றார்கள்.
ஒரு காணியில் 10வருடங்களாக ஒருவர் வாடகை செலுத்தாமலும், ஒப்பந்தம் இல்லாமலும் ஒருவர் குடியிரப்பாராக இருந்தால் அக்காணி அவருக்கே சொந்தமாகி விடும் என்றிருக்கும் போது 89 வருடமாக இந்நாட்டு முஸ்லிம்களின் மார்க்க விடயங்கிளில் அரசினதும் முஸ்லிம் சமூகத்தினதும் அங்கீகாரத்துடன் தலைமை தாங்கி வழிநடாத்தியதை விட இவ்வமைப்புக்குள்ள அதிகாரம் தொடர்பாக மேலதிகமாக எதுவும் தேவையில்லை என நினைக்கின்றேன்.
ஆனாலும், ஷவ்வால் தலைப்பிறை தொடர்பான தீர்மானம் ஜம்இய்யதுல் உலமாவினால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக, ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரியபள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் விவகாரத் திணைக்களம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தீர்மானமே இதுவாகும். எனவே ஜம்இய்யதுல் உலமாவை நோக்கி மாத்திரம் விரல் நீட்டுவது அவரவரது அறியாமையேயாகும்.
மூன்றாவது
மருத்துவரான எனக்கும் வானியலுக்கும் ஆன தொடர்பு என்ன?
இவ்வினாவுக்கு நான் விடை எழுதும்போது அது என்னைப் பற்றிய பெருமிதத்தை ஊரறியச் செய்வதுபோல அமைந்துவிடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக.
முதலில் ஒருவர் குறித்த ஒரு தொழிலை மாத்திரமே செய்யவேண்டும் என்றோ அல்லது ஒரு துறையில் மாத்திரமே பாண்டித்தியம் பெற்றிருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடோ விதியோ எங்கேயும் இல்லை என்பதனை குறித்துச் சொல்கின்றேன்.
எனது மருத்துவப் படிப்புக்கு சமாந்திரமாகவே பிறை தொடர்பான வானியல் தேடலும் ஆரம்பித்துவிடுகின்றது என்று சொல்லலாம். 1993 இல் ஆரம்பமான இத்தேடலில் பல படிகளைக் கடந்து வந்திருக்கின்றேன். அன்று அக்கரைப்பற்றில் எழுந்த சர்வதேசப்பிறை எனும் கருத்தியல் இந்த தேடலுக்கு வழிசமைத்தது. பிறை ஆய்வாளர் மன்றம் எனும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்து நாம் கற்றுக் கொள்கின்ற அதே வேளை கற்றவற்றை நமது மக்களும் அறியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். பிராந்தியத்தில் சம்மாந்துறை, நிந்தவுர், பாலமுனை, அக்கரைப்பற்று போன்ற ஊர்களில் பள்ளிவாயல்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல மாநாடுகளில் உரைகளையும் விவரணங்களையும் வழங்கினேன்.
2005இல் பிறை நிலா எனும் 30 பக்கப் புத்தகத்தையும், 2006இல் பிறைநிலா2006 எனும் 90 பக்க புத்தகத்தையும் எழுதினேன். தொடர்ந்து பிராந்திய வானொலி பிறைஎப்எம், தேசிய வானொலி, தேசிய தொலைக்காட்சியிலும் குறித்த விடயம் தொடர்பாக பேட்டிகளை வழங்கினேன். தினகரன், எழுவான் போன்ற போன்ற தேசிய நாளிதழ்களிலும் எனது கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.
இவை அனைத்தையும் கணக்கிலெடுத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் பிறைக்குழு அங்கத்தவர் எனும் உறுப்புரிமையை எனக்குத் தந்தது. அன்றுமுதல் இவ்வமைப்போடு இணைந்து எனது பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புத்தளம், பேருவலை, கொழும்பு போன்ற இடங்களில் பொதுமக்களுக்கும், ஷரீஆ துறை உலமாக்களுக்கும் தலைப்பிறை தொடர்வான விளக்கமளிக்கும் மாநாடுகளிலும், ஜம்இய்யதுல் உலமாவின் பிறைத் தீர்மான மாநாட்டிலும் உரையாற்றும் சந்தர்ப்த்தை அல்லாஹுத் தஆலா தந்தான்.
நான் ICOP இணையத் தளத்தை காப்பியடித்து மொழிபெயர்த்துத் தருவதாகவும் பலர் எழுதியிருக்கின்றார்கள். உண்மை அதுவல்ல. இவ்விணையத்தளத்தின் இஸ்தாபகரும் வானியலாளருமான முஹம்மத் அவ்தா எனக்கு ஆசான். அவரிடம் நான் பல விடயங்களைக் கற்றிருக்கின்றேன். அவரது அமைப்பில் நான் ஒரு உறுப்பினராகவும் இருகின்றேன். ஆதலால் அவ்விணையத்தில் தரப்படும் தரவுகளும் எனது விடயங்களும் ஒத்திருப்பதில் தப்பில்லை என நினைக்கின்றேன். அதுதான் உண்மை.
அவர் மட்டுமல்ல www.moonsighting.com இணைத்தின் இஸ்தாபகரும் வானியலாளருமான கலாநிதி காலித் ஷௌக்கத் அவர்களுக்கும் நான் மாணவன் அவர்களிடம் இருந்தும் நான் பல விடயங்களைக் கற்றிருக்கின்றேன். கடந்த ஹி1431ம் ஆண்டில் நான் கண்ணியத்திற்குரிய முஸ்லிம் வானியலாளர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களைப் பிரயோகத்தில் கொண்டுவருவதற்காக குறித்த ஆண்டின் ஷவ்வால் தலைப்பிறை கொழும்பில் எவ்வாறு தோற்றம் தரும் என்பதனை ஒரு வரைபாக ஆக்கி வாழ்த்து அட்டை வடிவில் கலாநிதி ஷௌக்கத் அவர்களுக்கு அனுப்பியிருக்கின்றேன். எனது வேலையை அங்கீகரித்த அன்னார் சிலாகித்து பதிலளித்தது மட்டுமல்லாமல் அவரது இணைத்தின் குறித்த மாதத்திற்கான பக்கத்தில் அதனைப் பிரசுரித்துமிருக்கின்றார். அந்த இணைப்பைத் தருகின்றேன் www.moonsighting.com/1431shw.html தரிசித்துப் பாருங்கள். அந்தப்படத்தில் ஆகில் அஹ்மத் – ஸ்ரீ லங்கா என அரபியில் பொறிக்கப்பட்டிருப்பதனை கவனிக்கத் தவறவேண்டாம்.
இத்தனைக்கும் நான் என்னை ஒரு வானியல் ஆராய்ச்சியாளராகக் கருதுவதில்லை. நான் இப்போதும் வானியல் ஆராய்ச்சியாளாகளின் மாணவன்தான். அவர்களிடமிருந்து அவ்வப்போது எனக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்கின்றேன். ஒரு ஆசானிடம் கற்கின்றோம் என்பதற்காக அவரைக் காப்பிஅடிக்கின்றோம் என கருதுவது பொருத்தமானதல்ல. நமக்கு முன்னுள்ளவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வெண்டும். அதனைத்தான் அல்லாஹ் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்ததாகக் கூறுகின்றான். எழுதுகோலும் எழுத்துக்களும் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கு அறிவு கடத்தப்படுவற்கான கருவிகளாகும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான்காவது
வானியலின் நம்பகத் தன்மை எத்தகையது?
இதற்கு மிக அருமையான ஒரு ஆதாரம் இருக்கின்றது. ஹஜ்ஜதுல் விதாவிலே றஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் புகாரியிலே வருகின்ற அறிவிப்பிலே “றஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “நேரம் சுழன்றுவிட்டது. வானம் புமியைப் படைத்த நாளில் இருந்தது போன்று வந்துவிட்டது.” பின்னர் மக்களைப் பார்த்துக் கேட்டார்கள் “இது எந்த நாள்?” அன்னார் நாட்களின் பெயர்களை மாற்றப்போவதாக எண்ணிய மக்கள் மௌனமாக இருந்தார்கள். அன்னார் மீண்டும் மீண்டும் கேட்டபோது “நீங்கள் கருதுகின்ற அதே நாள்தான் இந்த நாள்” என்று மக்கள் பதிலிறுத்தார்கள். “ஒ மக்களே! இந்த நாளை, இந்த மாதத்தை, இந்த நகரத்தைப் புனிதமாகக் கருதுவது போன்று ஒவ்வொரு முஸ்லிமுடைய உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்……..” என்று சொன்னார்கள்.
மேற்சொன்ன ஹதீஸில் சொல்லப்படுகின்ற நாள் ஹிஜ்ரி 10 துல்ஹஜ் 9ம் நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக் கிழமை 9ம் நாளாக இருக்கவேண்டுமாக இருந்தால் மக்காவில் அதற்கு முந்திய புதன் கிழமைக்கு முந்திய புதன் கிழமை மாலை சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் தலைப்பிறை காணப்பட்டிருக்க வேண்டும். அப்போது வியாழக்கிழமை துல்ஹஜ் முதல் நாளாக அமைந்திருக்கும்.
இந்த விடயத்தை தற்போதைய வானியலின் கணிப்பீட்டின்படி பின்நோக்கி மீட்டிப் பார்ப்போமாக இருந்தால், குறித்த புதன்கிழமை மாலை சஊதி அரேபியாவிலே தலைப்பிறை தோற்றம் தரும் என்பது எதிர்வு கூறப்படுகின்றது. 1424 வருடங்களுக்கு முந்திய உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை தற்கால வானியலால் அச்சொட்டாகக் கணித்துச் சொல்ல முடியுமாக இருக்கின்றது. அந்த ஹஜ்ஜதுல் விதா எனும் உரைகல் தற்கால வானியலின் தராதரத்திற்குச் சான்று வழங்குகின்றது. அவ்வாறாயின் தற்கால வானியலின்னால் தற்காலத்துக்குரிய விடயங்களை எதிர்வு கூறமுடியும் என்பதில் ஐயம் இல்லை. ஏற்றுக் கொள்வதும் அல்லாததும் அவரவரைப் பொறுத்தது.
ஐந்தாவது
வானியலின் விபரங்களை ஷரீஆ விடயத்தில் பிரயோகிக்க முடியுமா?
மனிதர்களையும் ஜின்களையும் தன்னை வணங்குவதற்காகவன்றிப் படைக்கவில்லை என்று அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான். தன்னை வணங்குவதற்காக மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனது இறுதி வேதத்தின் ஆரம்ப வெளிப்பாட்டில் நமது மாமூலான வணக்க வழிபாடுகள் எவற்றைப் பற்றியும் பேசவில்லை. மாறாக அவனது கண்ணியத்தைக் கொண்டு அவன் மனிதனுக்குக் கற்றுக்கொடுத்த இரண்டு வகையான அறிவுகளையும் கற்றுக் கொள்ளுமாறு கட்டளை இடுகின்றான்.
முதலாவது அறிவு – எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தது. அந்தக் கற்பித்தலை அல்லாஹ் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே ஆரம்பிக்கின்றான். இது புவியிலே வாழப்போகின்ற மனிதனுக்கு அவனைச் சூழவுள்ள பௌதீகப் பொருட்கள் பற்றிய அறிவு. இந்த அறிவை மனிதன் அவனது புவியின் மீதான கிரகப்பிரவேசம் முதல் இன்றுவரை தனது ஆய்வுகளின் மூலம் வளர்த்து சந்ததி சந்ததியாக கடத்தி வந்திருக்கின்றான். அறிவின் சந்ததிப் பாய்ச்சலுக்கு ஊடகமாக இருப்பது எழுத்துக்களும் அவற்றை எழுதிய எழுதுகோல்களுமாகும்.
இரண்டாவது அறிவு – மனிதன் தனது சுய ஆற்றலால் அனுபவத்தால் பெற்றுக்கொள்ள முடியாத அறிவு. அதுதான் வஹி. இந்த அறிவை றப்புல் ஆலமீன் ஒருவனால்தான் வழங்க முடியும். இதனைத்தான் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் றஸூல்மார்கள் சுமந்துவந்தனர்.
இவ்விரு அறிவுகளையும் ஒருங்கே சேர்த்துப் படிக்கும்படியே அல்லாஹ் ஸூறா அலக்கிலே ஏவுகின்றான். இது அவனை வணங்குவதற்கு இன்றியமையாத அடிப்படையான விடயமாகும். இறைவனை உரிய முறையில் உணர்ந்து வணங்கி வழிப்படுவதற்கும், அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்தனுப்பிய “கலீபா” எனும் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கும் இவ்விரு அறிவுகளும் இன்றியமையாதனவாகும்.
இவ்விரு அறிவுகளையும் ஒருங்கே கற்றுக்கொண்டபோது மத்திய காலத்தில் முஸ்லிம்கள் உலகில் ஒளி வீசினார்கள். இரு அறிவுகளையும் பிரித்து அல்லாஹ்வின் முதலாவது கட்டளைக்கே மாறு செய்ய ஆரம்பித்தபோது இந்தச் சமூகத்தில் அவலங்களும், ஓலங்களும் அதிகரித்துவிட்டது. சமூகம் கேவலப்பட்ட கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
எனவே, அல்லாஹுத் தஆலாவின் முதலாவது ஏவல்படி அறிவியலும் வஹியும் ஒன்றுசேர்க்கப்படவேண்டும். அப்போது மாத்திரமே இந்தச் சமூகம் தலைநிமிர்ந்த சமூகமாக தனது பணியைத் தொடர முடியும். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் எனது இந்த முயற்சியில் உள்ள குறைகளை மன்னித்து நிறைகளுக்கு நற்கூலி அளிப்பானாக.
Awesome doctor.thanx for ur explanation. Thawheeth jama ath people never accept these kind of matters,because they are very poor in knowledge and never mind about our scholars like Zakir nayek, Yousuful Karlavi & Rizvi mufthi etc.In past,they didnt consider about the crescent of SL but only follow the arab countries.Now, got a chance 2 blame on our ACJU and other muslims who are following the correct way. Dont worry about the feed backs of the foolish because,AT LEAST WE CANT ALIVE WITH THE FOOLISH IN THE HEAVEN TOO.
ReplyDeleteDear brother farhan, not every people in kinniya are thowheed. all masjid including thableeq masjid celebrated eid on thursday.
DeleteM. Farhan, r u not in tawheeth that means u don't believe in oness of Allah then who r u. I don't like to criticise the so called scholars but there are great ulamas, who still call themselves as students of knowledge. They are the real ulamas who follow the religion in its true perspective. Try to learn our religion the way how Rasoolulah taught his sahabas . bro learn n strengthen aqeedha first that is most important for amals to be accepted by Allah. Then you will realise who are the so called scholars n what is their status.
DeleteI learned newton law from Sir Isack newton so he was my teacher
ReplyDeleteI learned al jibra from Al jibra so he was my teacher
I am learning mostly from Wikipedia so wikipedia is my teacher
I can copy and paste all their articles
no problem
heeee heeeee
பிறையை மறைத்த விடயத்தில் மாபெரும் துரோகமும், நம்பிக்கை மோசடியும் நடைபெற்றுள்ளன என்பது இப்பொழுது பொது மக்களுக்கு தெளிவாகி விட்டது.
ReplyDeleteஇந்த நிலையில், நேர்மையாக, உண்மையை ஒத்துக் கொண்டு, பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்பதனை விட்டு விட்டு வானொலியிலும், ஊடகங்களிலும் துரோகத்தையும், நம்பிக்கை மோசடியையும் தொடர்ந்தும் நியாயப்படுத்த முனைவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
பிறை விடயத்தை கண்ணால் கண்டு தீர்மானிக்க வேண்டுமே தவிர, வான சாஸ்திரம் என்ற ஒன்றைக் கொண்டு மார்க்க விடயத்தில் வலுக்கட்டாயமாக திணித்து, கண்ணால் கண்ட பிறையை நிராகரிக்க காரணம் தேடுவது மார்கக்த்திட்கு முரணானது ஆகும்.
தயவு செய்து, மீண்டும் மீண்டும் சப்பைக் கட்டுக் கட்டி, ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லும் செயலில் ஈடுபட வேண்டாம்.
பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டல் மக்களின் மனங்கள் மாறலாம்.
Now this group is working under government, not for to take care of Muslims' Religious Activities.Very shame that they are involving to supporting the government's request even its against muslim community. there are more and more examples...
ReplyDeleteநான்காவது விளக்கத்தில் நீங்கள் கூறுவது என்ன ?
ReplyDeleteதலை சுத்துது.
சம்பந்தம் இல்லாமல் ஹதீஸ்களுக்கு விளக்கம் கொடுக்கும் உங்களது அதி மேதாவித்தனத்தை என்னவென்று சொல்வது.
ஐயா தயவு செய்து இத்துடன் நிறுத்தி விடுங்கள் மக்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய பொன்னான நேரத்தில் ஏன் இந்த வானிலை ஆராய்ச்சி.
தானறியாச்சிங்களம் எதுக்கோ சேதமாம்.
kannal kandathu appa enna? antha 18, 20 perum poiyyerhala? appady awarhalukku perunal eduppathatku thewaithan enna? shumma muslimgala kolappwenam!! mahinda perunal eduththa neengallam markkam pesha waratheenga?
ReplyDeleteடாக்ட்ர் அல்லாஹ உங்கள் அறிவை இன்னும் விருத்தி செய்வனஹா
ReplyDeleteஉண்மைல் அறிவான விடயம் தந்திர்கள் அஜசக்க்ல்லா
சில உள்ளம்கள் முத்திரை இடப்பட்டு உள்ளது அது திருந்த அவங்களுக்கோ அல்லாஹ உதவி செவானஹா ஆமீன்
பிறை பார்க்கவில்லை என்று கூறவில்லையே!. சாட்சிகளின் நம்பகம் போதாது என்றுதான் நிராகரிக்கப்பட்டது.
ReplyDeleteஇந்த ஆக்கத்தையும் அதற்கான பின் ஊட்டங்களையும் அவதானிக்கும் போது "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?" என்ற குர்'ஆன் வாக்கியத்தில் தெளிவு பிறக்கின்றது.
ReplyDelete``\\அசாதாரணமாக சந்திர விம்பம் தோற்றுகின்ற திரையான வானம் இருளடையுமாக இருந்தால், அதாவது சந்திரன் நிலை கொண்டிருக்கும் இடம் தவிர்ந்த வானின் ஏனைய பகுதிகள் அனைத்தும் மேகங்களால் சூழப்பட்டு இருளடையுமாக இருந்தால் ஒருவேளை சந்திர விம்பம் பிறையாகத் தோற்றம் தர இடமுண்டு.\\`` பிறை தெரிய வாய்ப்பு இருந்ததனால்தானே பிறை பார்க்கச் சொன்னீர்கள். பின்னர் தெரிந்த பிறையை ஏற்க மறுத்த உண்மையான காரணம் என்ன? பிறை விடயத்தில் உங்கள் பாண்டித்தியம் உலகறிய வேண்டுமென்றா? அல்லது ஒரு பாமரன் உங்கள் கணிப்புகளை மீறி பிறை கண்டதை ஏற்க உங்கள் கௌரவம் இடம் தரவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். விஞ்ஞானம் தவறிழைத்த சந்தர்ப்பங்கள் அனேகமுண்டு. ஒரு வைத்தியராக, டார்வினின் பிழையான கோட்பாடுகள் பற்றியும் இன்னும் பிற பல விஞ்ஞானத் தவறுகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
ReplyDeleteமுன்னரைவிட மிக நீண்டதான இவ்விளக்கத்தினை வாசிக்கும் போது இந்தப் பிறைக்குழுவானது படிப்பினை எதையும் பெறவில்லை என்றே எண்னத்தோன்றுகிறது. பிறைக்குழப்பம் ஏற்பட்டதற்கு தாங்கள் ஒரு காரணமேயில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய ஆய்வாளர் சிக்கலான விஞ்ஞான விளக்கத்தினைக் கூறி திசைதிருப்ப முயற்சிப்பதை இது படம்பிடித்துக் காட்டுகின்றது , எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக சில பின்னூட்டங்களைச் செய்யவேண்டியது கட்டாயமாகிறது .
ReplyDelete2008 ஆண்டு அக்கரைப்பற்றில் பிறை காண்பதில் ஏற்பட்ட குழப்ப நிலையை ஆய்வாளர் அறிந்திருந்தும், அதிலிருந்து எந்தவிதமான படிப்பினையும் பெறப்படவில்லை! சாத்தியமில்லாத பிறையை மீண்டும் தேடுவதற்கான அழைப்புகளை மேற்கொள்ளச் சொல்லும் விஷப்பரீட்சையை இவரது விஞ்ஞான அறிவு தடுக்கவில்லை என்னும் போது ஆய்வாளரின் இந்த விஞ்ஞான அறிவு சமூகத்தில் ஏற்படப்போகும் பிளவை தவிர்க்கப் பயன் படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது .
பிறை தென்படாதென்று தீர்க்கமாகச் சொல்லமுடியாமைக்கு, பிறைதென்படுவதற்கான அசாதரணமான சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர் குறிப்பிடுவதை காரணமாகக் கொள்ளமுடியாது ! ஏனென்றால் அசாதாரண நிலையிலும் பிறை பார்க்கச் செய்ய வேண்டும் , அதாவது ஹதீதின் படியுள்ள நபியின் கட்டளை என்னும் பேணுதலை கையாண்டிருந்தால் , பிறை தென்படுவதை சாத்தியமாக்கக்கூடிய தொழினுட்ப ஆலோசனையை அவர் வழங்கியிருக்கவேண்டும் . (அதைவிடுத்து இவரது முதலாவது விளக்கத்தில் இருந்து நாம் அறிந்தது இவர் சாட்சியங்களை குறுக்குவிசாணை செய்தததுவும் , அவர்களின் தகவல்களை பொய்ப்பிக்க நினைத்ததுமே !!) உதாரணமாகக் குறிப்பிடுவதாக இருந்தால்சூரியன் உதித்து 14 நிமிடங்களுக்குள் பிறைதென்படும் , அதனால் மஹ்ரிப் தொழுகையை பிற்படுத்தி தேடிப்பாருங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் ,ஒரு வேளை அவ்வாறு பகிரங்கமாக அறிவிக்காததற்கு வேறு ஏதும் காரணங்கள் இருந்தாலும் , சாட்சிகளை விளங்குவதற்காக கிண்ணியாவுக்கு அனுப்பிய மேமன் சமூகத்தின் பிரதினிதிகளிடமாவது சொல்லியிருக்கவேண்டும் ! அவர்களையாவது பிறைபார்க்கச் சொல்லியிருக்கலாம் ..!!! ஏன் அவ்வாறு நடைபெறவில்லை ?? மேமன் சமூகத்தின் பிரதினிதிகள் சாட்சியாளர்களை விளங்கமட்டும் அனுப்பப்பட்டமை பிறை தெரியாது என்ற முற்கூட்டியே தீர்மானம் எடுக்கப்பட்டமையை தெளிவாகப் புலப்படுகின்றது !! ஆகவே பிறைக்குழு கூடியமையும் ,பிறைபார்க்கச் சொன்னமையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட "பிறைபுலப்படாது" என்பதை தீர்க்கமாக முடிவு செய்துகொண்டுதான் என்று முடிவுகொள்ளவேண்டியுள்ளது .
2.0 சில ஐயங்கள்
இரண்டாவது விளக்கத்தில் ஆய்வாளரின் கூற்று ..
இவை மாத்திரமன்றி மிகத் தெளிவான வானிலை (ஒளி ஊடுபுகவிடுதல்), சாதகமான அளவு
வளிமண்டல ஈரப்பதன் (ஒளி முறிவு), புறக்கணிக்கத் தக்க வளிமண்டல மாசுக்கள் (ஒளித்தடை)போன்ற சாதகமான நிலைமைகளின்போது மேற்சொன்ன பெறுமானங்கள் அனைத்தும் சாதகமாக அமையுமாகஇருந்தால் மிகவும் ஒளிப்பலம் குன்றிய சந்திர விம்பமானது பிறையாகத் தோற்றம் தரும். ஆனால்குறித்த தினத்தில் இவை தேவையான பெறுமானங்களை எட்டவில்லை என்பதனால் அத்தினத்தில்தலைப்பிறை தென்படுவது சாத்தியமில்லை. இது வழமையான இயற்கையின் சாதாரண நிலைமைகளின்போதாகும்.
மேலே குறித்த மிகத் தெளிவான வானிலை , சாதகமான அளவு வளிமண்டல ஈரப்பதன் , புறக்கணிக்கத் தக்க வளிமண்டல மாசுக்கள் , அன்றைய தினம் கிண்ணியாவில் காணப்படவில்லையென்று எவ்வாறு முடிவுக்கு வந்தார் ! இவற்றை அளந்து பார்த்தாரா அல்லது சாதாரண அனுமானத்தில் அறிவித்தாரா ? தூரத்தில் இருந்துகொண்டு கிண்ணியாவில் இந்த நிலைகள் இல்லை என்று எவ்வாறு கூற முடியும் ??
அடுத்ததாக முதல் பதிவில் வெற்றுக்கண்ணுக்கோ தொலை நோக்கிக்கோ பிறை தென்படாது என்கிறார் . இரண்டாவது பதிவில் அசாதாரண நிலையொன்றில் தொலைகாட்டியால் காணலாம் என்கிறார் ! இதில் எதை ஏற்றுக்கொள்வது ?
முடிவுரையாக , இந்த வருடம் கண்ட படிப்பினைகளைக் கொண்டு அடுத்த வருடம் பிறைபார்த்தலில் சில தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும் . Dr.
ஆகில் இன் ஆய்வில், புலமையில் குறைகாண்பதற்காக இது எழுதப்படவில்லை , அவ்வாறு செய்யுமளவுக்கு எனக்கு அறிவு கிடையாது .மாறாக அவரது முயற்சி பாராட்டத்தக்கது . ஆனால் அவரது ஆய்வுகள் நடைமுறையில் பிரயோகிக்கப்படவேண்டும் என்பதே எமது அவா .
சில நேரம் கின்னியாவில் பிறை கண்டவர் பொய் சொல்லி இருக்கலாம் அல்லது பொய் சொல்லி இருக்கலாம். உன்மை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
ReplyDeleteஆகவே ஒருவரையும் குரை கூராமல் இருப்பதுதான் நல்லது என நினைக்கிரேன்.
excellent may Allah give you more knowledge doctor .... Guys please don't insult each others this is not a way of Rasoul SAW.... (we are one Muslim please don't divide it by tawheed, tableek, etc.. ) thanks
ReplyDelete1.ஒரு நம்பகமான இமாம் உட்பட பலர் பிறை கண்ட விடயத்தில் அவர்கள் பொய் சொல்கிரகளா?
ReplyDelete2. ஜமியதுல் உலமாவின் கிளை நிருவகிகளே பிறையை ஆதாரமான கடிதத்துடன் நிரூபணம் செய்தது?
3. 8ஆம் திகதி இரவு பிறை பார்த்ததில் இரண்டாம் பிரைக்கான வாய்ப்பே அதிகமாக இருந்தது. ஏனெனில் அது கிட்ட தட்ட அரை மணி நேரம் வரை தென்பட்டது ?
4. வானியலில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதே?
" மழை பெய்யும் என்ற எல்லா நாட்களும் பெயவதில்லையே "
5. பிரைக்கான சாத்தியம் இல்லை என்றால் கிண்ணிய மக்கள் கண்டது என்ன? வானியலின் படி அது என்ன?
6. கிழக்கு பகுதியில் பிரைக்கான வாய்ப்பு உள்ளது என்றால் சாத்தியமான பகுதிகளுக்கு உமது பிறைக் குழுக்களை அனுப்பி பிரச்சினையை இலகுவாக முடிதிருக்கலமே ?
7. இதே பிறையை உமது உலமா சபையினர் கண்டிருந்தால் என்ன பத்வா கொடுத்திருப்பீர்கள்?
8.இவ்வாறு வானியல் மாற்றம் ஏற்பட்டது முதல் தடவையா? அப்படியானால் மக்களுக்கு அறிவித்திருக்கலாமே?
Dear Dr. Aaqil,
ReplyDeleteI am sorry you have failed to notice my comment on your explanation - 01. I had asked you to do a similar astronomic calculation for the new moon of Shawwaal, 1433 - 2012 (last year).
I learn that last year Shawwaal new moon was not visible according to the astronomic calculation. Even so All Ceylon Jamiyyathul Ulama (ACJU) and others who had gathered at the meeting at Colombo Grand Masjid decided to end Ramadhaan with 29 days and to celebrate Eid Al-Fitr following the sighting report by few people in Colombo. Mawlavi Riyal who was presiding the meeting and few other Ulama did not agree and said as per astronomers the new moon was not visible on that day. Finally, Mawlavi Riyal and other Ulama walked out of the meeting and the announcement of accepting the sighting report was made on the Radio by Ash-Shaikh Rizwe.
Later, Mawlavi Riyal and other Ulama issued a book saying that the decision was not unanimous and Ash-Shaikh Rizwe made this decision arbitrarily, undermining the standards set by the ACJU with regard to the determination of Islamic months and by doing so, the President of the ACJU violated the set standards clearly. I am sure you would have gone through the book.
If sighting report of a new moon which, according to astronomers, was not visible, was accepted by Ash-Shaikh Rizwe for the determination of Shawwaal, 1433, why the sighting report of the new moon of this year Shawaal was rejected by him? This question needs an explicit and objective answer.
If you are genuinely and seriously committed to the Hilaal issue, please, do an astronomic calculation for the new moon of Shawwaal, 1433 as you did for this year's Shawwaal.
Kindly, note that I am neither supporting nor objecting any of your views. But I am in dilemma and wonder why the ACJU's president has such two contradicting stands. I am trying to make things clear among ourselves. I do hope if you do an astronomic calculation for the new moon of Shawwaal, 1433, it would clear the reasonable doubt that I and others have.
Jazaakallahu khaira.
Dear Dr. Aaqil,
ReplyDeleteKindly, clarify if your explanations and answers published on this site are official and authenticated explanations and answers of the ACJU - Hilaal Committee. As per the title of the news, it is an official one by the ACJU - Hilaal Committee.
I am certain that you understand the gravity of the issue.
Jazaakallahu khaira.
உலக்கை சபையை நம்பி ஹலால் பிலால் ஆனது, பிரை குறையானது, தற்போது இறையில்லம் காவிக்காடயர்களுக்கு இரையானது, இன்னும் இந்த உலக்கை சபைக்கு வக்காலத்து வாங்க இவனைப்போன்றவர்கள்...அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteDear Dr. Aqil, May Allah reward you for this effort.. Please ignore all these lousy comments of those who are so desperate and worrisome, not only because they had lost a precious day of fasting, but also misbehaved and created a FITNAH amongst the Ummah, which eventually lead to a mosque been attacked by the mobsters.
ReplyDeleteI would like to highlight one sad moment from UHUD,
A little dispute amongst Sahabas turned uhud into a huge turmoil and my beloved Prophet (SAW) got harmed.. :(
May Allah guide this ummah.. As if my beloved Prophet (SAW) sees this he will really be very very worried.. :(
JAZAKUMULLAH DR, NOW THE PEOPLE UNDERSTOOD WHAT THE CORRECT DECISION OF ACJU
ReplyDeleteI've seen many Thawheed brothers. Almost all of them a very stubborn and stupid when it comes to listening to the explanation of other scholars. They speak closing their ears. They do not listen or do not like to listen to others because their foolishness. I've seen many of their debates where they do not even understand very silly logic on earth. So I don't think it is a good idea to try to explain them about something in the sky. I think they are acting like this because they are jealous of ACJU and its reputation and recognition among the general public and even among non-Muslims.
ReplyDeleteSo in conclusion I think we should listen to Allah as He says in the Holy Quran that "If the stupids come to argue with you, Say 'salam' and go away" is the best solution for their silly questions....
Excellent explanation. Oru thalaimai thuwathitku kattupadamal perunalai kondadivittu thanpakkam thannai pazukathukolla try panrarhal. Netru pirandawan inru samuhathai kulappa unakku ennada aziharam? Pirai patriya arivu arawea illazawanuku menmelum explain thewai Illai. Pilaihal iruppin acju porupu eduparhal. Allahwum pozumanwan.
ReplyDeleteமுதலாவது கேள்விக்கான விடையில் மீண்டும் மழுப்பல். ஐயா ஆகில் அவர்களே , நான் ஒரு முஸ்லிம் . என் சகோதரன் ஒருவன் மாதத்தின் 29ஆம் நாளின் முடிவில் பிறை பார்த்தேன் என்று சொன்னால் நோன்பு பிடிப்பேன், நோன்பை விடுவேன். இல்லை என்றால் 30 ஆகப் பூர்த்தி செய்வேன். இது உலகின் எப்பாகத்தில் இருந்து பிறை செய்தி வந்தாலும் சரியே. இது உலக விடயம் இல்லை. இது மார்க்க விடயம். இதில் உங்கள் விஞ்சானத்தை திணிக்கவேண்டாம். விஞ்சானம் நாளுக்கு நாள் மாறும். புதிய கண்டுபிடிப்புகள் பழைய கண்டுபிடிப்புகளை பின்தள்ளும். இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் இல்லதவைகள் இன்று உள்ளன. இன்று இல்லதவைகள் இன்னும் நூறு வருடங்களில் வரலாம்.ஆனால் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்.அது என்றும் மாறாது. மாறாது. உங்கள் பகுத்தறிவை மார்க்கத்தில் நுளைக்காதீர்கள், அல்குறான் அல்ஹதீஸ் வழியில் தீர்வை தேடுங்கள். அதில் நீங்கள் சரியானவரானால் உங்களுக்கு இரண்டு நன்மை. பிளயானால் ஒரு நன்மை. அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்க அருள் செய்வானாக.
ReplyDeleteநன்றிகள் டொக்டர். நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும் என்ன கூறினாலும் கண்ட பிறை கண்டதுதானே. காணப்பட்ட பிறையை வானவியல் என்ற ஓர் வார்த்தையின் மூலம் மறுப்பது சரியா?. ஓர் உண்மையான நேர்மையான முஸ்லிமின் சாட்சி புனிதமானது. ஆனால் பிறை கண்டவர்கள் ஒருவரல்ல இருவரல்ல. இருபதிற்கும் மேற்பட்டோர் வெவ்வேறு இடங்களில் கண்டுள்ளனர். இங்கு கிண்ணியா உலமா சபையினால் விசாரித்து முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சிகளையும் மறுத்து விட்டு அனுமானங்களையும் எதிர்வுகூறலையும் அடிப்படையாகக் கொண்ட வானவியலை நம்புவது இஸ்லாத்தின் பார்வையில் சரியா?., வானவியல் சொல்வது அனைத்தும் சரியா... பிறையை கண்ட இருபதிற்கும் மேற்பட்டோர் பொய் சொல்லி விட்டார்களா..
ReplyDeleteThey took Wrong Decision and now try to hide that, There is a clear evidence that people seen cresent from their Eys.
ReplyDeleteYour explanation is totally waste.
Mr Aqil: your article is not a scientific, it is now LKG for every one, it is now very clear that you are the man made people fasting in Eid day. over 15 astronomers statements ere wrong in Saudi Arabia many times, still you are not a astonomer, only studying something here and there.
ReplyDeletewhat is your answer for Kinniya Jammiyathul Ulama letter? sent to you confirming moon sight? and what is your answer for over 20 people swearing they have seen the moo?
Pleae fear Allah, others in ACJU may taking you as a astronomer because Rizvi muthis not a mufthi, uttering bundle of unauthenticated Hadhees (Laeef) in his speeches.
வைத்தியரே உண்மையை மறைக்க ஏன் இப்படி பாடுபடுகிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் வைத்தியர் மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்ட பதவி. ஏனையவை தன்னால் சூட்டப்பட்ட பதவி நாமம். ஓகே
ReplyDeleteno need more explain for this thouheed jmath foolish people .because this people mint &heard are already sealed.so forget this mater Allah know everything.
ReplyDeleteபிறை விவகாரம் ஆய்வா குழப்பமா? ஆகில் அஹமத்துக்கு மறுப்பு!
ReplyDelete– அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி) -
நோன்பு எப்படி நம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ பெருநாள் எப்படி எம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ அதே போல பிறை பிரச்சினையும் சேர்ந்து எம்மை நோக்கி வந்துவிடுகிறது.
பிரைவிடயத்தில் அதிகமான வாத பிரதிவாதங்கள் இருந்த போதும் அதில் எது சரியானது அது பிழையானது என்பதை கொஞ்சம் யோசனை உள்ளவர்களும் உண்மையான உணர்வு மக்களும் புரிந்துகொண்டனர்.
இதில் ஜமிய்யதுள் உலமா சபையின் நிலைப்பாடு சரியா பிழையா என்பதை பொதுமக்கள் மனசாட்சி உறுதிப்படுத்தி இருந்தாலும் ஆய்வாளர்களுக்கு என்ற சில அடிப்படைகள் மூலம் ஜம்மிய்யதுள் உலமாவின் பிறை ஆய்வு சபையின் உறுப்பினர் சகோ ஆகில் அஹ்மத் அவர்கள் முன்வைத்த பிறை பற்றிய கட்டுரை சிலரை யோசிக்க வைத்தது என்பது உண்மையே.
இந்த அடிப்படையில் 07-08-2013 புதன்கிழமை அன்று மாலை பிறை வெற்றுக்கன்னுக்கு தென்பட வாய்ப்பு இல்லை என்று சகோ ஆகில் அவர்கள் கூறிய எமது ஆய்வுக்கு உடபடுத்திய போது அவர் வாதப்படியே பிறை தென்பட வாய்ப்பு உள்ளதாகவே வருகிறது.
சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம் ஒன்று: “இதே நேரத்தில் சந்திரனின் பிரகாசம் (Illumination) முழுநிலவின் பிரகாசத்தின் 0.52 வீதம் மாத்திரமே. இன்னும் சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது சூரியனுக்கு மிக அண்மித்ததாக தொடுவானைத் தொட்டுக்கொண்டிருக்கும். அதாவது சந்திரனானது தொடுவானத்திலிருந்து 02°:25′:00″ (2.5 பாகை) உயரத்திலேயே நிலை கொண்டிருக்கும்.
இத்தினத்தில் சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப் பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின் மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போது சந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன் பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.
சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் “
எமது பதில்: நீங்கள்
எமது பதில்: நீங்கள் கூறிய சந்திர சூரிய அஸ்தமன நேர அட்டவணைகளில் எமக்கு மாற்று கருத்து இல்லை ஆனால் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரனின் பிரகாசம் எந்த அளவு இருந்ததோ அதே அளவுதான் சூரியன் மறைந்து 10 நிமிடத்திற்கு பின்னாலும் பிறையில் இருக்கும் என்று நீங்கள் கணிப்பது பிழையாகும்.
ReplyDeleteசூரியன் மறைந்து ஏழு நிமிடத்தில் பிறையை வெற்றுகன்னால் பார்க்க முடியும் என்பது உருதிப்படுத்தபட்ட ஆய்வாகும்.எனவே சூரியன் மறைந்த உடன் பிறையின் பிரகாசம் இருந்ததைவிட 7 நிமிடத்தின் பின்பு பிறையின் பிரகாசம் வித்தியாசமாகவே இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்று இல்லை.
சகோ ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம் இர
சகோ ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம் இரண்டு: “சந்திரனின் பின்னணித் திரையான வானத்தில் சூரியனினால் ஏற்படுத்தப்படும் ஒளிர்வு (twilight) சந்திரனின் 0.52 – 0.53 வீத பிரகாசத்தை விடவும் அதிகமாகும். பட்டப் பகலில் வெட்டவெளியில் எரியும் மின்குமிளின் வெளிச்சம் போல என இதனைச் சொல்லலாம். இந்தளவு பிரகாசமான சந்திர விம்பம் தென்படுமளவு வானம் இருளடைவதற்கு முன்னதாகவே சந்திரன் மேற்கு வானை விட்டும் விடைபெற்று விடுகின்றது.”
ReplyDeleteஎமது பதில்:இந்த உங்களின் வாதம் சந்திரன்(பிறை) அதே இடத்தில உறுதியாக நிலைகொள்ளுமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் உங்களுக்கும் எனக்கும் உலகத்துக்கும் தெரிந்த விடயம் யாதெனில் சந்திரன் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு பாகை தூரம் சூரியனில் இருந்து விழகி செல்கிறது. இந்த சூரியனுக்கும் சந்திரனுகுமான இந்த அடிப்படையிலான இடைவெளியை ஆய்வு செய்தால் சூரியன் மறைந்து 12 நிமிடத்தில் மூன்று பாகை தூரம் பிறை விழகி செல்கிறது.இந்த அடிப்படையில் நோக்கும்போது சூரிய பிரகாசம் சந்திர பிராகாசத்தை மங்க செய்யபோவதில்லை.
அதே நேரம் சூரியனும் பிறையும் அஸ்தமிக்கும் நேரத்தில் கருத்துவேறுபாடு கொள்ளாவிட்டாலும் சூரியன் மறைந்ததின் பின் சந்திரனின் பிண்ணனி திரை யில் உள்ள வெளிச்சம் இவ்வளவுதான் இருக்கும் என்று ஏலவே கணிக்கப்பட்ட கணிப்புகள் மாறும் தன்மைகொண்ட உறுதியாக சொல்ல முடியாத கணிப்புகளாகும்.
இந்த விடயத்தை இன்னும் உறுதியாக சொல்ல வேண்டும் என்றால் பிறை கண்டவர்கள்கூட வானம் மிகவும் பிரகாசமாக இல்லாமலே இருந்ததாக கூறுகின்றனர்.அதாவது பிறை தென்பட வாய்ப்பு இல்லாத காரணிகளான பிறையின் முண்ணனி திரையான மேக மூட்டமோ சந்திரனின் பிண்ணனி திரையான அதிகபட்ச பிரகாசமா இருக்கவில்லை என்பதுவே நேரடி சாட்சிகளின் தகவல்கள் உருதிபப்டுதுகின்றன.
எனவே சூரிய அஸ்தமனத்தின் போது சூரியனுக்கும் சந்திரனுகுமான பிரகாசம் வேறு சூரியன் மறைந்த சில நிமிடங்களில் அந்த இரண்டுக்குமான பிரகாசம் வேறு என்பதை தாங்கள் அறியாமல் இல்லை.சூரியன் மறைந்ததில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் சூரியனின் பிரகாசம் சந்திர பிண்ணனி திரையில் மங்கி கொண்டே செல்லும் அதேவேளை பிறையின் பிரகாசம் கூடிக்கொண்டே போகும் என்பது உறுதியாகும்.
எனவே பட்டப்பகலில் மின்குமிழ் வெளிச்சம்போல சூரியனின் வெளிச்சம் பிறையை மறைத்தது என்று சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்கள் சொன்ன உதாரணம் பிறைவிடயத்தில் முற்றிலும் தவறானது.
பிறை பார்த்த சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தல்
பிறையை மறுக்கவேண்டும் என்ற நிலைப்
பிறையை மறுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே கேள்வி கேட்டு இருக்கிறார்கள் என்பதை அவர்களை கேட்ட கேள்விகள் மூலம் விளங்க முடிகிறது.
ReplyDeleteகிண்ணியாவில் குறித்த தினத்தில் தொலைக்காட்டி கருவிகள் மூலம் கூட பிறை தென்பாடாது என்ற கருத்தில் இருக்கும் ஜமிய்யதுள் உலமா பிறை குழு நோக்கத்தில் என்ன முறையான கேள்விகளை சாட்சிகளிடம் கேட்டிருக்கும் என்பதை தெளிவு படுத்தாமலே அறிய முடியும்.
பிறை பார்த்ததாக சாட்சி சொல்கின்றவர்களை எதில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமோ அதில் மாத்திரமே குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். நபி ஸல் அவர்கள் காலத்தில் காட்டரபி ஒருவர் பிறை கணடதாக சாட்சி சொன்னபோது நபி ஸல் அவர்கள் ஒரே ஒரு குறுக்கு விசாரணையே செய்கிறார்கள்.
“ நீ அல்லாஹ்வையும் ரசூலையும் ஏற்றுகொல்கிறாயா? என்ற கேள்வியை மட்டுமே நபி ஸல் அவர்கள் கேட்கின்றார்கள் ஆம் என்று அந்த காட்டரபி கூறியதும் பிடித்த நோன்பை விட்டுவிட்டு பெருநாளை அறிவிக்கின்றார்கள்.
இதில் நமக்கு அதிகாமான படிப்பினைகள் உள்ளன.குறுக்கு விசாரணை என்பது தேவையே இல்லை என்று நாம் கருதவில்லை ஆனால் நபி ஸல் அவர்கள் காட்டி தந்த வழிமுறையில் குறுக்கு விசாரணை இருக்க வேண்டும் என்பதுவே எமது கேள்வி.
பிறை பார்த்ததாக சாட்சி சொல்பவரை எவ்வளவு நேரம் பிறை பார்த்தீர்கள் என்று கேட்க முடியாது காரணம் பிறை என்பது எவ்வளவு நேரம் தென்பட வாய்ப்பு இருந்தாலும் அவர் கண்ட சில நேரத்தில் மேக மூட்டம் காரணமாக அந்த நபருக்கு தென்பாடாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.எனவே இந்த அடிப்படையில் பிறை மறையும் நேரம் வரை அவர் பார்த்திருக்க வேண்டும் என்று சொல்வது பிழையே.
ஆய்வா ஆதங்கமா?
பிறை தங்குவதற்
பிறை தங்குவதற்கான நேரம் கருத்துவேருபாட்டுக்கு உரியது.அதிலும் சகோ ஆகில் சொன்ன 14 நிமிடத்தில் அதிகமான அறிஞர்கள் முரண்படுகின்றனர்.
ReplyDelete8(மணி) வயதை அடைந்த பிறைகூட சூரியன் மறைந்து 16 நிமிடங்கள் தங்கி இருக்கவே வாய்ப்பு உள்ளதாக அறிவியல் கூறுகிறது.
ஆனால் இலங்கையில் கிண்ணியாவில் பிறை கண்ட போது அந்த பிறையின் வயது கிட்டத்தட்ட 16 மணித்தியாளங்கள் ஆகும்.16 மணித்தியால பிறை 30 நிமிடத்துக்கும் அதிகமான நேரம் தரித்து நிற்பதற்கான வாய்ப்பை விஞ்சானிகள் கூறுகின்றனர்.
இருந்தாலும் பிறை மறையும் நேரம் சூரிய அஸ்தமனத்தில் இருந்து 14 நிமிடங்கள் என்பதை உறுதியாக கூறி சகோ ஆக்கில் சொல்வதுபோல் கணித்தாலும் பிறை தென்பட வாய்ப்பு உள்ளது என்பதை மேலே நாம் கூறிய ஆய்வின் அடிப்படையில் கூற முடியும்.
எதில் கருத்துவேறு பாடு இல்லையோ அதை மறுத்துவிட்டு கருத்துவேறுபாடு உள்ள விஞ்சானம் உறுதிப்படுத்தியது என்று ஆதாரம் இல்லாத ஒரு ஆய்வை சகோ ஆகில் அவர்கள் முன்வைத்துள்ளார்.
உங்கள் ஆக்கம் ஆய்வின் வெளிப்பாடு அல்ல மாறாக ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு என்பதை மட்டும் உணர முடிகிறது.
பிரைவிடையத்தில் முக்கிய தரப்பான ஜமிய்யதுள் உலமாவின் எந்த தவறுகளையும் சுட்டிக்காட்டாது பிறை பார்த்த தரப்பை மட்டும் விமர்சித்துவிட்டு செல்லும் ஒரு ஆதங்க வெளிப்பாடே உங்கள் கட்டுரை என்பதை உணர முடிகிறது.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் இந்த ரமலானையும் பெருநாளையும் பொருந்திகொள்வானாக.
For அபு ஹயாம்
டொக்டரிடம் ஒரு கேள்வி.
ReplyDeleteநீங்கள் உங்களது வாதங்களை அறிவியலின் அடிப்படையில் முன் வைக்கின்றீர்கள். சில விஞ்ஞான கருத்துக்கள் பிந்நாளில் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க தான் சொல்வதுதான் சரி என்ற நிலைப்பாட்டில் நீங்கள் உள்ளீா்கள். கிண்ணியாவில் பிறையை பார்த்ததாக கூறப்படும் நபர்களில் ஓர் உலமா சாட்சியாக உள்ளார். நீங்கள் கூறுவது சரியாக இருந்தால் அவர்கள் பார்வையற்றவர்களா??? அந்த உலமா இறைவன் மீது ஆணையிட்டு கூறுகின்றார். அவர் கூறுவதை நம்புவதா இல்லை நான்கு சுவா்களுக்குள் நீங்கள் ஆராய்ச்சி செய்ததை நம்புவதா????
ReplyDeleteDr.Aqil Ahmad வானியலின் கணிப்பு படி உங்கள் கருத்து மிக சரியானதுதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் குதர்கம்,விறண்டாவாதம் பண்னாமல் உண்மையை பெய்யாக்க வேண்டாம் பிறை பார்த்த சுமார் 20 பேரையும் உங்கள் கணிப்பிட்டல் என்ன வென்று சொல்ல நினைக்கிறீர்கள். நீங்கள் உணமையாளராகயிருந்தால் பின்வரும் ஹதீஸ் போதுமன நீனைக்கின்றோம். அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(வானியலை 85% நம்புங்கள் அதை படைத்தவனை 100% நம்புங்கள்).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: புகாரி 1909)
This crescent sighting matter has become the talk of the town. lets forget it and to be vigilant and careful in the future instead of finding faults lets finds the facts.
ReplyDeleteI am from his area and I know this doctor as a person starving for a place in the society which the society has been continuously rejecting.
This doctor is a trouble maker in our area. He has been struggling to get the recognition among the society but failed. He speaks about Islam, Rasoolullah, Haram, Halal etc. but in reality he doesn't practice what he utters.
Trust me, I have no any hostility whatsoever about this guy. But he always in controversy. he doesn't deserve to be doctor as he has completely lost the professional ethics in all his dealings, speaking and writing.
Not only him, his mother, who is a retired teacher, too was a pain in the neck of our society as she invoked in politics publicly and created chaos among the community.
If anyone entertain this fellow, probably you will fall into trouble.
Please be aware!!!!
கண்களால் பலர் கண்டு சொன்ன சாட்சியங்களைத் தூக்கியெறிந்து விட்டு இன்னும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் அவல நிலை நம் மத்தியில் உள்ள படித்தவர்களிடமும் வங்து விட்டதே!
ReplyDeleteவெற்றுக் கண்களால்தான் பிறை பார்த்தோம் என்று ஒருவர் இருவரல்ல பலர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக சாட்சியங்களைப் புறந்தள்ளிவிட்டு பொய்யும் புரட்டும்மிக்க வானொலி உரைகளும் எழுத்துக்களும் ஏன்!
தானே தலைவன், தானே அறிவுமிக்கவன் என்பதை மற்றவர்கள் கண்மூடி ஏற்றுக் கொண்டு துதி பாட வேண்டும் என்பதற்கே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் முழுமையாகப் புறந்தள்ளப்பட்டுள்ளது என்பதை ஏனிந்த அறிவாளிகள் உணர்கிறார்களில்லை!
AAWW! Superb doctor, May allah enhance the Knoledge and wisdom to all of us and provide us with the perfect knoledge. We should well come constructive ccretisism
ReplyDeleteவானியல் எதிர்வுகூறல் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதல்ல. அது ஊகமேயாகும். வானியல் எதிர்வுகூறல்கள் பல தடவைகள் பொய்யாகிப் போவதை நாம் அன்றாடம் அறிந்துவருகிறோம். இதனால்தான் பிறையை கண்ணால் காண வேண்டும் என்பதை மார்க்கம் வலியுறுத்துகிறது. வெறும் ஊகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுமார் 15 பேர் (ஒரு மௌலவி உட்பட) கண்ணால் கண்ட சாட்சியத்துக்கு கொடுக்காமல் விட்டதன் பின்னணி என்ன?
ReplyDeleteகிண்ணியாவில் சுமார் 15 பேர் பிறை கண்டிருக்கிறார்கள். அதை கிண்ணியா உலமா சபை உறுதிப்படுத்தியிருக்கிறது. புத்தளத்தில் பிறை காணப்பட்டிருக்கிறது. மன்னார், முசலி போன்ற இடங்களிலும் பிறை காணப்பட்டிருக்கிறது. இத்தனை சாட்சியங்களையும் புறக்கணித்து வானியல் எதிர்வுறலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மர்மம் என்ன?
(08.08.2013) மஃரிப் நேரத்தில் பிறை பார்த்த அனைவரும் அப்பிறை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக தென்பட்டதையும் தலைப்பிறையாக இருந்தால் இவ்வளவு நேரம் நிலைத்திருக்காது என்பதையும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன்.
Dear brothers, please listen to bayan by Mufthi Yusuf, broadcasted on SLBC 10:00 AM. He admits the siting of cresent. He prays for kinniya people. Allahu Akbar.
ReplyDeletePlease accept the truths. Science is not a measurement for islam. If you want to follow science, accept the international cresent. World is one piece of earth according to science.
Allah knows best.
Meteorology department forecasts clear whether on a particular day with 0% of precipitations but, unfortunately there was 15mm of shower on that day.
ReplyDeleteSo, what a person with common sense would understand this situation? Do you think he would say that I, 100% believe the meteorology department so,I strongly agree there was no shower or I am a realistic person and I understand that the forecast for that particular day was incorrect.
முன்பெல்லாம் அரசியல்வாதிகள் மட்டும் தான் தங்களது சுய இலாபத்திற்காக முஸ்லிம் மக்களை ஏமாற்றி வந்தார்கள் ஆனால் இப்போது ஜம்இய்யதுல் உலமாவும் அரசியலில் இறங்கி விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் பண்ணி வருகிறது
ReplyDeleteபிறை விஷயத்தில் நீங்கள் விட்ட பிழையை முழு நாடும் அறியும் நீங்கள் செய்த தவறுக்கு மண்ணிப்பு கேட்டால் அது பெருந்தன்மை கொரவம் பாதிக்கும் என்பதற்காக தவறை மறைக்க வேண்டாம்
ஹலாலை விட்டீர்கள் பிறையை மறைத்தீர்கள் இப்போது பள்ளிகளையும் ஒவ்வொன்றாக மூட இணங்குகின்றீர்கள்
இவ்வுலகில் சால்வைக்குல் ஒழிந்து கொண்டு பாதுகாப்பாய் இருக்கின்றீர்கள் ஆனால் மறுமையில் சால்வைக்காரனின் உதவி கிடைக்காது
சகோ. ஆகில் அஹ்மத் அவர்களே! முதலில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு உபதேசிக்க விரும்புகின்றேன். காரணம் உங்கள் முதலாவது அறிக்கைக்கும் தற்போதைய உங்களின் அறிக்கைக்கும் இடையே காணப்படும் முரண்பாடு. அதில் நீங்கள் வியாழன் பிறை தொலை நோக்கிகளுக்கும் தெரியாது என்று எழுதியுள்ளீர்கள். இங்கு தொலை நோக்கிகளுக்குத் தெரியும் என எழுதியுள்ளீர்கள்.ஏன் இந்த முரண்பாடு? ஒரு வைத்தியரான நீங்களே இப்படி முரண்படும் போது பிறை கண்டதற்கான சாட்சியம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக முன்னர் நீங்கள் குறிப்பிட்டுள்ள சரதாரண பொது மக்களின் சிறு சிறு சாட்சிய முரண்பாடு (நிமிட முரண்பாடு) ஏற்படுவது என்பது வெகு இயல்பானதே! இதை நீங்கள் நெஞ்சத்தில் தூய்மையான எண்ணமுள்ளவராக இருந்தால் புரிந்து கொள்ள வேண்டும். இன்னுமொன்று.வைத்தியரையா! நீங்கள் எல்லோருமே ஒன்றை மறுக்கவில்லை அதாவது அன்று 14 நிமிடங்கள் குறைந்தது பிறை வானில் தென்படும் என்பதை. வைத்திரையா, உங்களுக்கும் உங்கள் வழிகாட்டிகளான அந்த உலமாத் தோழர்களுக்கும் நபியவர்கள் “வெற்றுக்“ கண்ணால் தான் பிறையைப்பார்க்க வேண்டும் என்று அடைமொழி போட்டு சொன்னார்களா ஐயா? அவர்களது ஹதீஸ் ” பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள் பிறையைக் கண்டு நோன்பை முடித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான். வெற்றுக் கண்ணால் என்பது பிற்கால மத்ஹபுகளுடைய இமாம்கள் கொடுத்த விளக்கம். அவர்கள் இவ்விளக்கத்தைக் கொடுத்தமைக்கான பிரதான காரணமே உங்களைப் போன்று வானியலாளர்கள் என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு மனோ இச்சையின்படியும் பிறரை எதற்காகவோ திருப்திப்படுத்துவதற்காகவும் தீர்ப்புவழங்குபவர்களின் வலைக்குள் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான். அன்றிருந்த பொதுமக்களுக்கு மிக இலகுவான வழி வெறும் கண்ணால் பார்ப்பதுதான் என்பதனாலும் தான். ஆனால் உங்களைப் போன்ற பலர் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல பிறை பார்ப்பதற்கு தொலை நோக்கி போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்த அந்த ஹதீஸில் எந்தத் தடையும் இல்லை. தொலைநோக்கி மூலம் எமது கண்கள் பார்க்காமல் எமது மூக்குகளா பார்க்கும்? ஏன் நீங்களெல்லாம் இந்த நவீன காலத்தில் இருந்து கொண்டு இது பற்றிச் சிந்திக்கிறீா்கள் இல்லை? இப்படிச் செய்தால் பிறைக்கணிப்பு மிகத்துல்லியமாக இருக்குமே.முரண்பாடுகளும் இல்லாமலாகுமே. இது பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு பேரறிஞர் யுசுபுல் கர்ளாவியின் பிறை பற்றிய ஆய்வைப் பார்க்கவும். இதனை விட்டுவிட்டு யுகங்களின் பின்னால் செல்லாதீர்கள். அன்று 14 நிமிடங்கள் இருந்த பிறையை வெறும் கண்களுக்குக் கூடத் தெரியச் செய்வதற்கு அல்லாஹ் சக்தியுள்ளவன் என்பதை நீங்கள் மறுக்கிறீா்களா? சில வேளைகளில் பெரும் அறிவியலாளர்களால் கூட எதிர்வு கூற முடியாத பல அற்புதங்கள் நிகழ்ந்து விடுவது உண்மை என்பதை ஒரு வைத்தியரான உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லையே. தயவு செய்து இனிவரும் காலங்களில் முன் முடிவுடன் இருக்காதீர்கள். இக்கட்டான கால கட்டத்தில் இந்த உம்மத்தை ஒன்றுபடுத்தும் சாத்திய வழிகளைத் தேடுங்கள்.
ReplyDeleteMohammed Farhan's exclamation has no basis simply because the author has just tried to fool the public by giving certain naked astronomical facts which cannot be accounted as final, against Almighty Allah’s destiny. One should understand that the eyewitness will always supersede any of the material evidence by way of deciding a critical factor under Islamic jurisdiction. Hence, instead of challenging one’s own capability it would be sound enough as a sincere Muslim Entity that ACJU apologize for what has happened instead of rendering fault interpretations through so-called experts. Allah knows the best.
ReplyDeleteடாக்டர் (Doctor) அவர்களிடம் ஒரு சின்ன கேள்வி...
ReplyDeleteபிறை விடயத்தில் ஹதீஸை பின்பற்றவேனுமா அல்லது அச்ற்றோநோமி (Astronomy) ஐ பின்பற்றவேனுமா என்ற கேள்விக்கு பதில் தரவும்.
அப்படியாயின், மார்க்கத்தில் எல்லாவிடயங்களிலும் ஹதீஸ்களை புறம் தள்ளிவிட்டு சயன்சை (Science) பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா? Science இல் ஓகே என்றால் மார்க்கத்தில் ஓகே, Science இல் ஓகே இல்லாவிட்டால், அந்த விடயத்தில் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படியா? இன்று முதல் ஒரு ஜெனரல் ருளே (General Rule) ஐ உருகாக்குவோமே?
நாட்டில் ஒரு கூட்டம் நட்சத்திர கணக்கு பார்த்து பிறையை துள்ளியமாக கணிப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் கணக்கு Science க்கு ஒத்துப்போனால், அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
Doctor அவர்களே!
உங்களுடைய அறிவை பாராட்டுகிறேன். உங்களை போன்ற நிறைய படிச்ச இஸ்லாமியர்கள் நம் சமூகத்துக்கு தேவை. ஆனால், மார்க்க விடயத்தில், அல்லாஹ் சொன்னது தான் சட்டம். ரசூலுல்லாஹ் சொன்னது தான் மார்க்கம். தெளிவான் ஆதாரம் இருந்தால், அதனை பின்பற்றுவது ஒரு முஸ்லிமின் கடமை. அது அறிவுக்குப்பட்டாலும் சரி, அறிவுக்குப்படாவிட்டாலும் சரி. That's our belief. We believe in it. Do you agree with me?
கொஞ்சம் நுணுக்கமான ஆழ்ந்த சிந்தனையுள்ளவர்கள் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். தரமான பதில்!
ReplyDeleteபழி சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். ஏனெனில் அவர்களின் நோக்கம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது..
அவர்களின் ஒரே நோக்கம் உலமா சபையை குறை சொல்வது.. அதற்கு பல காரன்கள் இருக்கிறது...
அவர்களின் பத்து பதினைஞ்சு உலாம்மக்களிடம் நம்பிக்கை வைப்பதை விட ஜம் இய்யதுல் உலமாவின் 10ஆயிரத்திர்கும் மேற்பட்ட தலைமைக்கு கட்டுப்பட்ட உலமாக்களிடம் நம்பிக்கை வைப்பதே சிறந்தது.
Anbin sahootharar.
ReplyDeleteNeengal eluthiya aakkam thelivaanathu.
Allah ungalukku arul puriyattum.
Oru var 10 varudam irunthaal sontha maahum enbathu NAATTIN SHATTAMAAHA IRUKKALAAM. AANAAL ISLAAMIYA SHATTAP PADI ATHU APPADI YILLEY.
Pirey kaanak kuudiya vaayppu shiriyala venum irunthathu yenbathey veythu 10 20 per vellaahi yenru shatthiyam seythathey veythu perunaal kondaadi irunthaal intha pilavu vanthu irukkaathu. Shaatchi kuuriya varhal neram solvathil thavaru hiraarhal yenbathey veythu pirey kandathu poyyaahaathe. HADISEY NADEY MUREY PADUTHTHI IRUNTHAAL ATHU THAAN THEERVU muslim shaatchi sonnaal perunaal.
Thani theer maanam alla engireer hal THALEYVARUKKU MULU ATHIKAARAMUM VEYThu MUDIVIL EDUKKALAAM.
Pileyaana mudivukku vantha pin ellorum mashuura seythaalum shariyaanathey THALEY VAR EDUTHU IRUKKALAAM.
NAAM PERUNAAL KONDAADIYATHU PAAVAM HARAAM THAVBA SEYYUNGAL KALAA SEYYUNGAL KINNIYAVUKKU NAAM THAAN TSUNAMIYIN POOTHU HELP PANNINATHU enbathellaam shiru pilley thanam.
Seythathey solli kaattupavan vaandi yeduththu meendum shaappiduvathu poolaahum.
Vilakkam gal thodarumaanaal kulappangal thaan thodarum.
Thaley var urayil VETRUMEYIL OTRUMEY ENAVE PERUNAAL EDUTHAVAR HALUM SHARI THALEY VARUKKU KATTUP PATTATHUM SHARI ENRU IRUKKA LAAME.
ASAR THOLUHEY SHILA SAHAABI VANTHU THOLUTHAAR HAL SHILA SAHAABIHAL IDAYIL THOLUTHAAR HAL RASULULLAH 2um SHRI ENRA HADIS EY EMAKKU SONNAVARE THALEY VARE MURANAAHA PESHI THAN PAKKAM MATTUM NIYAAYAM IRUPPATHAAHA KARUTHA LAAMA?
89 VARUDAMAAHA SEYTHATHAAL MANITHANUKKU 90 MUREY THAPPU VARAATHA?
ANTHA MUREY MATTUM ATHEY THAPPAAHA KARUTHIYAVARHAL MUTTAALHALAA?
MEENDUM NEENGAL NALLA MUDIVUHAL EDUKKA VENDUM ENBATHAT KAAHA THAANE VIMARSHIKKIROOM.
VITTAAL YAARUM PESHA MAATTAARHAL ENRU KAVANA YEENAM ATHI KARIKKAATHAA?
Manithan thappu seyvaan mannippum undu.
Thaley var ethu seythaalum kattup patte aahanum yenbathu Rasulullah kattalayil illey. Karuthu veru paada ALLAH VIN OR THUUTHARIN THEERVUKKU POOVOOM. appadi paarthaalum pirey kanda thahaval unmeyaanaal perunaalaahum.
Oru thee muuttithsleyvar athil paaya sonnapothu shahaabihal RASULULAH vidam senraarhal. Appadi kattuppadaathu shari enraarhal. Naangalum perunaal eduppathey vittu marunaal eduppoom enrum karuththuhalum aaraayappattu. Mele sonnathu poonru pala hadis kaley parisheeliththu. Kinniya jammiyathul ulamaa vey thodarpu konra pin thahaval uruthiyaahiya pinbu thaan theermaaniththoom.
Ethu vetrumey, pirahu otrumeyaaha iruppoom. Aduththamudivu neengal edukkum poothu nithaanamaaha edungal. Naangal shariyaanathukku kattup padu voom.
Ithu kilaafath aatchiyoo ACJU kilaafath thaley varu alla. ACJU Maarka theerppu halukku agihaaram petraathu enbathatkaaha kilaafath aatchi yaahaathu. ATHAN THALEY VARUM VETRUMEYIL OTRUMEY YEY KADEY PIDIKKANUM.
PIRARUKKU MATTUM UPATHESHEM SEYTHU THAAN MAATRA MAAHA NADANTHU POY SOLLIYAAVATHU THAN NILEY PAATTEY NIYAAYAP PADUTHUVATHAAL THAAN ATHI HA COMMENTS ETHIRAAHA ADIKKIROOM. THAPPEY THIRINTHI KOLVOOREY VARA VETKIROOM.
ANBIN SAHOOTHARARE UNGALEY POONRA ARI VAALIHAL SAMUUHATHUKKU THEVEY. ARIVEY PAYAN PADUTHI ISLAAM ENRA VATTATHUKKUL MUDIVU EDUNGAL. ALLAH ARUL PURIYATTUM
டாக்டர் அவர்களே ! நேரத்தை வீணடிக்க வேண்டாம் , பிடிவாத மூடர்கள் இவ்வுலகில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் . அல்லாஹ் போதுமானவன் . அவன் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான். தாங்கள் அறிவாளிகள் என்ற நினைப்பில் குற்றம் பிடிக்கின்றோம் எனத்திரிபவர்கள் அதை தொழிலாக செய்வதால் அவர்களை திருத்தவே முடியாது ...உண்மையை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்
ReplyDeleteதம்பி ஆகில்,
ReplyDeleteஉங்களுக்கு வானியலை 100% அச்சொட்டாக சொல்லமுடியும் என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படியானால் பிறை பார்க்க அவசியம் இல்லையே. Calendar படியே எல்லாம் செய்யலாமே.
What a explanation! It's good for only educated people but uneducated people never accept these kind of arguments! They always reject trues!
ReplyDeleteintha Roshan enum piththanin moolayyil pinnaalirunthu yaaro milakaay araikkiraarkal.avarkalthaan salafikal.Roshan enum intha palapeyar mosadippervali,aduththavarkalai pattri kurai theduvathile kaalaththai selavalikkiraar.nichchayamaaka pinnakku undaakkuvathanaal ivan perum sambalam haraam aakum.
ReplyDeleteThere are two groups:இரண்டு குரூப் இருக்காங்க.
ReplyDeleteSome people want to follow Islam as per Quran and Hadeeth. Some people want to follow Islam as per modern science.
சிலருக்கு குரான் ஹதீஸ் படி இஸ்லாத பின்பற்றனும், சிலருக்கு modern science படி இஸ்லாத பின்பற்றனும்.
If you are stubborn about Quran and hadeeth, then you are not an ACJU follower. If you want to believe in moderns science and astronomy, then, you are the real follower of ACJU - I'm saying that this is in the subject of new moon. நீங்க குரான் ஹதீஸ் படி தான் இஸ்லாத பின்பற்றுவேன் என்று சொன்னா, நீங்க ACJU follower இல்லை. நீங்க modern science ஐ தான் பின்பற்றுவேன் என்றால், நீங்க தான் ACJU follower - இது பிறை விடயத்தில்.
When people think in two different directions; they are stubborn about their decisions,and they don't wanna compromise, then you cannot bring them together. இருவர் இரண்டு வித்தியாசமான முறையில் think பண்ணினால், அவர்களை ஒன்று சேர்க்க முடியாது.
It's up to you to decide whether to follow ACJU or not. You wanna be a Quran-hadeeth follower or science follower? You decide. நீங்க தான் முடிவு பண்ணனும் - நீங்க (பிறை விடயத்தில்) ACJU போல்லோவரா இல்லை குரான் ஹதீஸ் போல்லோவரா? நீங்கதான் முடிவு பண்ணனும்.
No need to fight. Let's be in harmony. You cannot force one to follow you. Some people decide after learning/discussions. Some people decide before learning/discussions. You cannot force one to agree with you. It's all dependent on one's way of thinking. Let us always respect other's decisions and feelings, whether we like it or not. சண்டை பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரை வற்புறுத்தி ஒருவிடயத்தில் இணங்க செய்ய முடியாது. சிலர் முடிவு எடுத்து விட்டு கலந்தாலோசிக்கிறார்கள், சிலர் முடிவு எடுக்க கலந்தாலோசிக்கிறார்கள். உங்களால் ஒருவரை வற்புறுத்தி agree பண்ண வைக்க முடியாது. அடுத்தவர்களின் கருத்தை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டல்லும் நாம் அதனை மதிக்க வேண்டும்.
A tableegh brother should respect the faiths and beliefs of a tawheed/tareeqa/other group individual. Likewise, a tawheed brother should respects the faiths and beliefs of tableegh/tareeqa/other group individual, and so on and so forth. If you understand this, you will not quarrel or fight. As you know, we are facing some problems in the country, because some Buddhist brothers do not want to respect our feelings, beliefs and faiths. ஒரு தப்லீக் சகோதரர் ஒரு தௌஹீத் சகோதரரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். அதேபோல், ஒரு தௌஹீத் சகோதரர் ஒரு தப்லீக் சகோதரரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். இது எல்லா இயக்கம் தரீக்காகளுக்கும் பொருந்தும். இதை நாம் புரிந்து கொண்டால் நாம் இன்று அடித்துக்கொள்ள மாட்டோம். நாம் இன்று ஒருசில பெருன்பான்மை சின்கல சகோதரர்களால் பிரச்சினையை முகம் கொடுக்க பிரதான காரணம் அவர்கள் எங்களுடைய உணர்வுகளை புரிந்து கொல்லாமையே.
Always remember "united we stand, divided we fall". End of the day, we're all Muslims. We all desire to go to the Heaven. May Allah fulfill our desire! ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். நாம் எல்லோரும் முஸ்லிம்கள். நாம் எல்லோரும் சொர்கத்துக்கு போக விரும்புறோம். அல்லாஹ் நம்ம ஆசையை நிறைவேற்றுவானாக!
assalamu aleikum Dr;vaniyel pattriye ugkel muyetsikku vazththukkal
ReplyDeleteugkel karuththup padiye pirei "kanevum" vaipundu ,
akeve paler athanei kandullarkal.
islaththil imanudan thoderpudaye vidayei onru "ORU YUTHTHA KALETHTHIL AYUTHAGKALEI ILENTHU THAN KOLLAPPADAP POKIROM ENRE NILEIL ULLA ORU KAPIRANE MANITHAR ANTHA NODIYEI NAN ISLATHTHAI ETHKINREAN ENRU SONNSL AVEREI APPADIYE VIDDU VIDA VENDUM"
averei kolei seivethu islaththil kuththamakum (aver kollap padappokirar enru unernthu thappika sonnara, allathu unmeyileye islaththai etrara?enru aarayekkudathu)
athe polthan oruvero allathu palero nagkal pirei parththathaka allah meethu saththiyei pannij sollum muslimkaleithan nampa vendumm athil aver poi saththiyem seithal athatku allah thandanei vazagkuvan. ithuthan islamiye adippadail oru muslimin imanaka irukka vendum.
vaniyelil padi sollappadum aneiththume nadakkum enru yaralum uththarevatham thare mudiyathu. marake islaththil ithu iwaruthan enru thidda vaddamaka kuremudiyum. athu oru p;othum poikkathu enenil islam poorththiyakkap padda markkamakum
ella vetteyum allah nankarinthaven
Dear Brother Farhan, Allah shows to people whose poor knowledge in Quraan & Sunnah. Please try to learn Quraan & Sunnah instead of follow your leaders.
ReplyDeleteThere is a Strong Evidence that people seen cresent.
Not only thowheed Jamath Celebrated Eid on 08/08/2013, Thabliq and Other Jamath also Celebrated in the East and other part of the country whos knows Quraan & Sunnah.
Please don't try to Hide the Fact.
என்.எல்.எம்.நயீம் (41) மேசன்
ReplyDeleteஅன்று நோன்பு துறந்துவிட்டு மக்ரிப் தொழ வந்து கொண்டிருந்தேன். நண்பர் முபாரக்கும் என்னோடு இணைந்து வந்தார். அப்போது நான் இன்றைக்கு பிறை தென்படும் சாத்திமில்லை போல்தான் தெரிகிறது எனச் சொன்னேன். இருப்பினும் எதற்கும் தேடிப் பார்ப்போமே இருவரும் கூறிக் கொண்டு வானத்தைப் பார்த்தோம். எனக்கு பிறை தெரியவில்லை. ஆனால் முபாரக்தான் என்னைக் கூப்பிட்டு பிறை இருக்கும் சரியான இடத்தைக் காட்டினார். மரத்துக்கும் வீடு ஒன்றின் முகட்டுக்குமிடையில் பிறை தெரிந்தது. இதனால் நான் மிகவும் சந்தோசமடைந்தேன்.
அப்போதுதான் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மஹ்பூப் வந்தார். அவரோ வேறு ஒரு திசையில் பிறையைத் தேடினார். நாம் அவரை அழைத்து பிறை இருக்கும் சரியான இடத்தைக் காட்டினோம். அவரும் பிறையைக் கண்டு சந்தோசப்பட்டார். அங்கு வந்த ஜுஹார்தீனையும் கூப்பிட்டுக் காட்டினோம். 6.35 அல்லது 6.36 அளவில்தான் நாம் கண்டிருப்போம்.
வல்லாஹி..அல்லாஹ் மீது ஆணையாக நாம் பிறையைக் கண்டோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிறை விடயத்தில் பொய் சொன்னால் என்ன நடக்கும் என்பதை தெரியாதவர்களல்ல நாம்.
ஜாபிர் நளீமியிடம் இதுபற்றி சொன்னதும் அவர் கொழும்புக்கு தொலைபேசியில் பேச வைத்தார். அங்கிருந்து கதைத்தவர் மிகவும் வேகமாகக் கதைத்தார். அவர் கதைத்தது எதுவுமே எனக்கு விளங்கவில்லை. அவரது குரலுக்கு மேலாக ஆட்கள் கதைக்கும் பெரும் சப்தம்தான் கேட்டது.
என்னோடு போனில் பேசியவர் என்னை மதித்து கௌரவமாக பேசவில்லை. ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். நான் மேற்கொண்டு அவருக்கு எதுவும் சொல்லாது ஜாபிர் நளீமியிடம் போனைக் கொடுத்துவிட்டேன்.
பின்னர் மேமன் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வந்தார்கள். நிறைய கேள்விகள் கேட்டார்கள். தனித்தனியாக விசாரித்தார்கள். பிறை எப்படி இருந்தது? என்ன வடிவில் இருந்தது? எந்தப் பக்கம் இருந்தது? என்றெல்லாம் கேட்டார்கள். பிறையைக் கண்ட இடத்தையும் கூட்டிப் போய்க் காட்டினோம். எம்மோடு தமிழில் பேசிவிட்டு அங்கு பாய் மொழியில் பேசினார்கள். இதனால் எனக்கு கோபம்தான் வந்தது.
எனக்கு இஸ்லாம் பற்றிய தெளிவு நன்கு இருக்கிறது. நான் வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சி கேட்பவன். பிறையைக் கண்டு நோன்பு பிடிக்க வேண்டும். பிறையைக் கண்டு நோன்பை விட வேண்டும் என்றுதானே இஸ்லாம் சொல்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்.
உலகமே தேடிய பிறையை எனது கண்ணில் பட வைத்ததற்காக நான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் ஈடாகாது. பலர் என்னைத் தொடர்பு கொண்டு உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம் என்று சொன்னார்கள். துஆ செய்தார்கள். ஆனால் இன்னும் சிலரோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு தூஷண வார்த்தைகளால் பேசுகிறார்கள். கொல்லுவோம் என்று கூட மிரட்டுகிறார்கள். நான் ஒருபோதும் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படப் போவதில்லை. சத்தியத்தைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்.
ஏ.ஜுஹார்தீன் (56) மீன் வியாபாரி
ReplyDeleteநோன்பு துறந்தவுடன் மஃரிப் தொழ வந்து கொண்டிருந்தபோதுதான் எனக்கு பிறையைக் காட்டினார்கள். சில நிமிடங்கள் நாம் பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இகாமத் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நாம் பிறையைப் பார்த்தோம். பிறையைப் பார்த்துவிட்டு நாம் தொழ வந்தபோது முதலாவது ரகாஅத் முடிந்துவிட்டது.
தொழுதுமுடிந்தவுடன் நான்தான் முதன்முதலாக ஜாபிர் நளீமியிடம் பிறை கண்டதைச் சொன்னேன்.
மஃரிப் தொழுகை முடிந்த பின்னர்தான் பிறையைக் கண்டதாக நான் சொன்னதாக டாக்டர் ஆகில் என்பவர் கட்டுரை எழுதியுள்ளதாக பலரும் என்னிடம் வந்து கேட்கிறார்கள். அல்லாஹ் மீது சத்தியமாக..இந்தப் பள்ளிவாசலில் இருந்து சொல்கிறேன்...நான் ஒருபோதும் அப்படிக் கூறவில்லை...
டாக்டர் ஆகில் என்பவர் என்னோடு பேசியதாக எனக்கு ஞாபகமில்லை. அவரை எனக்குத் தெரியவும் மாட்டாது. எனது தொலைபேசி இலக்கத்தை எல்லோருக்கும் கொடுத்திருந்ததால் பலரும் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். அவர்களில் ஒருவராக டாக்டர் ஆகில் இருக்கக் கூடும். ஆனால் நான் ஒருபோதும் தொழுதுவிட்டு வந்து பிறை பார்த்ததாக கூறவில்லை.
ஏனெனில் நான் மட்டும் பிறை பார்க்கவில்லை. தொழுகைக்காக வந்த வழியில் பலர் கண்டோம். இந்த விடயத்தை கட்டாயம் ஊடகங்கள் மூலம் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். நீங்கள் இந்த விடயத்தை கண்டிப்பாக பிரசுரிக்க வேண்டும்.
கொழும்பு பிறைக்குழுவிலிருந்து தொடர்பு கொண்டு பல கேள்விகளைப் கேட்டார்கள். நீங்கள் எந்த இயக் கம் என்று கேட்டார்கள். நான் எந்த இயக்கமும் இல்லை. நான் முஸ்லிம் என்று பதில் சொன்னேன். அவர்கள் எனது கதையை நம்பவில்லை...என்னை புறந்தள்ளுகிறார்கள்..நிராகரிக்கிறார்கள் என்பதை அவர்களது பேச்சின் மூலம் உணர்ந்து கொண்டேன்.
நீங்கள் மூன்றாவது தடவையாக கிண்ணியாவில் பிறை கண்டதை நிராகரிக்கிறீர்கள் என்று நான் அவருக்கு கடைசியாகச் சொன்னேன். இதற்கு முன்னர் கிண்ணியா புஹாரி சந்தியிலும் காக்காமுனையிலும் பிறை கண்டிருக்கிறோம். ஆனால் அதனையும் உலமா சபையும் பெரிய பள்ளியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இம் முறை பெரியாற்றுமுனை, எகுத்தார் நகர், ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆப் பள்ளி, காக்காமுனை, சின்னம்பிள்ளைச் சேனை கடற்பரப்பு ஆகிய பகுதி களில் பிறையைக் கண்டும் அதனையும் ஏற்க மறுத்துவிட்டார்களே?
ஏ.எம்.எம்.நஸீர் (38) - நகைக்கடை உரிமையாளர்
ReplyDeleteநோன்பு துறந்துவிட்டு ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு மஃரிப் தொழச் சென்றேன். நேரம் 6.30 மணியிருக்கும் என நினைக்கிறேன்.
பள்ளிவாசல் பேஷ் இமாம் ரியாஸ் மௌலவிதான் என்னைக் கூப்பிட்டு பிறையைக் காட்டினார் மேலும் 10-15 பேர் அந்த இடத்தில் பிறையைப் பார்த்தார்கள். 6.30 முதல் 6.40 வரை பிறை தெரிந்திருக்கும். பின்னர் தொழப் போய்விட்டோம்.
எல்லோரும் பிறையைக் கண்டிருக்கிறார்கள். விடிந்தால் பெருநாள் தானே...கடையைத் திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்து நான் அவசர அவசரமாக சென்றுவிட்டேன்.
இருப்பினும் இஷா தொழுதுவிட்டு மீண்டும் ஒருமுறை ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளியில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம் என நினைத்து அங்கு போனேன். அங்கு பலர் கூடி நின்றார்கள். கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
பிறை கண்டவர்கள் முன்னுக்கு வாருங்கள் எனக் கூப்பிட்டார்கள். நானும் போனேன். 2 மேமன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தார்கள். அவர்கள் எங்கள் பெயர்களை எழுதிக் கொண்டார்கள். என்னுடன் பிறை கண்ட மேலும் 3 பேரை தனித்தனியாகக் கூப்பிட்டு விசாரித்தார்கள். எத்தனை மணிக்கு கண்டீர்கள்? எவ்வளவு உயரத்தில் கண்டீர்கள்? என்றெல்லாம் கேட்டார்கள். முருங்கை மரத்துக்கு மேலால் வெள்ளி ஒன்று இருப்பதைக் காட்டி அதற்குப் பக்கத்தில்தான் பிறை இருந்தது எனச் சொன்னேன்.
பிறையின் வடிவத்தைக் கீறிக் காட்டச் சொன்னார்கள். கீறியும் காட்டினேன்.
எங்களோடு தமிழில் பேசிவிட்டு கொழும்பில் உள்ளவர்களிடம் பாய் பாஷையில் பேசினார்கள். பின்னர் அவர்கள் போய்விட்டார்கள்.
இரவு 9 மணிக்கு பிறை கண்டதை ஊர்ஜிதப்படுத்தவில்லை எனவும் வெள்ளிக்கிழமையே பெருநாள் எனவும் அறிவிப்பு வந்தது. நான் மீண்டும் பள்ளிக்குப் போனேன். அங்கு மௌலவிமார்கள் இருந்தார்கள். ரபியூஸ் மௌலவி என்னிடம் போனைத் தந்து கொழும்பில் உள்ளவர்களிடம் பேசச் சொன்னார்.
பிறை கண்டீர்களா எனக் கேட்டார்கள். ஆம் என்றேன். பிறைக்கு அரபியில் என்ன சொல் என்று தெரியுமா எனக் கேட்டார்கள். இது ஒரு பொருத்தமற்ற கேள்வி என்றாலும் நான் 'ஹிலால்' என்று பதில் சொன்னேன். உங்களோடு அரபியில் பேசவும் நான் தயார். ஏனெனில் நான் மத்திய கிழக்கில் இருந்திருக்கிறேன் என்று சொன்ன போது மறுமுனையில் பேசியவர் '' சப்தம் போடாதீர்கள்.... யாரோ விஷயம் தெரிந்த ஆள் பேசுது'' என அவருக்கு அருகில் இருந்தவர்களிடம் சொல்வது எனக்குக் கேட்டது.
பின்னர் அவர் ''நீங்கள் பொய் சொல்ர மாதிர விளங்குது...இன்று பிறை தெரியாதே... வானிலை அவதான நிலையம் சொல்லியிருக்கிறதே'' என்று சொன்னார்.. என்னைப் பேசவிடாது அவர் பேசிக் கொண்டே சென்றார்....
அதற்கு நான்..'' வானிலை அவதானி நிலையம் 5 மணிக்கு மழை பெய்யும் என்று சொல்லும்...ஆனால் அந்த நேரத்தில் மழை பெய்யாது..இதுதானே வழக்கம்... அல்லாஹ் நாடினால் அவனது குதறத் மூலமாக எதையும் செய்வான்..'' என்று நான் சொன்னபோது போனை மௌலவியிடம் கொடுங்கள் என்றார்....
நீங்கள் இஸ்லாத்தில் எப்படி? உங்கள் குடும்பப் பின்னணி என்ன? என்றெல்லாம் கேட்டார்கள். அவர்களது கதைகள் எல்லாம் எம்மை நம்பாமலும் வானிலை எதிர்வுகூறல்களை நம்புவதாகவுமே இருந்தன. ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் நம்பத் தயாரில்லை என்றால் நாம் என்ன செய்வது?