Header Ads



அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) மோசடிக்காரர்களா..? ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 29)

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் நபிகளார் விட்டுச் சென்ற பதக் என்ற தோட்டத்தை மகள் பாத்திமா (ரழி) அவர் களிடம் கலீபா அபூபக்கர் (ரழி) ஒப்படைக் காமல் கையாடல் செய்து விட்டார். அவ ருக்கு பின் வந்த கலீபா உமர் (ரழி) அவர் களும் நபிகளாரின் சொத்தை பாத்திமா (ரழி)யின் குடும்பத்தாரிடம் கையளிக்காமல் சென்று விட்டார். எனவே அபூபக்கரும் உமரும் மோசடிக்காரர்கள் என்றே ஷீஆக்கள் நெடுங்காலமாக கொக்கரிக்கிறார்கள். ஸஹாபாக்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்து எது? பாத்திமா (ரழி) எந்த உரிமையில் அச்சொத்தை கேட்டார். நபிகளாரின் சொத்து வாரிசுமையில் சேர்க்கப்படுமா? அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) நபிகளாரின் சொத்தை என்ன செய்தார்கள்? யாரிடம் அச்சொத்தை கையளித்தார்கள்? எப்படி பராமரித்தார்கள்? என்பதை பின்வரும் நிகழ்ச்சி சரியான பாடத்தை கற்றுத் தருகிறது. 

ஷீஆக்களின் போலியான குற்றச் சாட்டுக்கும் அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) ஆகியோர் நபிகளாரின் குடும்பத்தாருடன் நடந்து கொண்ட கண்ணியமான உறவுக் கும் இந்த ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. 

முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மாலின் பின் அவ்ஸ் (ரழி) அவர் களிடம் சென்று அந்த (பதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:

கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன் நான் அமர்ந்திருந்தபோது (கலீபா) உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்| என்று சொன்னார். நான் அவருடன் சென்று உமர் (ரழி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமில்லாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு அமர்ந்தேன்.

அப்போது அவர்கள், மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிட்டு விடுங்கள் என்று சொன்னார்கள். நான், இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே என்று சொன்னேன். 

அதற்கு அவர்கள், நீங்கள் அதைக் கைவசமாக்கிக் கொண்டு சென்று அவர் களிடையே பங்கிடுங்கள் என்று (மீண்டும்) உமர் அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் அவர்களுடைய மெய்க் காவலர் யர்பஉ என்பவர் வந்து, உஸ்மான் (ரழி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரழி), ஸுபைர் (ரழி), ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார். 

உமர் (ரழி) அவர்கள், ஆம் என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி யளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து ஸலாம் சொல்லி அமர்ந்தார். பிறகு யர்பஉ சற்று நேரம் தாமதித்து வந்து, அலி (ரழி) அவர்களையும் அப்பாஸ் (ரழி) அவர்களையும் தாங்கள் சந்திக்க விரும்பு கின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ஆம் என்று அவ்விரு வருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதி யளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் ஸலாம் சொல்லி அமர்ந்தனர். 

அப்பாஸ் (ரழி) அவர்கள், இறை நம்பிக் கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவ ருக்கும் (அலிக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (பய்உ நிதியாகக்) கொடுத்த சொத்துக்கள் தொடர் பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். 

அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் குழு, ஷஷஇறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங் கள் என்று கூறியதும் உமர் (ரழி) அவர்கள், பொறுங்கள், எந்த அல்லாஹ்வின் கட்ட ளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக் கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின் றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வ தெல்லாம் தருமமே என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். 

அதற்கு அந்தக் குழுவினர், அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தனர். உடனே, உமர் (ரழி) அவர்கள், அலி (ரழி) அவர்களையும் அப் பாஸ் (ரழி) அவர்களையும் நோக்கி, அல் லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அவ்விருவரும் ஆம், அவ்வாறு சொல்லி யிருக்கிறார்கள் என்று பதிலளித்தனர். 

உமர் (ரழி) அவர்கள், அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்தச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூத ருக்க உரியதாக அல்லாஹ் ஆக்கியுள் ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை (என்று கூறிவிட்டு) அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்ட கங்களையும் அறப் போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர் களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்|| என்னும் (இந்த 59:6) இறைவசனத்தை ஓதினார்கள். 

தொடர்ந்து எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட் டார்கள். இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல் வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செல வை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செல விடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். 

இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். (இவ்வளவும் சொல்லி விட்டு,) அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன். இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம், (அறிவோம்| என்று பதிலளித்தார்கள். பிறகு அலி அவர்களிடமும் அப்பாஸ் (ரழி) அவர்களிடமும், உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன். நீங்கள் இதை அறிவீர்களா? என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். 

அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட் சிக்குப்) பிரதிநிதியாவேன் என்று கூறி அந்த செல்வத்தைத் தம் கைவசம் எடுத்துக் கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட தைப் போல் செயல்பட்டார்கள். அல்லாஹ் வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார் கள். நல்ல விதமாக நடந்து கொண்டார்கள். நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். 

பிறகு அபூபக்ர் (ரழி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் அபூபக்ர் (ரழி) அவர்களின் பிரதிநிதி யாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூபக்கர் (ரழி) அவர்கள் நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன். நல்ல விதமாக நடந்து கொண்டேன். நேரான முறையில் நடந்துகொண்டேன். உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். 

பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள். நான் உங்களிடம் ஒரு முறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்ட படி வந்தீர்கள். இருவரும் என்னிடம் தன் மனைவிக்கு அவரது தந்தையிடமி ருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பியபடி வந்தார்... அலி (ரழி) அவர்களைத்தான் அப்படிச் சென் னார்கள். 

நான் உங்கள் இருவரிடமும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான நாங்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களில் எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தருமமே| என்று சொன்னார்கள் என்றேன். எனினும், அதை உங்கள் இருவரிடமே கொடு த்து விடுவதுதான் உசிதமானது என்று எனக்குத் தோன்றியபோது நான், நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப் பாக இருக்க, ஷநீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்கர் (ரழி) அவர் கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன் படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன்| என்று சொன்னேன். 

அதற்கு நீங்கள் இருவரும், எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள்| என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்|| என்று சொன்னார். 

பிறகு (குழுவினரை நோக்கி), ஆகவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபநதனையின்படி அந்தச் சொத்தைக் கொடுத்து விட்டேனோ?|| என்று கேட்டார்கள். குழுவினர், ஷஆம் (கொடுத்து விட்டீர் கள்)| என்று பதிலளித்தனர். 

பிறகு அலி (ரழி) மற்றும் அப்பாஸ் (ரழி) ஆகியோரை நோக்கி, ஷஷநான் உங்கள் இரு வரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?|| என்று கேட்க, அவ்விருவரும், ஆமாம் என்றார்கள். உமர் (ரழி) அவர்கள், இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்திய மாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட் டேன். உங்கள் இருவராலும் அதைப் பரா மரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன் என்று சொன்னார்கள். (நூல்: புகாரி-3094)

நபிகளார் விட்டுச் சென்ற பதக் என்கிற தோட்டம். பெரிய சொத்தமாக கணிக்கப் பட்டது. நபிமார்கள் விட்டுச் செல்லம் சொத்து குடும்ப சொத்தாகாது. மாறாக பொதுச் சொத்தில் சேர்க்கப்படும் என்பதை நபித்தோழர்கள் அறிந்தே இருந்தார்கள். 

நபிகளாரின் இச்சொத்தை அபூபக்கர் (ரழி) அவர்களோ உமர் (ரழி) அவர்களோ கையாடல் பிண்ணவில்லை என்பதற்கு அன்றைக்கு வீழ்ந்த ஸஹாபா சமூகமே சாட்சி சொல்கிறது. அதுமட்டுமல்ல அச்சொத்தை பராமரிக்கும் பொறுப்பை கலீபா உமர் (ரழி) அவர்கள் நபிகளாரின் குடும்பத்தவர்களாக அலி (ரழி) அவர்களிடமும் அப்பாஸ் (ரழி) அவர்களிடமே ஒப்படைத்தார்கள் என்பதை இந்த செய்தி சான்று பகர்கிறது. 

அலி (ரழி) மற்றும் அப்பாஸ் (ரழி) ஆகிய இருவரும் அச்செத்தை பராமரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டபோது உமர் (ரழி) நீதிமாக நடந்து கொண்டவர்கள் என்பதையும் இச்செய்தி குறிப்பிடுகிறது. உண்மை இவ்வாறிருக்க அபூபக்கர் (ரழி)யும் உமர் (ரழி)யும் சோடி செய்து விட்டார்கள் என்று ஷீஆக்கள் கூறுவது மிகப் பெரிய அபாண்டமாகும். வீண் பழியுமாகும். 

இதில் மோசடி நடந்திருந்தால் ஸஹாபாக்கள் அதற்கு துணை நிற்பார்களா? அது மட்டுமல்ல அலி (ரழி) ஆட்சிக்கு வந்த பிறகு அச்சொத்தை குடும்ப சொத்தாக கையேற்றிருப்பார்களே. மோசடி நடந்திருந்தால் அதனை நிருபித்திருப்பார்களே! உண்மையில் ஷீஆக்கள் கூறுவது போல் எந்த அநீதியும் நடக்கவில்லை. ஸஹாபாக்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வே இவர்களை பொய் சொல்ல துண்டிவிட்டது. (நூல் புகாரி)

கேள்விகள் 30

கேள்வி –1  அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும், அலி (ரலி) அவர்களுக்கும் எந்த சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்தது.

கேள்வி –2 நபிமார்கடள் விட்டு சென்ற சொத்து குடுப்ப  சொத்தாக கணிக்கப்படுமா?

No comments

Powered by Blogger.